சனி, 21 மார்ச், 2015

வாழை மரத்தண்டில் வீட்டு தோட்டம் ..இயற்கை வேளாண்மை !

வாழை மரத்தண்டில் வீட்டு தோட்டம் ..இயற்கை வேளாண்மை !
தொட்டியில் வீட்டு தோட்டம் ,பைகளில் தோட்டம் ,பழைய குழாய்களில் தோட்டம் ,வைக்கோல் பேல்களில் தோட்டம் ,தேங்காய் நார் கழிவில் ,பிளாஸ்டிக் பாட்டிலில் மீள் சுழற்சி செய்த பொருட்களில் தோட்டம் இவற்றையெல்லாம் முயற்சித்த மக்கள் அடுத்து வாழை மரத்தின் தண்டு பகுதியிலும் தோட்டம் வளர்த்து இருக்கிறார்கள் .
உகாண்டா நாட்டில் வாழை மரம் அதிக விளைச்சல் தரும் பயிர் .
அந்நாட்டை சேர்ந்தவர்கள் அறுவடைக்கு பின் வெட்டி சாய்த்த தடித்த மரங்களில் குறுகிய வேர் வளர்ச்சி உள்ள தாவரங்களை வளர்த்து வெற்றி கண்டுள்ளனர் .வாழை மரத்தண்டில் செடி வளர்ப்பதால் ..அதிக அளவு தண்ணீர் தேவையில்லை மரத்தில் உள்ள நீர்த்தன்மை போதுமானது .
மேலும் வாழை மரத்தண்டில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன இவை வளரும் செடிகளுக்கு சிறந்த ஊட்டசத்து அளிக்கும் .
இதில் இயற்கையாகவே நீரை சேமித்து,உட் கிரகித்து வைக்கும் குணம் உள்ளதால் நீர் வீணாகாது ,வறண்ட இடங்கள்லயும் பயன்படுத்தலாம் .தோட்டமிட வீட்டில் இடம் இல்லை என்ற குறையுமில்லை
நம் நாட்டில் விலங்குகளுக்கு உணவாகி பின்னர் உபயோகமற்ற மீதமுள்ள வீணாகும் மரங்கள் இருந்தால் இப்படி முயற்சிக்கலாம் .
இதற்கு முதலில் படத்தில் உள்ளபடி கொலு படி போன்ற அமைப்பை பழைய ஏணி அல்லது மூங்கில் கட்டைகளை கொண்டு உருவாக்க வேண்டும் .குறுக்கும் நெடுக்குமாக கட்டைகளால் உருவாக்குவது சிறந்தது .
இது வாழை மரத்தினை தாங்குவதற்கு .தரையில் வெறும் மரத்தை படுத்தவாறு வைத்தால் பூஞ்சை பாக்டீரியா தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு .இதனை தடுக்கத்தான் இந்த படி போன்ற அமைப்பு .
பிறகு நன்கு தடித்த மர தண்டுகளை படி போன்ற அமைப்பில் கிடை மட்டமாக வைக்க வேண்டும் .
மரதண்டுகளில் மேலோட்டமாக கத்தியால் சிறு குழிகளை ..10 முதல் 15 செண்டி மீட்டர் அகலம் அளவு ஏற்படுத்தி அதில் சிறிதளவு கம்போஸ்ட் /கலப்பு உரம் இட்டு நிரப்ப வேண்டும் .ஒரு மரத்தண்டில் இரண்டு வரிசைகள் இடலாம் .
இம்முறைக்கு மண் தேவையில்லை தான் ஆனால் வளரும் செடிகலின் வேர்கள் கீழ்நோக்கி செல்லாதிருக்க சிறிது கம்போஸ்ட் இடுவது நல்லது .
குறுகிய வேர்கள் கொண்ட செடிகளை தேர்வு செய்து அதன் விதைகளை குழிகளில் இட்டு நிரப்ப வேண்டும் .
உதாரணத்துக்கு பசலை கீரை ,சாலட் வகைகள் ,இம்முறையில் வளர்க்க உகந்தவை .
இம்முறையில் மரங்களை இரண்டு அல்லது மூன்று முறை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம் .அதன் பிறகு இந்த மரங்களை துண்டாக வெட்டி இயற்கை உரத்திலும் பயன்படுத்தலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக