சனி, 21 மார்ச், 2015

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்
தொட்டியில் வெங்காய செடி வளர்த்தல் ...
தோட்டத்தில் பெரிய அளவு நிலப்பரப்பு இல்லாவிடினும் மண் ,பிளாஸ்டிக் தொட்டிகளில் மற்றும் உறை ,சாக்கு பைகளிலும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ,பூண்டு வளர்க்கலாம் .
1,வெங்காய விதைகள் தோட்ட மையத்தில் கிடைக்கும் அவற்றை வாங்கி seed starters என கடைகளில் விற்கும் சிறு சதுர வடிவ பெட்டிகள் அல்லது கம்போஸ்ட் தம்ளர்களில் விதை நட்டு வளர்க்கலாம் .நாற்று 5 இன்ச் உயரம் வளர்ந்ததும் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும் .
2, onion sets ...இது அனைத்து தோட்ட மையங்களிலும் கிடைக்கும் ..விதைகளை நட்டு அவை முதிர்ச்சி அடையுமுன் சிறு பல்ப் அளவு இருக்கும்போதே எடுத்து பதப்படுத்துவார்கள் ..இவை பின்பு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் .இதை நட வெங்காய செடி வளரும் .
3,வீட்டில் சில நேரம் சமையலுக்கு வாங்கிய வெங்காயம் முளைத்து துளிர் இலைகள் வளர ஆரம்பிக்கும் ..இதனை படத்தில் காட்டியுள்ளபடி கவனமுடன் வெட்டி பிரித்தெடுத்து தொட்டியில் நடலாம் .
தொட்டியில் நான் அவ்வாறு நட்ட வெங்காயம் நன்கு பிடித்து வளர்கிறது .
4,சிறிய வெங்காயமென்றால் (சாம்பார் ) ஒன்றினை தொட்டியில் நட்டால் போதுமானது அதிலிருந்து குறைந்தது 20 வெங்காயம் அறுவடை செய்யலாம் .
..ஒருவர் என்னிடம் துளிர் விட்ட முழு வெங்காயத்தை நிலத்திலோ தொட்டியிலோ நட்டால் செடி வளருமா என கேட்டிருந்தார் ..
ஆம் இலைகள் நன்கு செழித்து வளரும் .அந்த இலைகள் சூப் ,fried ரைஸ் மற்றும் பிற சமையலிலும் சேர்க்கலாம் .இம்முறையில் வெங்காயம் கிடைக்காது ஏனெனில் ஏற்கனவே முற்றிய வளர்ந்த வெங்காயத்தில் மீண்டும் வெங்காயம் உருவாகாது ..ஆனால் கொலாஜ் படத்தில் உள்ளவாறு வெட்டி நட்டால் வளரும் .
5,சிலர் வேர் தோன்றும் வெங்காய தலை பகுதியை மட்டும் வெட்டியும் வெங்காய அறுவடை செய்து வெற்றி கண்டுள்ளனர் (grow from scraps )..
தொட்டியில் வளர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை .
தொட்டியின் /கன்டேய்னரின் ஆழம் 10-15 இன்ச் அளவு இருக்க வேண்டும் .
அகலம் எவ்வளவு இருந்தாலும் நல்லது ..ஆனால் வளரும் வெங்காயங்களுக்கு இடையில் குறைந்தது 4 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் .
பிளாஸ்டிக் கண்டெய்னர் ,உறை ,சாக்கு பைகள் என்றால் கண்டிப்பாக அடிப்புறத்தில் துளைகள் நீர் வெளியேற வகை செய்ய வேண்டும் ..தொட்டி பைகளின் கீழ் நான்கு செங்கல் வைத்தால் நீர் வடிந்தோட வசதியாக இருக்கும் .
..
தொட்டிகளில் கம்போஸ்ட் தொழு உர மண் இட்டு நிரப்பி முற்றா வெங்காய பல்புகளை மேலாக நட்டு விட வேண்டும் குறைந்தது 7-8 மணிநேரம் சூரிய வெளிச்சம் தேவை .
தேங்காய் .கோகோ பீட் அதிக நீர் சேமிக்கும் குணமுள்ளது .
சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் மட்டுமின்றி ..முளைத்த பூண்டு பற்களையும் தொட்டியில் நடலாம் ..பூண்டு இலைகளும் வெங்காய தாள்களை போல சமையலில் பயன்படுத்துகிறார்கள் .
அறுவடை ..வெங்காயம் நிலத்தில் இருந்து வெளியே தெரியுமாறு வளர்ந்து பெரிதாக இருக்கும் இலைகளும் காய துவங்கும் நேரம் அறுவடை செய்யலாம் .நல்ல தட்பவெப்பம் இருக்கும்போது 45 முதல் 60 நாளில் முற்றிய வெங்காயம் தயாராக இருக்கும் .