வியாழன், 8 அக்டோபர், 2015

TIMES OF INDIA

நமது Kuppavandi.com பற்றி TIMES OF INDIA நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி

நாள் : 7-JUL-2015

LINK : http://timesofindia.indiatimes.com/city/trichy/MBA-graduates-start-online-scrap-collecting-service/articleshow/47965418.cms

MBA graduates start online scrap collecting service

TRICHY: As collecting scrap has become a lucrative business, four 30-year-old MBA graduates along with a couple of people have ventured into an online junk collecting service called Kuppavandi.com.

People who want to get rid of the trash can register on their website. A team of five is involved in collecting the trash from the users who register their requests online.

The idea to start Kuppavandi.com evolved in 2012 and it was established in 2013. The user-friendly website hosts attractive content to persuade its visitors to make money by throwing out junk like old newspaper, milk covers, broken things and plastic wastes, right at their doorstep.

The service is offered to both individuals and organisations. Apart from collecting scrap, the team offers services like electrical assistance, plumbing and carpentry.

The four - M Chandrakumar, B Sasikumar, S Sathish Kumar and S Kamaraj - hit on the idea of getting into scrap collection business when they met in Chennai.

Kamaraj said though it was difficult to collect funds initially, things started shaping up when the business plan started paying off a few months back.

He added that nowadays, as residents are finding it difficult to sell their old house wares at shops, the idea of picking the scrap at the doorstep has developed.

However, winning the people's trust was quite a task for the team. Sathish Kumar said it was difficult during the start as residents were quite apprehensive about the idea.

The scrap is collected using a small pickup vehicle and loaded at the city's warehouse. From there, it is later dropped at the respective points.

சனி, 21 மார்ச், 2015

சோம்பின் பயன்கள் ......

சோம்பின் பயன்கள் ......
ஆடவர் ,பெண்டிர் இருவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு காரணம் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, முறையற்ற உணவு பழக்க வழக்கம் ,நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல் ,வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் துரித உணவை வாங்கிச் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
மேலும் பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, (மிக்சி கிரைண்டர் ,மைக்ரோவேவ் )ஆகியவற்றின் பங்கும் உண்டு.
போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதுதவிர, காலை பிள்ளைகளை பள்ளிக்கு /கல்லூரிக்கு அனுப்பியது முதல் மாலை அவர்கள் வீடு திரும்பும் வரையிலும் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது..இதை போன்ற வேண்டா பழக்கங்களால் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்பும் ஊளைசதையும் சேரும் அதனால் பல உடல் உபாதைகள் ஏற்பட வழி வகுக்கும் ....இப்படி அதிகப்படியாக சேர்த்த கொழுப்பை கரைக்க சோம்பு பயன்படுகின்றது .
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் சீன ,அரேபிய ,இந்தியர்களால் சமையல் மற்றும் மருந்து மூலிகையாக தொன்று தொட்டு
பயன்படுத்தப்பட்டு வருகின்றது .
வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது.
பெரும்பாலான உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பின் பில்லுடன் சிறிது சோம்பும் வழங்கப்படும் ..இது வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானத்துக்காக தருவார்கள் .
தாகத்திற்காக குடிக்கும் தேவையற்ற அதிக இனிப்பு சேர்த்த பானங்களை தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள ஊளை சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.கண்ட நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடுவதை மற்றும் அளவற்ற பசியை சோம்பு குறைக்க உதவுகின்றது .
சோம்பில் உள்ள ஒரு வகை எண்ணெய் குடல் இரைப்பை பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு வாய்வு கோளாறு வயிறு உப்பசம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உணவிற்கு பின்னர் இந்த தேநீரை அருந்துவது சிறந்த நலன் பயக்கும் .
வயிற்றுபிடிப்பு அஜீரணம் போன்ற தொல்லைகளுக்கு சோம்பு சிறந்த நிவாரணி .
சோம்பில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடலுக்கு மிக சிறந்தது .
அதிகப்படியான நச்சு நீர் உடலில் சேர்வதை சோம்பு தேநீர் அருந்துவதன் மூலம் வெளியேற்றலாம் .
சிறுநீரகங்களுக்கு மிக நல்லது சோம்பு தேநீர் .தொண்டை புண் ,தடுமல் இருமல் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி .
இரத்த அழுத்தை சீர் செய்ய வல்லது சோம்பு
.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது சோம்பு தேநீர் .
புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது ,வயிற்று போக்குக்கு சிறந்த மருந்து ,
சோம்பு சிறந்த மலமிளக்கி ,இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது ,
பார்வை குறைபாடுகள் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் சிறந்த மருந்து சோம்பு
சிறு பிள்ளைகளுக்கு உணவு செரிமானம் ஆகாமல் வயிறு வழியால் அவதிப்படும்போது சோம்பு தேநீர் சிறந்த பலன் தரும் .
சில பிள்ளைகளுக்கு விக்கல் அடிக்கடி வந்து தொல்லை தரும்அப்போது இந்த தேநீரை கொடுக்க உடனடியாக விக்கல் நிற்கும் . இரத்த சோகைக்கு சிறந்த மருந்து சோம்பு .குடலில் உள்ள சிறு புழுக்களை சோம்பு அழிக்க வல்லது .
வாயின் உட்புறம் ஏற்படும் சிறு புண்களை குணமாக்கும் .
சோம்பிலுள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலுக்கு நலம் பயக்கும்
கர்ப்பிணி பெண்கள் சோம்பு தேநீரை அருந்த வேண்டாம் .தவிர்க்கவும் .
pms போன்ற மாதவிடாய் பிரச்சினைக்கு மெனோபாஸ் ,மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் சோம்பு தேநீரை அருந்திவர நல்ல பலன் கிடைக்கும் .
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஒரு கோப்பை சோம்பு தேநீரை அருந்தி வர பால் சுரக்கும் .மேலும் கருப்பையிலுள்ள வேண்டா கழிவுகள் நீங்கும் .இவ்வளவு மகிமை நிறைந்த சோம்பினை தேநீராக மற்றும் அதன் கீரையை சமைக்கும்போதும் உணவில் சேர்த்து கொள்வது மிக நல்லது .
சோம்பு தேநீர்
இப்பொது அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் சோம்பு தேநீர் பாக்கெட்டுகளில் விற்பனையாகின்றது .
நாமே வீட்டிலும் எளிய முறையில் சோம்பு தேநீர் தயாரிக்கலாம் .
மூன்று கோப்பை நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும் .ஒரு மேசைக்கரண்டி முற்றிய சோம்பு விதைகளை எடுத்து சற்று இடித்து கொதிநீரில் போட வேண்டும் பிறகு அடுப்பை அணைத்து பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்
ஏழெட்டு நிமிடம் கழித்து அந்நீரை வடிகட்டி அருந்த வேண்டும் 

கொத்துமல்லி மருத்துவபயன்கள்

கொத்துமல்லி மருத்துவபயன்கள்
~~~~~~~~~~
மூலிகையின் பெயர் :- கொத்துமல்லி
தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)
பயன் தரும் பாகங்கள் :- முழு தாவரம்.
வளரியல்பு :- கொத்துமல்லி நன்செய்,, புன்செய் நிலங்களில் முக்கியமாக கரிசல்மண்,, செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இதன் தாயகம் தென் ஐரோப்பா,, மற்றும் வட ஆப்பிரிக்கா, தென் மேற்கு ஆசியா ஆகும். பின் இது மத்திய ஆசியா, மெடட்டரேனியன், இந்தியா, தெற்கு ஆசியா, மெக்சிகன் டெக்கான், லேட்டின் அமரிக்கா, போர்ச்சுகஸ், சைனா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் ஸ்கேண்டிநாவின் ஆகய நாடுகளுக்குப் பரவிற்று. இதன் தண்டுகள் மென்மையாக இருக்கும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்து நீண்ட முப்பிறிவாக பசுமையாக நறுமணத்துடன் இருக்கும். இந்த இலையில் B, B12 & C வைட்டமின்கள் உள்ளது. சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள். இதன் விட்டம் 3 – 5 மில்லி இந்த விதையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் ஆனால் குறைந்த சதவிகிதம் தான் கிடைக்கும். இந்த எண்ணெய் மருத்துவ குணம் உடையது. இதில் வையிட்டமின் A,C & k உள்ளது. இதில் கேல்சியம், இரும்பு, மெங்னீசியம், பொட்டாசியம், ஜிங் உள்ளது. தோல் வியாதிய்யைக் குணப்படுத்தும். இது கார்ப்பு சுவையுடையது. தனியாவை வணிக ரீதியாகப் பயிரிட அந்த நிலத்தை தொழு உரமிட்டு நன்கு உழவேண்டும். காயவைத்து கட்டிகள் இல்லாமல் சமப்படுத்த வேண்டும். பின் தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். அதன் பின் சமப்படுத்தும் மரத்தில் சமஅளவாக முளைக்குச்சிகள் பொருத்தி ஏர் போல் ஒரு முறை ஓட்ட வேண்டும். பின் வேண்டுமென்றால் பாத்தி பிடித்துக் கொள்ளலாம். அதன் பின் தண்ணீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாக இருந்தால் மழை வரும்போது விதைகள் முளைத்ததுக் கொள்ளும். தண்ணீர் பாச்சும் போது ஒரு வாரத்தில் விதைகள் முழைக்க ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாச்ச வேண்டும். 90 நாட்க்களில் பூத்துக் காய்க்க ஆரம்பிக்கும். அதன் பின் தண்ணீர் பாச்சக்கூடாது. அதன் பின் செடிகளைப் பிடுங்கி சுத்தமான களத்தில் நன்கு காயவைத்து லேசாக தடியால் அடித்துத் தூற்றி எடுத்து தனியாவை ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டுவார்கள். ஆனால் கொத்துமல்லி இலை சமையலுக்கு மிகவும் தேவைப் படுவதால் வீட்டுத் தோட்டத்திலும் மாடித் தோட்டத்திலும் தேவைக்கு ஏற்ற வாறு கீரையாகப் பயிர் செய்வார்கள்.
மருத்துவப்பயன்கள் :- சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி, எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல், செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை, தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கல்லீரல் பலப்படுத்த, இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு, பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.
கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.
கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.
கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..


தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் பாதி அளவிற்கு மட்டும் மண் + காய்ந்த இலை,
தழை, மண்புழு உரம் கலந்த கலவையை போடவேண்டும்.
நன்றாக விளைந்த உருளைகிழங்கை பாதியாக வெட்டி , வெட்டிய பாகம் கீழே இருக்குமாறு
மண்ணில் ஊன்றி வைக்கவும்.
செடி ஓரளவு வளர்ந்ததும் மேலும் கொஞ்சம் மண்ணை போடவேண்டும்.
முதலில் மொத்தமாக போடாமல் இவ்வாறு செய்வதால் கிழங்கு நன்கு திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மற்றொரு முறை ....
வீட்டில் வாங்கி வைத்த கிழங்குகள் சில நேரம் முளை விட்டிருக்கும் அல்லது விதைக்கவென நாமே chitting முறையில் முளைக்க வைக்கலாம் ..
நன்கு முற்றிய கிழங்குகளை முட்டை வைக்கும் கார்ட்போர்ட் முட்டை பெட்டியில் செங்குத்தாக நிற்க வைத்து ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும் ,
இவை தானாக சில நாளில் முளைக்கும் (1.5 செண்டி மீட்டர் அளவு வளர்ந்துவிடும் ) ...
அப்படி முளைத்த கிழங்குகளை கோணிப்பை /கருப்பு பாலித்தீன் பை போன்றவற்றில் கலப்பு உர மண்
நிரப்பி வளர்க்கலாம் .
பைகளில் அடிப்பாகத்தில் நீர் வெளியேற துளைகள் இட வேண்டும் ..
பையில் பாதி அளவுக்கு சுமார் 30 செ.மீ அளவுக்கு கலப்பு உரமண்ணை இட்டு அதில் முளைவிட்ட கிழங்குகளை புதைத்து அதன்மேல் மீண்டும்கலப்பு உர மண்ணால் மேலும் 15 செ .மீ உயரம் வரை நிரப்பி மூட வேண்டும்
மேற்பகுதி பையின் விளிம்பு பாகத்தை வெளிப்புறமாக மடித்து விட வேண்டும் .
இந்த பையை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில நான்கு செங்கல்களின் மேல் வைத்து ,தினமும் நீர் ஊற்றி
வர வேண்டும் .
நத்தை போன்றவை செடியை அண்டாதிருக்கவும் நீர் வெளியேற வசதியாகவும் இந்த செங்கல்கள் பயன்படும் .
சுமார் மூன்று வாரத்தில் இலை முளைத்து செடி வளர ஆரம்பிக்கும் .
அவை மேலும் 15 செண்டி மீட்டர் உயரம் வளர்ந்ததும் பையின் மேற்பக்கத்தை உட்புறம் பிரித்து விட்டு மேலும் சிறிது கலப்பு உரத்தை இட வேண்டும் .
செடி வளர வளர பையை விரித்து விட வேண்டும் .
இரண்டு மாதத்தில் பூ விட துவங்கும் ,இலைகளும் வாட ஆரம்பிக்கும் இது அறுவடைக்கு உகந்த நேரம் .
இப்போது கிழங்கை மண்ணிலிருந்து அறுவடை செய்து எடுக்கலாம் .
பைகளில் வளர்க்கும்போது உருளைகிழங்கு தேவையற்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து
தவிர்க்கப்படுகின்றது .
பத்து கிலோ அரிசி கோணிப்பையில் 5 இலிருந்

கடுக்காய்

கடுக்காய் - மருத்துவ பயன்கள்
~~~~~~~
மூலிகையன் பெயர் -: கடுக்காய்
தாவரப்பெயர் –: TERMLNALIA CHEBULA.
தாவரக்குடும்பம் - : COMBRETAECEAE.
வேறு பெயர்கள் –: அமுதம்.
வகைகள் –: ஏழு வகைப்படும். அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.
பயன் தரும் பாகங்கள் –: காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.
வளரியல்பு –: கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாத த்தில் துளிர் விடும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும். நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது. விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன. மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன. புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைக்கலாம், கெடாது.
கடுக்காயின் மருத்துவப் பயன்கள் –: கடுக்காயில் ஆறு சுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும். காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள். கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன் படுத்திகிறார்கள். இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.
கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும் புதினாக்கீரை

ரத்தத்தை சுத்திகரிக்கும் புதினாக்கீரை

நல்ல ரத்த உற்பத்திக்கும், ரத்த சுத்திகரிப்புக்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது புதினாக்கீரை. ஒரு வகையான
நல்ல மணமுடைய இந்தக்கீரையை மணத்துக்காகவும் சுவைக்காகவும் குழம்புகளில் சேர்ப்பதுண்டு. புதினாக்கீரையை துவையலாகச் செய்து சாப்பிட்டால் பலவிதமான வயிற்றுக்கோளாறுகள் அகலும். கடுமையான வயிற்றுபோக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு.
கர்ப்பிணிபெண்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் புதினாவை பயன்படுத்துவது உண்டு. பழுப்பு சர்க்கரையுடன் காடி சேர்த்து பாகாகக் காய்ச்சி அதனுடன் புதினா இலைச் சாற்றை கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி வாந்தி ஏற்படும் கர்ப்பிணிகளுக்கு இந்த பாகில் இரண்டொரு துளி நாக்கில் விட்டு சப்பச்செய்தால் வாந்தி நின்று குணம் தெரியும்.
புதினாக்கீரையை கஷாயம் செய்தும் பயன்படுத்தலாம். புதினா இலைகளை சுத்தம் செய்து நைத்து நீர் விட்டு நீரை பாதியளவு சுண்டக்காய வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். சிறு குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்தால் இந்தப் புதினா கஷாயத்தில் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.
வல்லாரை புதினா சாதம்
தேவையான பொருட்கள்
வல்லாரைக்கீரை-சிறியகட்டு
புதினா-1கட்டு
புளி- பாக்கு அளவு
காய்ந்தமிளகாய்-6
கடுகு-2டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டீஸ்பூன்
எண்ணெய்- 2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எப்படி சமைப்பது?
புதினா வல்லாரை கீரைகளை உதிர்த்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, மூன்றையும் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். இவற்றோடு புளி, உப்பு, புதினா வல்லாரைக்கீரைகளையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். சூடான சாதத்தோடு இந்த விழுதைக் கலந்து விட்டால் சுவையான ருசியான வல்லாரை புதினா சாதம் தயார். உப்பு, புளி உரைப்போடு கூடிய இந்த சாதத்துக்கு தொட்டுகொள்ள மொறுமொறு வத்தல் பொரித்துக்கொண்டால் பிரமாதமாக இருக்கும்
புதினா வல்லாரைகீரையின் பயன்கள்
ருசியின்மை, வாந்தி, மற்றும் உஷ்ண நோய்களை தீர்க்கும். வாயு பிரச்சனைகளை போக்கும். மலச்சிக்கல் அகற்றும். நினைவாற்றலுக்கு அதிக விசேஷமான கீரையாகும்.

வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரியுமா ?

வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரியுமா?
~~~~
வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.
வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும். தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.
வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
வேப்பங்கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் சீக்கிரம் காயம் ஆறும். வேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு கோலி அளவு எருமை தயிரில் மூன்று நாட்கள் உள்ளுக்குள் உட்கொண்டு வந்தால்தொண்டைக்கறமல் குணமாகும். வேப்பம் பூ, மிளகு, இவை இரண்டையும் சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும். வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுகி வந்தால் முகம் பளபளப்பு அடையும். மழைக்காலங்களில் ஈக்கள் தொல்லை அதிகமாகும்.
ஈக்கள் தொல்லையை விரட்ட வேப்பிலையை கசக்கி டைனிங்டேபிளில் வைத்து விட்டால் ஈக்கள் வராது.மாத விலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் 3 கொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும் முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதி படுபவர்கள் இந்த வேப்பிலை மஞ்சளை நன்கு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.
இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.
இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்

வெந்தயம் மருத்துவ பயன்கள்

வெந்தயம் மருத்துவ பயன்கள்


சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.
* ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்
* வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது.
* இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
* இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.
* வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும்.
* இவ்விதைகளை உட்கொள்ளும் நோயாளிகளில் சிலருக்கு ஆரம்பத்தில் வயிற்றுபோக்கு மற்றும் குடலில் வாயு உற்பத்தியாவது அதிகமாக காணப்படும்.
* வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரைநோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும்। இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம்.
*ஆயினும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும்.
சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.

குளிர்ச்சி தரும் வேப்பம்பூ

குளிர்ச்சி தரும் வேப்பம்பூ
வேப்பமரம் நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மூலிகை செடியாக கருதபடுகின்றது. இந்த மூலிகை பல நோய்களுக்கு நிவாரணியாகவும் சுகாதார நலன்களை வழங்ககூடியதாகவும் உள்ளது.. கத்திரி வெயில் சுட்டெரிக்கிறதால வெப்பத்துல இருந்து தப்பிக்க குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வது ரொம்ப அவசியம்.
தர்பூசணி, இளநீர் வரிசையில வேப்பம்பூவும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு தாங்க. வேப்பம்பூவை பொடியாக்கி ரசம், பச்சடி வைத்து சாப்பிடலாம். கண் பிரச்சனைகளான மாலை கண் நோய், விழி வெப்பமண்டல அழற்சி போன்ற கண் பிரச்சனைகளை வேம்பு பயன்படுத்தி தடுக்கலாம். தோல் அழற்சி பிரச்சனைகளுக்கு வேம்பு இலைகளை அரைத்து சாறாக பிழிந்து அரிப்பு உள்ள இடத்தில் தடவினால் அலர்ஜி நீங்கிவிடும்.
உங்களுக்கு சருமநோய் தொற்று இருப்பின் வேப்பிலை குளியல் எடுத்து கொண்டால் சரும பிரச்சனைகளை தடுக்க முடியும். அஜீரணக்கோளாறு, வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் மலச்சிக்களால் அவதி படுபவர்களுக்கு வேம்பு தேநீர் வைத்து கொடுத்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் அளவுக்கு அதிகமாக புளிப்பு தன்மை, மேல் இரைப்பை வலி இருப்பின் அதை சரிசெய்ய வேம்பு பரிந்துரைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இரத்த சுத்திகரிப்பு நச்சு பொருட்களை அழிக்ககூடியதாகவும் இருக்கிறது..
வாயில் ஏற்படக்கூடிய பற்சிதைவு, மூச்சு பிரச்சனை, புண், ஈறுகளில் ரத்தம், போன்றவற்றை வேம்பு கொண்டு சரி செய்திடலாம். பாலிசாக்கரைடுகளை அதிகம் கொண்டுள்ள வேம்பு புற்றுநோய் கட்டிகள், லிம்ஃபோசைடிக் லுகேமியாவை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மூட்டுவலி, தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால் மூட்டு வலி எளிதில் குணமாகும். பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள், மற்றும் ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் வேம்பு இலைகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். ஏனெனில் வேம்பு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க கசப்பு சுவை கொண்ட அட்ரினலின் மற்றும் குளுக்கோஸை தூண்டுகிறது மேலும் இரத்தத்தில் உள்ள கூடுதல் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வேம்பினை வாரத்தில் ஒரு நாள் வேகவைத்தோ அரைத்தோ எடுத்துகொள்ளலாம். வேப்பம் பூ ரசம் எவ்வாறு செய்வது.
துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, புளி - நெல்லிக்காய் அளவு, மஞ்சள் தூள், பெருங்காயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிது, உப்பு, நெய் - தேவைக்கேற்ப. பொடிப்பதற்கு: மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வேப்பம் பூ - 2 டேபிள் ஸ்பூன், வெல்லம் - 1 நெல்லிக்காய் அளவு.
புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு (வெல்லம் கரைத்தது), பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கரைத்து, பொடித்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் பருப்புத் தண்ணீர் சேர்த்து, நுரைத்து வரும் போது, நெய்யில் கடுகு, வேப்பம் பூ சேர்த்துப் பொரித்து ரசத்தில் சேர்க்கவும். இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
வேப்பம்பூ ரசம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பார்வை சம்பந்தமான வியாதிகள் நிவர்த்தியாகும்.உடலை உஷ்ணத்தில் இருந்து காப்பாற்றும். ரத்த ஓட்டம் சீராகும். வேப்பம்பூ பச்சடி சாப்பிட்டால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதனால உங்க வீட்டுல வேப்பம்பூ ரசம், பச்சடி வச்சி அசத்துங்க.

லெமன் கிராஸ் எனும் எலுமிச்சைப்புல்

லெமன் கிராஸ் எனும் எலுமிச்சைப்புல் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மூலிகை ...
இது பெரும்பாலும் ஆசிய சமையலில் வாசனைக்காக பயன்படுத்துகிறார்கள் .
இதன் தண்டு பகுதியை வெட்டி சமைக்கும்போது மற்றும் தாளிதம் செய்யும்போது கரண்டிக்கு பதில் இதனை பயன்படுத்தி காய்கறிகளை வதக்கினால் மிக அருமையாக இருக்கும் .
இந்த எலுமிச்சை புல்லில் இருந்து தயாரிக்கப்படுவதே லெமன் கிராஸ் எண்ணெய் .இது நமக்கோ அல்லது சுற்று சூழலுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது .
இந்த புற்களை தொட்டியில் வளர்த்து வர அந்த பகுதியில் கொசு போன்ற பூச்சி தொல்லைகள் இராது
லெமன் கிராஸ் சிறந்த கொசு விரட்டி .
வைட்டமின்கள் A மற்றும்C,ஃபோலேட், மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மாங்கனீசு சத்துக்கள் இதில் உள்ளன .
இதன் ஆன்டி செப்டிக் குணம் பாக்டீரியா பூஞ்சை காளான் ஆகியவற்றை எதிர்க்கும் ஆற்றல் பெற்றவை .
செரிமானத்துக்கு மிக சிறந்தது
குடல் பகுதியை சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது .
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது ,
இதில் உள்ள இரும்பு சத்து இரத்த சோகை வராமல் தடுக்கிறது .
இந்த லெமன் கிராஸ் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த தாவரம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
இதன் நச்சு நீக்கும் குணங்கள் (Detoxifying:) . கல்லீரல், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, கணையம் ஆகிய உறுப்புக்களை சுத்திகரிக்க உதவும் மற்றும் இரத்த ஓட்டம் சீர்படுத்தப்படும் .
அதிகப்படியான கொழுப்பை குறைத்து உடல் எடையை சீர்படுத்த உதவுகிறது
சரும ஆரோக்கியத்துக்கும் லெமன் கிராஸ் பயன்படுகிறது .
இந்த லெமன் கிராசை தேனீர் செய்துஅருந்திவர நல்ல பலன் கிடைக்கும் .
சமைப்பதினால் இதன் தாவர சத்துக்கள் அழியாது ஆனால் அதன் நற்குணங்கள் அனைத்தும் உடலுக்கு கிரகிக்கப்படும் என்கின்றார்கள் .

வாழை மரத்தண்டில் வீட்டு தோட்டம் ..இயற்கை வேளாண்மை !

வாழை மரத்தண்டில் வீட்டு தோட்டம் ..இயற்கை வேளாண்மை !
தொட்டியில் வீட்டு தோட்டம் ,பைகளில் தோட்டம் ,பழைய குழாய்களில் தோட்டம் ,வைக்கோல் பேல்களில் தோட்டம் ,தேங்காய் நார் கழிவில் ,பிளாஸ்டிக் பாட்டிலில் மீள் சுழற்சி செய்த பொருட்களில் தோட்டம் இவற்றையெல்லாம் முயற்சித்த மக்கள் அடுத்து வாழை மரத்தின் தண்டு பகுதியிலும் தோட்டம் வளர்த்து இருக்கிறார்கள் .
உகாண்டா நாட்டில் வாழை மரம் அதிக விளைச்சல் தரும் பயிர் .
அந்நாட்டை சேர்ந்தவர்கள் அறுவடைக்கு பின் வெட்டி சாய்த்த தடித்த மரங்களில் குறுகிய வேர் வளர்ச்சி உள்ள தாவரங்களை வளர்த்து வெற்றி கண்டுள்ளனர் .வாழை மரத்தண்டில் செடி வளர்ப்பதால் ..அதிக அளவு தண்ணீர் தேவையில்லை மரத்தில் உள்ள நீர்த்தன்மை போதுமானது .
மேலும் வாழை மரத்தண்டில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன இவை வளரும் செடிகளுக்கு சிறந்த ஊட்டசத்து அளிக்கும் .
இதில் இயற்கையாகவே நீரை சேமித்து,உட் கிரகித்து வைக்கும் குணம் உள்ளதால் நீர் வீணாகாது ,வறண்ட இடங்கள்லயும் பயன்படுத்தலாம் .தோட்டமிட வீட்டில் இடம் இல்லை என்ற குறையுமில்லை
நம் நாட்டில் விலங்குகளுக்கு உணவாகி பின்னர் உபயோகமற்ற மீதமுள்ள வீணாகும் மரங்கள் இருந்தால் இப்படி முயற்சிக்கலாம் .
இதற்கு முதலில் படத்தில் உள்ளபடி கொலு படி போன்ற அமைப்பை பழைய ஏணி அல்லது மூங்கில் கட்டைகளை கொண்டு உருவாக்க வேண்டும் .குறுக்கும் நெடுக்குமாக கட்டைகளால் உருவாக்குவது சிறந்தது .
இது வாழை மரத்தினை தாங்குவதற்கு .தரையில் வெறும் மரத்தை படுத்தவாறு வைத்தால் பூஞ்சை பாக்டீரியா தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு .இதனை தடுக்கத்தான் இந்த படி போன்ற அமைப்பு .
பிறகு நன்கு தடித்த மர தண்டுகளை படி போன்ற அமைப்பில் கிடை மட்டமாக வைக்க வேண்டும் .
மரதண்டுகளில் மேலோட்டமாக கத்தியால் சிறு குழிகளை ..10 முதல் 15 செண்டி மீட்டர் அகலம் அளவு ஏற்படுத்தி அதில் சிறிதளவு கம்போஸ்ட் /கலப்பு உரம் இட்டு நிரப்ப வேண்டும் .ஒரு மரத்தண்டில் இரண்டு வரிசைகள் இடலாம் .
இம்முறைக்கு மண் தேவையில்லை தான் ஆனால் வளரும் செடிகலின் வேர்கள் கீழ்நோக்கி செல்லாதிருக்க சிறிது கம்போஸ்ட் இடுவது நல்லது .
குறுகிய வேர்கள் கொண்ட செடிகளை தேர்வு செய்து அதன் விதைகளை குழிகளில் இட்டு நிரப்ப வேண்டும் .
உதாரணத்துக்கு பசலை கீரை ,சாலட் வகைகள் ,இம்முறையில் வளர்க்க உகந்தவை .
இம்முறையில் மரங்களை இரண்டு அல்லது மூன்று முறை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம் .அதன் பிறகு இந்த மரங்களை துண்டாக வெட்டி இயற்கை உரத்திலும் பயன்படுத்தலாம் .

மூலிகை ஸ்பைரல் /சுருள் கூம்பு வடிவ மூலிகை தோட்டம் .

மூலிகை ஸ்பைரல் /சுருள் கூம்பு வடிவ மூலிகை தோட்டம் .
வீட்டில் மூலிகை தோட்டம் போட அதிக இடம் மற்றும் சூரிய ஒளி இல்லை என்பவர்கள் இந்த மூலிகை ஸ்பைரல் முறையில் சிறியஇடத்தில தேவையான மூலிகை செடிகளை நம் வீட்டிலேயே வளர்க்கலாம் .ஒரு சிறிய இடத்தில பல்வேறு குணங்கள் மற்றும் வளரும் தன்மையுடைய மூலிகை செடிகள் வளர்கின்றன.
இது இயற்கையோடு ஒட்டி அமைந்த ஒரு அமைப்பு .இதே போலதான் நத்தையின் கூம்பு சுருள் வடிவமானது இடத்தை சேமிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது .
நீரை சேமிக்க மற்றும் மகரந்த சேர்க்கைக்குதவும் பூச்சியினங்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,
இந்த அமைப்பின் வடிவம் மையத்தை நோக்கி சுழல் போன்ற உயரமாக முடிக்கப்பட்ட ஒரு கூம்பு வடிவம் கொண்டது .. இத்தோட்டத்தில் சுற்றி ஓரங்களில் சுருள் வடிவில் அமைக்கப்பட்டுள்ள செங்கல் சுவர்களின் நிழலில் வெயில் அதிகம் தேவைப்படாத செடிகள் வளரும் .செங்கற்கள் அதிக வெயில் தாக்காமல் அத்தகைய மூலிகை செடிகளை காக்கும் .மேலும் இக்கற்கள் அதிக சூட்டினை உள் இழுத்து தக்க வைத்து இரவு நேரத்தில் செடிகளுக்கு அந்த சூட்டை தந்து அதிக குளிரிலிருந்து காக்கின்றன .
அதிக சூரிய ஒளி தேவைப்படும் செடிகள் மேல்புறத்தில் சுருள் சுழலின் உச்சியில் நடப்படுகின்றன .மேலும் தண்ணீர் அதிகம் தேவைப்படாத மூலிகை செடிகள் உச்சியில் நடப்படுகின்றன அதிக நீர் தேவைப்படும் தாவரங்கள் கீழ்பகுதியில் வளர்கின்றன சுருள் அமைப்பில் நீர் மேலிருந்து வடிந்து அனைத்து செடிகளையும் நனைத்து வழிந்து கீழே இறங்கும் வண்ணம் உள்ளது திருகு சுருள் போன்ற இவ்வமைப்பு .. .விரும்பினால் இறுதியாக வடிந்து ஓடும் நீரை சிறு குளம் போல அமைக்க தவளை போன்ற உயிரினங்கள் வளர இடம் தரலாம் அவை வேண்டாத பூச்சிகளை உண்டு வாழும் .
இவ்வமைப்பு சிறிய இடத்தில உள்ளதால் பராமரிக்க மற்றும் அறுவடை செய்ய சுலபமாக இருக்கும் .அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட லான்ட்ஸ்கேப்பிங் செய்பவர்களிடம் இத்தகைய அமைப்பை உருவாக்க சொல்லலாம் .
basil /துளசி ,coriander /கொத்தமல்லி ,தக்காளி oregano ,ஓமம் ,ஓமவல்லி ,வெந்தயக்கீரை ,பூண்டு ,புதினா ,வெங்காயத்தாள் ,ரோஸ் மரி ஆகியவற்றை இந்த தோட்டத்தில் வளர்க்கலாம் .அத்துடன் ஒன்றிரண்டு சாமந்தி செடிகளும் வளர்க்க அவை மகரந்த சேர்க்கைக்கு சிறந்த காரணிகளாக உதவும் ..

வைக்கோல் கட்டு /பொதியில் காய்கறி தோட்டம்

வைக்கோல் கட்டு /பொதியில் காய்கறி தோட்டம்
Straw Bale Gardening .
மாடித் தோட்டம் ,கன்டெயினர் தோட்டம் போல இது straw bale /வைக்கோல் மூட்டை தோட்டம்
நம் நாட்டில் கிராமப்புறங்களில் முன்பு பல வருடங்கள் முன்பு பெரிய போர் காணப்படும் வைக்கோலை மூட்டையாக வைக்கோல் போறாக கட்டிவைப்பார்கள் .இப்போ எப்படின்னு தெரியலை .
வெளிநாடுகளில் வைக்கோலை பேல் ஆக தட்டி உருட்டி வைக்கிறார்கள் பிறகு தேவைப்பட்ட அளவு சதுரங்களாக வெட்டி விற்பார்கள் ..நம் தமிழ் படங்களில் வெளிநாட்டு கனவு பாடல் சீனில் கண்டிப்பாக இந்த வைக்கோல் பேல் /straw bale ஒரு நிமிடமாவது வந்து போகும்
அமெரிக்காவை சேர்ந்த Joel Karsten என்பவர் இந்த வைக்கோல் மூட்டையிலும் தோட்டம் வளர்த்து காண்பித்திருக்கின்றார் .கோதுமை /ஓட்ஸ் /ரை /பார்லி இவற்றின் வைக்கோல் தான் சிறந்ததாம் ,
இந்த வைக்கோல்பேலை வெட்டி கயிற்றால் கட்டி அதனுள் சிறிது கலப்பு உர மண் நிரப்பி செடிகளை வளர்ப்பது தான் straw bale gardening .இதில் வளரும் இடமும் மீடியமும் தொட்டியும் கலனும் அனைத்துமே வைக்கோல்தான் .
தரமில்லா வளமற்ற மண் இருக்கும் இடங்களில் வசிப்போர் இம்முறையில் குறிப்பிட்ட வகை காய் கறி தாவரங்களை குறைந்த செலவில் வளர்த்து அதிக பயன் பெறலாம் என்கிறார் ஜோயல் .இந்த வகை தோட்டத்தில் நீர் அதிகம் தேவையில்லை .வைக்கோல் உடைந்து சிதைந்து தேவையான சத்துக்களை வளரும் செடிகளுக்கு விநியோகிக்கும் .
உடல் பெலகீனமானோர் /கடினமான வேலைகள் செய்ய முடியாதோர் ,இடப்பற்றாக்குறை உள்ளோர் ஆகியோருக்கும் இம்முறை வசதியானது .

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்
உலகை ரசிப்பது கண்கள். மனிதனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கண்களுக்குஉள்ளது. இந்த கண்களை பாதுகாப்பது மிக அவசியம். கண்களில் ஏதாவது சிறிய குறைபாடு என்றாலும் நாமே சிகிச்சை அளிக்காமல், உடனடியாக சிறந்த கண் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் தரும் ஆலோசனையின்படி சிகிச்சை பெறுவது அவசியம். கண் எரிச்சல், கண் வலி போன்றவற்றுக்கு பெரும்பாலும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும் பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.
பயணத்தின் போது படித்தால் கண்கள் மிகவும் பாதிக்கப்படும். அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்போது கண்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். வெளியே அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும்போது, கண்களை சரியாக திறக்காமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், கண்களை பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வை கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும்போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்லலாம்.
இரவு நேரத்தில் வாகனத்தில் நீண்ட தூரப்பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலையில் கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால், இரவில் வண்டியை ஓட்டும்போது, எதிரில் வரும் வாகனத்திலிருந்து வரும் ஒளியானது, கண்களில் நேராக படுவதால் இவ்வாறு இருக்கும். டிவியும், கம்ப்யூட்டரை போன்றுதான் கண்களுக்கு பிரச்சனையை தரும். எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்து விடும். இதனால் தலைவலியும் ஏற்படும்.
தையல் இயந்திரத்தில் தைக்கும்போது, ஊசியில் நூலை கோர்ப்பதற்கு முழு கவனத்துடன் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை உற்று பார்க்க வேண்டியுள்ளது. இது கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும். இதனால் கண்களில் வலி ஏற்படும்.பைக்கில் செல்லும்போது கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணினி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் மூலம் கண்நோய் மற்றும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு.
அவை: கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு.
மற்றொரு வகை: எபிபோரா. இவை கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் ஏற்படும்.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். இதன் மூலம் கண்கள் சோர்வடையும்.தொற்று நோய்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். இவை ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
காய்கறிகள்
கண்களைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை கண்களை பாதுகாக்கும். வைட்டமின் ‘ஏ‘ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச்சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ‘ஏ‘ சத்து பற்றாக்குறையால் தோன்றும் அறிகுறியே மாலைக்கண் நோய். கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் ‘ஏ‘வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் உள்ளது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங் கியிருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வையை கூர்மையாக்கவும் உதவும். அலுவலகம் செல்லும்போது கேரட், பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துச் சென்று இடைவேளை நேரங்களில் சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும். புத்துணர்ச்சி பெறலாம்.
கண்களை பாதுகாக்க
கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று பார்க்கக்கூடாது. கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும்.
தூரத்தில் இருக்கும் பொருட்களை அதிக நேரம் உற்றுப்பார்க்க கூடாது. அடிக்கடி கண் சிமிட்டுவது நல்லது. அதிகமாக வேலை செய்யும்போது கண்ணில் அழர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ செய்யும் வேலையை நிறுத்தி விட வேண்டும்.
தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். நாளொன்றுக்கு 10 முறை கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில் அசைத்து, பயிற்சி செய்து வர கண் தெளிவாக இருக்கும்.
குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்.

கழுத்து வலிக்கு சுய உதவி

கழுத்து வலிக்கு சுய உதவி
1. கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.
2. மனதளவில் இறுக்கமின்றி"ரிலாக்ஸாக" இருக்கவும்.
3. நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது, கம்ப்யூட்டர் முன் அமரும் போது...
4. படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.
5. மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.
6. ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.
7. படுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும்.
8. வயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்க ாதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.
9. ஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதே போல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும்.
10. நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.
உடற்பயிற்சிகள்
நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடையூறே நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ கழுத்துக்கு மேலும் தொந்தரவு வரும்.
கழுத்து உடற்பயிற்சி, கழுத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும், கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும்.எனினும ் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்யவும்.

பப்பாளி சாப்பிடுங்க

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...’ என்கிற பழமொழியை மாற்றி நண்பர்கள் என்னைப்பார்த்து ''நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.'' நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’
'அய்யா! எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 7 வருஷமாச்சு. இன்னும் வயித்தில ஒரு புழு பூச்சியும் தங்கல. குழந்தைப்பேறு கிடைக்க ஒரு வழி சொல்லுங்க' என்று சித்த மருத்துவரிடம் உருகும் தம்பதியருக்கு அந்த மருத்துவர் சொல்லும் ஒரே பதில், ‘பப்பாளி சாப்பிடுங்க.’
'சிறுநீரகத்தில் கல் உண்டாயிருக்கு வலி தாங்க முடியல, அறுவை சிகிச்சை செய்யவும் பயமா இருக்கு. அந்தக் கல்லைக் கரைக்க ஒருவழி சொல்லுங்க'ன்னு கேளுங்க. அதுக்கும் '
பப்பாளி சாப்பிடுங்க'னு பதில் வரும்.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிகள் தொடங்கி... அப்பல்லோ டாக்டர்கள் வரை தங்களைத் தேடிவரும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் பழங்களில் அதி முக்கியமானது பப்பாளி என்றால் அது மிகையில்லை.
வீட்டுப் புறக்கடையில் மட்டுமே ‘பவ்சு’ காட்டிய பப்பாளி மரங்கள் இன்று பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது. இன்றுகூட கிராமப்புறங்களில் வீட்டு பக்கத்தில் ஒன்றிரண்டு மரங்கள் இருப்பதை பார்க்க முடியும். நகர்ப்புற மக்களும் வீட்டில் பப்பாளி மரங்களை வளர்த்து சாப்பிட முடியும். அது எப்படி என்பதை அழகாய் சொல்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த சிவக்குமார். அவரது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி செடிகள் காய்த்துக் குலுங்குகின்றன. பப்பாளி மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் கொத்தி தின்று கொண்டுயிருந்தன. பப்பாளி மரத்தை சுட்டிக்காட்டி பேசத்தொடங்கினார் சிவக்குமார்.
மாடி வீடு உள்ளவர்கள் மொட்டை மாடியிலும், அந்த வசதி இல்லாதர்கள் வீட்டு படிக்கட்டு மூலைகளிலும், பால்கனியிலும், சமையல் அறையிலும், திறந்தவெளி ஜன்னல் ஓரத்திலும் பப்பாளி மரங்களை வளர்க்கலாம். அதற்கு தேவையான பொருட்கள் இரண்டுதான். ஒன்று வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் பிடித்து நிரப்ப பயன்படும் ஒரு பழைய பீப்பாய். இன்னொன்று நிலத்து மண். பழைய பீப்பாயின் மையப்பகுதியை வட்டமாக வெட்டினால் கிடைக்கும், அடிப்பகுதியை பப்பாளி மரம் வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதோடு 25 கிலோ மணலை வாங்கிக் கொள்ளவேண்டும். அதில் உள்ள கற்களை பொருக்கி எடுத்துவிட்டு நிலத்து மண், மணல் இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைய வேண்டும். மண்ணில் உள்ள கட்டிகள் உடைந்து சந்தனம் போல் மாறும். பிறகு ஈரமண்ணை பரப்பி காய வைக்கவேண்டும். இரண்டு நாளில் மண் ஈரம் காய்ந்து பொலபொல என்று மாறிவிடும். அதோடு உயிர் உரங்களை கலக்க வேண்டும். அருகில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது வீட்டுத்தோட்ட அங்காடிகளில் இந்த உரங்கள் கிடைக்கும். இதில் அசோஸ்-பைரில்லம் முக்கியமானது. அதை ஒரு கிலோ அளவில் வாங்கிவந்து, அந்த பொலபொல மண்ணில் கலந்து பீப்பாயினுள் நிரப்பவேண்டும். நிரப்பும் முன்பு மாட்டு சாணம் கிடைத்தால் அதையும் சேர்த்துகொள்ளலாம். தொடர்ந்து பூவாளி கொண்டு பீப்பாய்க்குள் உள்ள மண் நனையும்படி தண்ணீர்விட்டு அது சுண்டியபின், பப்பாளி விதைகளை ஊன்றலாம்.
விதைகளுக்குத் தேவையான பப்பாளிப் பழத்தை கடைகளில் வாங்கிகொள்ளலாம். நன்றாக கனிந்த சிவந்த நீளமான பழங்களில் தான் முளைப்புத்திறன் கொண்ட விதைகள் கிடைக்கும். அந்த பழங்களில் உள்ள விதைகளை எடுத்து அதன் ஈரப்பதம் குறையும்படி காயவைத்து, அந்த விதைகளில் ஒன்றுக்கும் மேற்பட்டதை பீப்பாயில் உள்ள மண்ணில் ஈர விதைப்பு செய்யவேண்டும். ஊன்றும் விதைகளை தகுந்த இடைவெளி விட்டு பரவலாக ஊன்றவேண்டும்.
தொடர்ந்து 35 நாட்கள்வரை பீப்பாய் நிழலில் இருக்க வேண்டும். 35வது நாளில் நாற்றுக்கள் முளைத்து நிற்கும். தொடர்ந்து ஈரம் ததும்ப தண்ணீர் விட்டு பீப்பாயினுள் உள்ள அனைத்து நாற்றுக்கலையும் பிடுங்கிவிட்டு, அதில் ஊக்கமுள்ள நாற்றை மட்டும் எடுத்து பீப்பாய் மன்ணின் மையப்பகுதியில் நடவு செய்து தண்ணீர் ஊற்றி வரவேண்டும். வெளிச்சம் படும்படியான இடத்தில் பீப்பாயை மாற்றி வைக்க வேண்டும். 120 நாள் தொடங்கி மரம் காய், கனிகளை கொடுக்கத் தொடங்கிவிடும். இரண்டு வருடங்களில் உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய், கனிகளை கொடுக்கும். உங்கள் வீட்டு மருத்துவ செலவும் குறையும்" என்று பயனுள்ள ஆலோசனையை வழங்கினார் சிவக்குமார்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு

காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
===================================================

6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும்கடலில் கொட்டப்படுகிறது. கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் சாக்கடை நீர், முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர் ,சாயப்பட்டறை ,தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு,இரசாயன கழிவு, மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு,தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன சென்றுக் கலக்கின்றன .இப்படி பட்ட கழிவுகள் கலந்த நீர்நிலைகள் மனிதர்கள் குடிக்கவோ விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை .கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில் விளையும் பயிர் மற்றும் காய்கறிகள் பல பக்க விளைவுகள் உண்டாக்குகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
முறையற்ற இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் அதிக அளவு மக்கள் புற்றுநோய் மற்றும் மரபணு குறைபாடு போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .
காசர்கோடு மற்றும் தக்க்ஷின் கனடா பகுதியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் வான் வழியாக தெளிக்கப்பட்ட எண்டோ சல்பானின் கொடூர விளைவுகளை அறிந்திருப்பீர்கள் ..!!பிறவி குறைபாடுகள் மரபணு குறைபாடுகள் ,புற்றுநோய் ,கருப்பை சம்பந்தமான நோய்கள் ,சரும நோய்கள் என மனதாலும் உடலாலும் அங்கு பிறக்கும் பிள்ளைகளும் அவதிப்பட்டதை மறக்கவோ மறுக்கவோ முடியாது . கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல பல குழந்தைகளை உருக்குலைத்த பின் கேரளா 2005 ஆம் ஆண்டும் கர்நாடகா 2011 ஆம் ஆண்டும் என்டோசல்பான் பயன்பாட்டை தடை செய்தன !!ஆனாலும் இன்னும் பல இடங்களில் தடைசெயப்பட்ட இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் கள்ள விற்பனையில் இருக்கின்றன என்பதற்கு பீஹார் மதிய உணவில் ,மோநோக்ரோடோபாஸ் இனால் மரணங்கள் சாட்சி .
வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
-------------------------------------------------
ஒவ்வொரு பொருளிலும் இந்த மருந்து இருக்குமா இல்லை அந்த பூச்சி கொல்லி இருக்குமோ என்று ஆராய்ச்சி செய்ய தனி மனிதனால் இயலாது ..ஆகவேதான் வீட்டுத்தோட்டம் மாடித் தோட்டம் காலத்தின் கட்டாயம் ..
கேரளாவில் அங்கக வேளாண்மை ,இயற்கை ஆர்கானிக் உணவு பொருட்களை வீட்டில் வளர்க்க பயிற்சியும்,காய்கறி தாவரங்களை கவனிக்கும் முறைகள் அதற்கான தேவையான விதை ,செடி வளர்க்க நாற்று பைகள் ஆகியவற்றையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கிறார்கள் .
கொச்சி அருகே முண்டம்வெளி பகுதியை சார்ந்த விவசாயத்துறை அதிகாரி ஜான் ஷெர்ரி மாடிதோட்டத்தில் ஐம்பது பைகளில் காய்கறி தோட்டமமைத்து வெற்றியும் கண்டுள்ளார் .இசெடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தினையும் தானே
வீட்டில் தயாரித்துள்ளார் ..
எளிய முறையில் உரம் தயாரிப்பு ..
1.. மாட்டு சாண குழம்பு உரக்கலவை .
நிலக் கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு , மாட்டு சாணம் ஆகிய அனைத்தையும் தலா ஒரு கிலோ தேவை. இவற்றை ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர் மற்றும் கோமியம் சேர்த்து கலந்து கலனின் வாய் பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும் .இக்கலவை நொதிக்க நான்கைந்து நாட்கள் ஆகும்.
ஐந்து நாட்களுக்கு பின்னர் ஒரு கோப்பை கலவையுடன் பத்து கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் .
2, பாக்டீரியா பூச்சி கொல்லி
சூடோமொனாஸ் எனும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும் .
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்று பைகளுக்கு பயன்படுத்தலாம்
சூடோமோனஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது .
3,மீன் அமினோ அமிலம் உரம்
கடைகளில் கிடைக்கும் மீன் கழிவு மற்றும் வெல்லப்பாகு இரண்டையும் தலா ஒரு கிலோ சேர்த்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு டைட்டாக மூடி வைக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நொதித்தலுக்கு பின்னர் .இக்கலவையை வடிகட்டி அதில் இருந்து இரண்டு மில்லி லிட்டர் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து உரமாக பயன்படுத்த வேண்டும் .
பூக்கும் தாவரங்களுக்கு இவ்வுரம் மிக சிறந்தது .
4, அசாடரக்டின் /Azadaractin...
இது வேம்பிலிருந்து பெறப்படும் சாறு .
இது ஒரு சிறந்த பூச்சி கொல்லி ..இரண்டு மில்லி லிட்டர் சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் இலை மற்றும் வேர் பகுதியில் தெளிப்பானால் தெளிக்க வேண்டும் ..
5, ..இதெல்லாம் போக சில வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
வளரும் செடிகளை அன்போடு பராமரிக்கவேண்டும்
நாற்று பைகளை போதிய இடைவெளி விட்டு வைக்க வேண்டும், பைகளை செங்கலின் மீது வைக்கலாம்.உரத்தை மாலை நேரங்களில் செடிகளுக்கு இட வேண்டும். .தினமும் காலைவேளையில் நீர்ப்பாய்ச்சி விட வேண்டும்
ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஷெரி தொடர்ந்து அதே நாற்று பைகளை பயன்படுத்தி வருகின்றார் ..
இவரது வழிகாட்டுதலால் சூரநிகரையில் 300 தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன .இவரது குடும்பத்தினர் அனைவருமே இவருக்கு இந்த மாடிதோட்ட பராமரிப்பில் மற்றும் ஆலோசனை வழங்கும் விஷயத்தில் உறுதுணையாக உள்ளார்கள் .மேலதிக விவரங்களுக்கு அவரைத்தொடர்பு கொள்ள அணுகவும் ...9447185944..

வீட்டு தோட்ட டிப்ஸ் !!

வீட்டு தோட்ட டிப்ஸ் !!
APHIDS அசுவுணி அல்லது செடிப்பேன் பச்சை நிற பூச்சிகள் செடிகளில் இருந்து தாக்கும் ..ஹோஸ் பைப்பால் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பாய்ச்சினால் இவை காணமல் போகும் .
இதற்க்கு இன்னொரு வழியும் உண்டு ..கைகளில் அகலமான DUCT டேப் அல்லது செலோ டேப்பின் ஒட்டும்பகுதி வெளிப்பக்கம் தெரியும்படி சுற்றி செடிகளின் இலை பகுதியில் கீழ்புறம் கையை துழாவி செல்ல இந்த பச்சை பூச்சிகள் பசையில் ஒட்டி வந்துவிடும் .
காய்களை வேகவைத்த நீரை இனி எறிய வேண்டாம்அந்த நீரை ..தொட்டி செடிகளுக்கு ஊற்றி பாருங்கள் வளரும் செடிகளுக்கு இது ஒரு சிறந்த சத்து நிறைந்த சூப் !!!!
சில வகை தாவரங்கள் அமிலத்தன்மை விரும்பும் ..அத்தகைய செடிகளுக்கு காபி தேனீர் கலக்கும்போது வடிகட்டிய துகள்களை நிலத்தில் மாதமொருமுறை தூவலாம் .
chamomile ..இதனை சீமை சாமந்தி என்பார்கள் இதில் இப்போது ஹெர்பல் தேநீரும் கிடைக்கிறது
இது சிறு நாற்று செடிகளை திடீரென காளான் பூஞ்சணம் தாக்குவதை தடுக்கவும் பயன்படுகின்றது .
சிறிது சீமைசாமந்தி தீநிரை இளம் செடிகளின் அருகில் மண்ணில் தெளித்து வர பூஞ்சை காளான் தாக்காது .
துரிதமாக மூலிகை தாவரங்களை காய வைக்க :)ஒரு செய்தித்தாளை காரின் பின்னிருக்கையில் விரித்து அதன்மேல் மூலிகை தாவரங்களை (HERBS )லாவண்டர்
பரப்பி வைத்து காரின் கதவுகளையும் சன்னல் கண்ணாடிகளையும் இருக்க மூடி வைக்கவும் ..
துரிதமாக காயும் மற்றும் வாகனமும் வாசமுடன் இருக்கும் .
உங்க தோட்டத்துக்கு பல வண்ண வண்ணத்து பூச்சிகள் வருகை தர ஒரு சிறு தட்டில் ஆப்பிள் /ஆரஞ்சு .வாழை அன்னாசி இவற்றில் சிறு துண்டுகளை வைங்க ..பல வர்ண வண்ணத்து பூசிகள் வருகை தரும் ..ஒரு வட்டம் ஆரஞ்சு சுளை வெட்டி கயிற்றில் கட்டி தொங்க விட்டாலும் நல்லது ..
தேனீக்களும் வண்ணத்து பூச்சிகளும் அழகிய தோட்டத்தில் மகரந்த சேர்க்கைக்கு இன்றியமையாதவை .

வீட்டுத்தோட்டம் .தொட்டியில் காரட் வளர்த்தல் ..

வீட்டுத்தோட்டம் .தொட்டியில் காரட் வளர்த்தல் ..
பெரிய நிலப் பரப்பு அல்லது பெரிய தோட்டம் இல்லாவிடினும் சிறிய இடத்திலும் தொட்டிகளில் அல்லது கோணிப்பை /உயர்த்தி கட்டிய மண் படுகைகளில் காரட் செடி வளர்க்கலாம்.
20 " ஆழம் அல்லது அதை விட ஆழமான தொட்டி அல்லது சதுர /செவ்வக வடிவ கலனில்
முக்கால் பாகம் கம்போஸ்ட் உர மண் கலவையினால் நிரப்ப வேண்டும் .
கலப்பு உர மண் கலவை இலகுவாக நெகிழும் தன்மையுடன் இருக்கவேண்டும் .
சிறு கற்கள் போன்றவற்றை தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தனும் ..இல்லையென்றால் ..அறுவடை செய்யும்போது குறை வளர்ச்சி /பல வடிவங்களில் கோணல் மாணலான காரட்கள் கிடைக்கும் ..உதாரணம் கொல்லாஜில் கடைசி படம் ..கல் ஒன்று வேர் கீழ் நோக்கி வளர தடை செய்ததால் அதன் வடிவம் பாருங்கள் smile emoticon
தொட்டியில் நிரப்பிய கம்போஸ்ட் மீது சிறிதளவு காரட் விதைகளை பெரிய கண் சல்லடை மீது வைத்து தூவலாம் காரட் விதை மிக சிறியவை .விதைகளுக்கிடையில் இடைவெளி மிக அவசியம் .
இதற்க்கு ஒரு கைப்பிடி மணலுடன் விதைகளை கலந்தும் தூவலாம் .இது அதிகப்படியான நீர் தொட்டியில் தேங்காமலிருக்க உதவும்.
பிறகு விதைகள் மீது சிறிது கம்போஸ்டால் மூட வேண்டும் .
நீர் மிக மெதுவா தெளிப்பானால் தெளிக்கணும் .தொட்டி கீழ் செங்கல் வைக்க வேண்டும் நீர் தேங்காமல் எளிதில் வெளியேற இது உதவும்
காரட் செடி விதைகள் துளிர்க்க இரண்டு வாரங்களாகும் ..இடைவெளி இல்லாமல் முளைத்த சிறு நாற்று செடிகளை மெதுவா கத்திரித்து விடணும் .பிடுங்க கூடாது .
காலநிலை தட்ப வெப்பம் பொருத்து விளைச்சல் இருக்கும் .60இலிருந்து 75 நாட்களில் அறுவடை செய்யலாம் .
காரட் கீரையை வீணாக்காதீங்க வெஜிடபிள் சூப் செய்யும்போதும் ,காரட் பொரியலிலும் சேர்த்து சமைக்கலாம் .