வெள்ளி, 25 ஜனவரி, 2013

DIY - நீங்களே செய்யலாம் - 3: பிளாஸ்டிக் பாட்டில் இல் இருந்து ஒரு ஹோல்டர்


பிளாஸ்டிக் bottles அ பொதுவா நம்ம தூக்கி போட்டுடுவோம்...
அதுல இருந்து எப்படி அழகா ஒரு ஹோல்டர் செய்யறதுன்னு கத்துக்கலாம்...இத flower vase ஆவோ, இல்ல pen stand ஆவோ இல்ல spoon stand ஆவோ எப்படி வேணா use பண்ணிக்கல்லாம்... 


 தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் பாட்டில்
கத்திரிகோல் 
படத்தில் காமித்த படி பாட்டில்லை பாதியாகவோ இல்ல உங்களுக்கு stand எந்த உயரத்திற்கு தேவை படுதோ அந்த அளவிற்கு கட் பண்ணிகொங்க...   
 இது முழுவதும் கட் பண்ணிய பிறகு...
 பின் படத்தில் காட்டியது போல நீள வாக்கில் strips (முக்கால் இன்ச் )  ஆக கட் செய்து கொள்ளவும்...
 அப்படி கட் செய்தால் 
 இப்படி வரும் 
 பின் இந்த strips ஒவ்வொன்றையும் படத்தில் காட்டிஉள்ளது  போல பாதியாக மடித்து விடவும்.பின் ஒரு strip எடுத்து மேல்பக்கமாக பக்கத்தில் உள்ள strip பில் பொருத்தவும்...   
மடித்து விடுவதால் ஒவ்வொன்றும் நன்றாக பிடித்து  கொள்ளும். பின் அதை படத்தில் காட்டிஉள்ளது போல திருப்பி நன்றாக அழுத்தவும்... இது அழகான வட்ட வடிவத்தை tight ட்டாக hold செய்ய உதவும்...

holder தயார்...கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக