வெள்ளி, 25 ஜனவரி, 2013

குப்பைகளை கழிக்கும் முறை-1


இதென்ன தலைப்பு ?வீடுகளில் குப்பையை கழிக்க ஒரு முறை இருக்கிறதா என்ன? குப்பையை dustbin இல் போட்டு பின் குப்பை தொட்டியில் கொண்டு கொட்ட வேண்டியதுதானே?அதுக்கு என்ன முறை வேண்டி கிடக்குது என்று கேட்கிறீர்களா?

கண்டிப்பாக இருக்கிறது என்பதை சொல்வதற்கே இந்த பதிவு.

இந்த பதிவை போட வேண்டும் என்று இரண்டு மாதமாக நினைத்து இருந்தேன்.நான் சொல்வதை நானே முழுமையாக செயல் படுத்திய பின்னரே பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த கால தாமதம்.

முதல் வீடுகளில் என்ன என்ன குப்பை நாம் generate பண்ணுகிறோம் என்று பாப்போம்.
  1. Wet waste (ஈர பதம் உள்ள குப்பைகள்)
    • சமைத்த உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • சமைக்காத உணவு பண்டங்கள் (சைவம்  /அசைவம்  )
    • பழங்களின் கழிவுகள் ,தோல்கள் ,விதைகள் 
    • காய்கறி கழிவுகள் 
    • பூஜையறை இல் இருந்து கழியும் பூக்குப்பைகள் 

    2. Dry  waste (உணவு பண்டம் அல்லாத  / ஈரப்பதம் இல்லாத/ மக்காத குப்பைகள் )
    • கண்ணாடி 
    • துணி வகைகள் 
    • தோல் பொருட்கள் 
    • ரப்பர் 
    • தெர்மோகோல் 
    • உலோகங்கள் 
    • காகிதங்கள் 
    • மர துண்டுகள் 
    • முக்கியமாக பிளாஸ்டிக் குப்பைகள் 
    • ரெக்ஸின் பைகள் முதலியன 




      3.சானிடரி கழிவுகள் 
    • சானிடரி நாப்கின்கள் 
    • டையப்பர்கள் 
    • பேண்டஜ்கள் 
    • மற்றும் ரத்த கரை படிந்த பஞ்சு / மருத்துவ கழிவுகள் 
    4.அபாயம் மற்றும் ஆபத்து விளைவிக்கும் கழிவுகள் 
    • பல்புகள் , tube லைட் 
    • பேட்டரி 
    • கிளீனிங் பொருட்கள் (eg lizol ,சோப்பு பவுடர் போன்றவை )
    • பெயிண்ட் 
    • எண்ணெய் 
    • அழகு பொருட்கள் 
    • பூச்சி மருந்து 
    • காலாவதியான மருந்துகள்
    • ஊசி 
    • மற்றும் e waste எனப்படும் கால்குலேட்டர் ,கை பேசி ,சார்ஜர்கள் ,பழைய ரேடியோக்கள் போன்றவை 
    5. தோட்ட  கழிவுகள்  (இலை தளைகள்,மரம் வெட்டிய கழிவுகள் போன்றவை)

   6. இது போக செங்கல்கள் ,வீடு வேலை செய்யப்பட்ட பொது மிஞ்சிய கழிவுகள் ,சிமெண்ட்    போன்றவைகளும் அடங்கும். 



ஒரு வீட்டில் இருந்தே இத்தனை குப்பைகளை உருவாக்குகிறோம்.ஒரு ஊர்,நகரம், என்றால் எவ்வளவு கழிவுகள்?

வீடு என்றால் மேற்கண்ட குப்பைகள் கண்டிப்பாக பல தினசரியோ, சில ஒரு மாதத்திற்கு ஒருமுறையோ இருக்கும் தான்.பிரச்னை அதில் இல்லை .இவ்வளவு குப்பைகளையும் ஒரே இடத்தில கொண்டு கொட்டும் பொழுது மக்கும் குப்பையும் மக்காத குப்பைகளும்,அபாயமான குப்பைகளும் மண்  மேலே குவிந்து குவிந்து மண்ணின் தன்மையே மாறி நிலத்தடி நீர் வற்றி ,கண்மாய்கள் அடைத்து கொண்டு எவ்வளவு அபாயகரமான சூழ்நிலை உருவாகிறது.




 நாம் வீட்டில் இருந்து குப்பைகளை கழிக்கும் போதே மக்கும் குப்பைகளை மட்டும் கழித்தால் இந்த பிரச்னை ஓரளவுக்காவது குறையும்.மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு கழிவுகளையும் எவ்வாறு கழிப்பது,இந்த பூமிக்கு நம்மால் ஆன ஒரு சிறிய உதவியை எப்படி ஒரு அன்றாட பழக்கம் ஆக்கி கொள்வது என்பதை உங்களுடன் பகிரவே இந்த தலைப்பு. 

அதோடு வேஸ்ட் management தில் நான் expert எல்லாம் இல்லை.நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்கிறேன்.உங்களுக்கு தெரிந்த விசயங்களும் நீங்கள் பயன்படுத்தும் முறைகளும் , கூட கருத்துக்களாக பதிவு செய்யுங்கள்.

பதிவு தொடரும்....