வெள்ளி, 25 ஜனவரி, 2013

ரங்கோலி


கோலம் போட நம்ம பெண்களுக்கு சொல்லி தர வேண்டாம்...இந்த பகுதில கொஞ்சம் வித்தியாசமான கோலங்கள் பத்தி பாக்கலாம்...
இதுல முதல் பதிவா நான் prize வாங்குன கோலம் பத்தி சொல்றேன்... இது அரிசிய வச்சு போடற ரங்கோலி...
இதுக்கு தேவையான பொருட்கள் 


food color - என்ன என்ன கலர் ல கிடக்குமோ அத use பண்ணுங்க..நான் இதுல மஞ்சள், பச்சை, ஆரஞ்சு use பண்ணிருக்கேன்... 
blue ink,red ink,green ink - இதுல கிடக்கற கிரீன் கலர், food கலர் ல கிடைக்குற  கிரீன் கலர் ரும் வேற வேற மாதிரி தான் இருக்கும்...
அரிசி - உங்க கோலத்துக்கு தேவையான அளவு...கொஞ்சம் குண்டு குண்டான அரிசியா பார்த்து வாங்கிகோங்க  ... 
நான் இதுல ரேஷன் அரிசிதான் உபயோக படுத்திருக்கேன்...

கைல முடிஞ்சா glouse போட்டுட்டு பண்ணுங்க...தரைல பேப்பர் விரிச்சுகொங்க...அதுக்கு மேல ஒரு பிளாஸ்டிக் ஷீட்ல தேவையான அளவு அரிசி ய போட்டு இன்க்  ன்னா அப்படியே அரிசி மேல ஊத்தியே கலக்கலாம். .. 
food கலர் னா கொஞ்சம் தண்ணீர் ல கலந்துகிட்டு அரிசி மேல விட்டு கலந்து விட்டுகொங்க...

இத மாதிரி உங்களுக்கு தேவையான கலர் ல அரிசிய தயார் பண்ணிக்கணும்...கொஞ்ச நேர இந்த அரிசிய அப்படியே காய விடுங்க...நல்லா காஞ்சதும் டப்பாக்களில் எடுத்து வச்சுகோங்க... 

image courtasy : origamy
இப்போ நான் போட்ட கோலம்..
  
பிள்ளையார் சதுர்த்திக்காக நடந்த competion ங்கறதால நடுல பிள்ளையார் மாதிரி (!!!) போற்றுகேன்... இதே competion ல என்னை கவர்ந்த மற்ற 2 கோலங்கள் உங்க பார்வைக்கு...


 இவங்க ரெண்டு பேரும் அரிசி மட்டும் இல்லாம பருப்பு கோதுமை எல்லாம் உபயோக படுதினதுனால prize கிடைக்கல...


இப்போ நம்ம பாக்க போறது இதே முறைல என் அறுசுவை/Facebook தோழி கவிசிவா & கோ போட்டு முத பரிசு வாங்கின கோலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக