வியாழன், 31 ஜனவரி, 2013
இளமையா இருக்க ஆசையா?
இளமையா இருக்க ஆசையா?
‘குமரியை உண்டால், குமரியை வெல்ல முடியும்’ என்கிறது சித்த மருத்துவம். குமரி என்பது சோற்றுக்கற்றாழை யின் மற்றொரு பெயர்.
‘அலோவேரா’ சோப்பு, ஷாம்பூ... எல்லாம் சோற்றுக் கற்றாழை மூலம்தான் உற்பத்தி செய்கிறார்கள். தரிசு நிலத்தில் விளையும் இந்த செடிக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உண்டு.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டுபோகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள ் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
என்ன இல்லை சோற்றுக்கற்றாழை யில்!
சோற்றுக் கற்றாழைக்குசித்த மருத்துவர்கள் கொடுத்திருக்கும ் மதிப்பே தனிதான். மூலிகைகள் உலகத்தில் ராஜ மரியாதையுடன் வலம் வரும் இந்த சோற்றுக்கற்றாழை அதற்கு முற்றிலும் தகுதி உடையதுதான். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த மூலிகை ஏராளமான மருத்துவக்குணங் களை கொண்டது.
தீய சக்திகள், கண் திருஷ்டி இவைகளை அண்டவிடாது என்ற நம்பிக்கையின் காரணமாக வீட்டின் முன்புறம் வளர்க்கப்படுகிற அல்லகட்டித் தொங்க விடப்படுகிற இந்த செடி மாட்டுத் தொழுவங்களில் கால்நடைகளுக்கு உண்ணிபற்றாமலிருப்பதற ்காகவும் தொங்க விடப்படுவது உண்டு.
கற்றாழையின் சோற்றைத்தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக்குளிக்க தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு குணமாகும்.
சோற்றுக் கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து உள்ளே சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும். இரண்டு நாட்கள் கழித்து ஊறிய அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு அதை தேய்த்து குளிக்க நரை முடியும் கறுப்பாகும்.
வாடிச் சருகான கற்றாழை மடலை தீயில் கருக்கி, தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப் புண்களில் மீது பூசி வர விரைவில் புண்ஆறும்.
கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து இரண்டாக பிளந்து சோற்றுப் பகுதியை தீயில் வாட்டி உடல் பொறுக்கும் சூட்டில் அடிப்பட்ட இடத்தில் இதை வைத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் மட்டுமல்ல இரத்தக் கட்டும் மாறும்.
இச் செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வர குடல் புண், மூல நோய் மாறும். மலச் சிக்கல் தீரும்.
மஞ்சள்காமாலை நோய்க்கும் சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. தவிர கூந்தல் தைலம், அழகு சாதனப் பொருள்களில் இது சேர்க்கப்படுவதா ல் பொருளின் தரமும், வீரியமும் மட்டுமல்ல மருத்துவதன்மையு ம் அதிகரிக்கிற

புதன், 30 ஜனவரி, 2013
பிலேடு மறுசுழற்சி செய்வது எப்படி
'மழித்தலும் நீட்டலும் வேண்டா' எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால், நம்மில் பலருக்குத் தினந்தோறும் கன்னங்களை மழிக்கும் தேவை இருக்கிறது. ஒரு மழிதகட்டின் (பிலேடு) 4 பக்கங்கள் மூலம், அதிகபட்சம் 4 முறைகள் மட்டுமே மழிக்க முடிகிறது. ஒரே பக்கத்தை இரண்டாம் முறை பயன்படுத்தினால், சரியாக மழிப்பதில்லை.
சரி, 4 முறைகள் பயன்படுத்திவிட்டோம். அடுத்த மழிதகட்டுக்கும் வந்துவிட்டோம். இப்போது பழைய மழிதகட்டினை என்ன செய்வது? அதைக் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தால், குப்பை அள்ளுபவர் கைகளுக்கு அது ஆபத்து தானே. சரி, யாருக்கும் ஆபத்து வராமல் இருக்க, மண்ணில் புதைத்துவிடலாமா? அப்படிச் செய்தால் அது என்னாகும்? தோண்டும்போது யார் கையையாவது, காலையாவது பதம் பார்க்கும் என்பது ஒரு புறம் இருக்கட்டும். இது எளிதில் அழியாது. நாளடைவில் துருப் பிடிக்கும். நீண்ட காலமாகத் துரு ஏறினால் கடைசியில் உடையும் - உதிரும் வாய்ப்புகள் உண்டு. இதற்கே பல்லாண்டுகள் ஆகும். இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது சுற்றுச் சூழலுக்கு உகந்ததா?
முடி திருத்தும் நிலையங்களில் ஒவ்வொருவருக்கும் தனித் தனி மழிதகடுகளைப் பயன்படுத்துகிறார்கள். சுகாதாரக் கண்ணோட்டத்தில் இது சரியே. ஆனால், இதனால் மழிதகடுகளின் தேவை அதிகரிக்கிறது. அதே போல் மழிதகட்டுக் கழிவுகளும் கூடுகின்றன.
முன்பு, சவரக் கலைஞர் ஒரு கத்தி வைத்திருப்பார். ஒரே கத்தி தான். அது, மழுங்கினால் பட்டை தீட்டிக்கொள்ளலாம். இதனால் தனி நபர்களிடமிருந்து இரும்புக் கழிவுகள் பெருகவில்லை. ஆனால், இப்போது சவரம் செய்பவர் ஒவ்வொருவரும் இரும்புக் கழிவுகளை உற்பத்தி செய்கிறார். அதுவும் பயன்படுத்தித் தூக்கி எறியும் மழிதகடுகளால் (use and throw) வாரந்தோறும் இரும்பு - நெகிழ்ம (பிளாஸ்டிக்)க் கழிவுகள் கூடுகின்றன. பழைய முறைப்படி இப்போது கத்தி வைத்துச் மழிப்பது நல்லதா? அதற்குப் பட்டை தீட்டுபவர் இப்போது அதிகம் தென்படவில்லை. இந்தச் சிக்கல்களால், கத்தியை நாம் விரும்பிய நேரத்தில் பட்டை தீட்ட இயலாது. இதற்கெனத் தனிக் கடைகளும் இல்லை. எனவே மழிதகடுகளைத் தவிர்க்க இயலவில்லை.
ஆனால், அவற்றைக் கழிப்பதில் சிக்கல் உள்ளது. இதன் காரணமாக, நான் பயன்படுத்திய மழிதகடுகளை எல்லாம், குழந்தைகள் கைக்கு எட்டாத உயரத்தில் இன்னும் வைத்திருக்கிறேன். யாருக்கும் கேடு இல்லாமல் இவற்றை எளிதில் மறுசுழற்சி செய்ய முடியுமா? எடைக்குப் போடும் அளவுக்கு இந்த இரும்புகள் அதிகமாக இருப்பதில்லை. இவற்றை யாரும் வாங்குவதும் இல்லை.
இந்தச் சிக்கலுக்கு எனது யோசனை. மழிதகடுகளைப் பட்டை தீட்ட ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும். எப்படி பென்சில் கூர்தீட்டக் கருவி உள்ளதோ, அதே மாதிரி மழிதகட்டுக்கும் கருவி காண வேண்டும். கையைக் காயப்படுத்தாமல் அது இருக்க வேண்டும். ஒருவேளை மழிதகடு துருப் பிடித்தால், அந்தத் துருவை நீக்கவும் வாய்ப்பு அளிக்கலாம். பயன்படுத்தியதும் நன்றாகக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவர் தன் பயன்பாட்டுக்கு மட்டும் வைத்துக்கொண்டால், இதனால் பெரும்பாலும் நோய் தொற்றும் சிக்கல் இருக்காது. இதன் மூலம் ஒரு மழிதகட்டினை வைத்து ஆண்டுக் கணக்கில் ஓட்டலாம் இல்லையா? இதனால் பில்லியன் கணக்கில் மழிதகடுகளைத் தூக்கி எறிவது, அவற்றைக் கழிப்பது ஆகியவை நிறுத்தப்படும்.
அல்லது நாலு பழைய மழிதகடுகளைக் கொடுத்தால் ஒரு புதிய மழிதகடு கொடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவிக்கலாம். இதனால் இதைப் பட்டை தீட்டும் பணியை அந்த நிறுவனமே மேற்கொள்ளலாம். நிறுவனம் செய்தால், மழிதகட்டினை மீண்டும் கொதிநீரில் கழுவி (sterilisation), புதுப்பிக்கலாம். இது முறையாக நடக்கிறதா எனவும் கண்காணிக்க வேண்டும். சிலரின் ரத்தக் கறை படிந்த மழிதகடுகளால் கிருமிகள் தொற்றும் என்ற சிக்கலுக்கு இதனால் ஒரு தீர்வு கிட்டும்.
அல்லது, மயிர் நீக்கியை (hair remover)ப் போல், பசையைத் தடவி ரோமங்களைப் பஞ்சினால் வழித்தெடுக்கும் முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும். இப்போதுள்ள முறையில் பசையைத் தடவிவிட்டு, கொஞ்ச நேரம் ஊற வேண்டி இருக்கிறது. அதன் பிறகு இரண்டு முறை வழித்தெடுக்க வேண்டி இருக்கிறது. இதில் நிறைய நேரம் செலவாகிறது. எனவே இந்தப் பசை முறையை மேம்படுத்தி, ஓரிரு நிமிடங்களில் மழிக்க முடிகிற அளவுக்குக் கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்தால் மழிதகட்டுப் பயன்பாட்டையே அடியோடு ஒழித்துவிடலாம். இதை மலிவாகவும் கொண்டு வரவேண்டும். இந்தப் பசையைச் செயற்கை ரசாயனங்களால் அல்லாமல், இயற்கைப் பொருட்களைக் கொண்டே உருவாக்குவது நல்லது.
இரண்டு ரூபாய் கொடுத்தால் (முன்பு ஒரு ரூபாயாக இருந்தது), ஒரு புதிய தகடு கிடைத்துவிடுகிறது. இந்தச் சின்ன விடயத்திற்கு இவ்வளவு யோசிக்க வேண்டுமா எனச் சிலர் எண்ணலாம். ஆனால், சிக்கல் இதன் விலையில் இல்லை; இதன் மறுசுழற்சியில் உள்ளது. மழிதகடுகளின் மறுசுழற்சிக்கு வேறு சிறந்த யோசனை இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

சிறந்த மறுசுழற்சி ஆடைகள்
நம்மால் தூக்கி ஏறிய பட்ட பொருட்களை கொண்டு சில பேஷன் பணியாளர்கள் இந்த ஆடைகளை வடிவைமைத்து உள்ளனர். இதோ இப்படி நமக்கு உதவாத பொருட்களை மறுசுழற்சி செய்து இப்படி உபயோகமாவும் பயன் படுத்தலாம்.
மனி டிரஸ் ல பணத்தை யாரு தூக்கி போடுறாங்க நு யாரும் கேக்ககூடாது.அது செல்லாத நோட்டுகள். :) உங்கள் கருத்துக்களை பகிரவும் .. நன்றி
01. Money Dress
02. Tin Foil Dress
03. Newspaper Dress
04. Condom Dress
05. Trash Bag Dress
06. Used Tea Bag Dress
07. Little Golden Book Gown
08. Vogue Magazine Dress
09. Balloon Dress
10. Capri Sun Dress
மனி டிரஸ் ல பணத்தை யாரு தூக்கி போடுறாங்க நு யாரும் கேக்ககூடாது.அது செல்லாத நோட்டுகள். :) உங்கள் கருத்துக்களை பகிரவும் .. நன்றி
கோப்பையிலே ஒரு புயல்…
சுடச் சுட காபி விநியோகிக்கும் இயந்திரங்களை பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உற்சாகத்துக்காகத் தங்கள் அலுவலகத்திலேயே நிறுவியுள்ளன. காபியின் பயணம் அந்த இயந்திரத்தில் தொடங்கி நம் உதடுகளில் முடிகிறது என்றால் அது பயணிக்கின்ற பேருந்தாக அதனை ஏந்துகின்ற கோப்பையைச் சொல்லலாம். இரண்டாயிரம் பேர் பணிபுரியக் கூடிய ஒரு நிறுவனத்தில் இந்த காபிக் கோப்பைகளின் பயண்பாடு என்பது மலைக்கவைக்கும் விஷயமாக இருக்கிறது!
ஒவ்வொரு ஊழியரும் ஒரு நாளைக்கு இரண்டு முறை காபி அல்லது தேநீர் அருந்தினால் கூட ஒரு நிறுவனத்தில் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோப்பைகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு பெருநகரத்திலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டிருக்கிற நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாலும், காபி இயந்திரம் என்பது ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்கக் கூடிய அடிப்படை ஊழியர் வசதிச் சாதனம் என்பதாலும் இந்த விஷயம் அதி முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகிறது. ஒரு லட்சம் கோப்பைகளுக்கும் மேல் பயண்படுத்தப்படும்போது அவற்றின் வெளியேற்றம் மற்றும் மறுசுழற்சி குறித்தும் கவலையுடன் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒரு காகிதக் கோப்பையின் உற்பத்தி என்பது பல சுற்றுக்களைக் கொண்டது. அவற்றைப் படிப்படியாகக் கீழே தந்துள்ளேன்…
- மரம் வெட்டப்படுவது…
- வெட்டப்பட்ட மரங்கள் சில்லு சில்லாக சீவப்படுவது…
- சீவப்பட்ட துகள்கள், வேதிக்கலவைகளில் ஊறவைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படுவது…
- பதப்படுத்தப்பட்ட கலவை காகிதக் கூழாக மாற்றப் படுவது…
- காகிதக் கூழில் வென்மை நிறம் கூட்ட ப்ளீச்சிங் சோடா சேர்க்கப்படுவது…
- பின்னர் அந்தக் காகிதக் கூழ் காகிதமாக்கப்படுவது…
- காகிதத்தின் ஒரு புறத்தில் திரவம் ஊறாத அளவுக்கு பாலிதீன் ஒட்டப் படுவது…
- பின்னர் அந்தக் காகிதம் கோப்பையாக வடிவமைக்கப்படுவது…
ஒவ்வொரு காகிதக் கோப்பையும் குறைந்தபட்சம் இத்தகைய எட்டு படிநிலைகளைக் கடந்தே (கோப்பையின் மேற்புறம் அச்சிடுவது, அந்தக் கோப்பைகள் பாலிதீன் உறைகளில் அடுக்கப்படுவது உள்ளிட்ட சில்லறை வேலைகளை இதனுடன் சேர்க்கவில்லை) நமது கைகளுக்கு வருகிறது. இந்த ஒவ்வொரு படிநிலையிலும், மின்சாரமும் கணிசமான அளவுக்குப் பயண்படுத்தப்படுகிறது.
இந்தக் கோப்பைகளைப் பயண்படுத்தும் முன் மரங்கள் வெட்டப்படுவது, கோப்பைகளில் பயண்படுத்தும் பாலிதீனின் மறுசுழற்சிக் காலம் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். மறுசுழற்சியற்ற அல்லது குறைவாக இருக்கக் கூடிய இதன் தீமைகளிலிருந்து விடுபட மிக எளிமையான ஒரு வழியிருக்கிறது.
மறுசுழற்சிப் பயண்பாடுள்ள பீங்கான் மற்றும் உலோகக் கோப்பைகளைப் பயண்படுத்துவதே அந்தத் தீர்வு. பீங்கான் கோப்பைகளைப் பொறுத்தவரை பதினைந்து ரூபாய் விலையில் தொடங்கி, ஆயிரக் கணக்கான ரூபாய் விலையுள்ளவை வரை பலதரப்பட்ட கோப்பைகள் கிடைக்கின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தமான வன்னங்களில், அல்லது தங்களுக்கு விருப்பமான சித்திரங்கள் வரையப்பட்ட அல்லது தாங்களே வரைந்த கோப்பைகளில் காபி, தேநீர் போன்ற பானங்களை அருந்தலாம். நிறுவன மேலிடத்தில் செல்வாக்குள்ள பதிவர்கள் (அட நான் அவரச் சொல்லலப்பா) யாராவது இருந்தால் அத்தகைய கோப்பைகளை நிறுவனத்தையே ஸ்பான்சர் செய்யப் பரிந்துரைக்கலாம். அப்படி யாரேனும் பரிந்துரைத்தால் அதுவே இந்தப் பதிவு எழுதிய நோக்கம் நிறைவேறியதற்கான சான்றாகும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
முக்கியமான பின் குறிப்பு: ஒவ்வொரு முறை காபி அருந்தும் போதும் சிரமம் பார்க்காமல் கோப்பையைக் கழுவவும்… ஒவ்வொரு முறை கோப்பையைக் கழுவும்போதும், கடைசியாக எப்போது பல்துலக்கினோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவும். முன்னது உங்களுக்கு நல்லது, பின்னது மற்றவர்களுக்கு நல்லது.
செவ்வாய், 29 ஜனவரி, 2013
பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி??
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி??
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு …பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி ),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது……இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .
மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons
பழைய சாதம்
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!
கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!
பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:
1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.
2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.
3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.
4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.
6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.
7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.
8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.
9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.
10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".
**
பழைய சாதத்தை எப்படி செய்வது:
பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.
ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும்.
மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)
மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
திங்கள், 28 ஜனவரி, 2013
கழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டுசெல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல், மற்றும் கழிவுப்பொருட்களை கண்காணித்தல்[1] ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தச்சொல் பொதுவாக மனித செயல்பாடுகளால் விளையும் கழிவுப் பொருட்களைக் குறிக்கும். மேலும் கழிவுப்பொருட்களால் மனிதனின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அழகியல் தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு தடுக்கவோ குறைக்கவோ மேற்கொள்ளப்படுகிறது. வள ஆதாரங்களை கழிவுப்பொருட்களில் இருந்து மீட்பதற்கும் கழிவுப்பொருள் நிருவாகம் தேவை. கழிவுப்பொருள் நிருவாகத்தில் தின்ம, நீர்ம, வளிம கழிவுகளையும் சில வேளைகளில் கதிரியக்க பொருட்களையும் கையாள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். ஒவ்வொருவகை கழிவுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட முறைகளை அதற்கான வல்லுனர்களின் உதவியுடன் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
கழிவு மேலாண்மை முறைகள் மேம்பாடு அடைந்த நாடுகள், மேம்பாடு அடைந்து வரும் நாடுகள், நகர்ப்புறம், கிராமப்புறம், குடியிருப்பு இடங்கள் மற்றும் தொழிலகங்கள் போன்ற ஒவ்வொரு நிலையிலும் வேறுபடும். நகரப்புறங்களில், இடர் விளையாத குடியிருப்பு மற்றும் அலுவலகக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு நகராட்சியினுடையதாகும். மற்றும் இடர் விளையாத வணிக, வணிகரீதியிலான மற்றும் தொழில்நிறுவனங்களில் இருந்து வெளிப்படும் கழிவுப்பொருட்களை தகுந்த முறையில் மீட்டு அகற்ற அவற்றின் உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.
வெள்ளி, 25 ஜனவரி, 2013
Paper Furniture / செய்திதாள் மறுசுழற்சி
வாதாபி hangover ல இருந்து நான் ஒரு வழியா வெளிய வந்தாச்சு... அதுனால back to track on home decor and recycling ...
OK OK படத்துல சந்தானம் சொல்ற famous dialogue factu factu factu... அதே மாதிரி நீங்களும் இந்த மூணு fact யும் முதல்ல பாருங்க...பின்னாடியே பதிவு தொடருது ... :-)
இந்த fact களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு பதிவோட இறுதில உங்களுக்கே புரியும்.
newspaper-recycling பதிவுல எப்படி செய்தி தாள்களை கொண்டு அழகானகூடைகள் செஞ்சு இருந்தாங்கன்னு பார்த்தோம்.மறுசுழற்சி ங்கறது
நம்ம அன்றாடம் பயன்படுத்துற ஒரு பொருளா மாறினா
எவ்வளவு நல்லா இருக்கும்... இப்போ இந்த படத்த பாருங்களேன்...
இது செய்தித்தாள்களையும் packing அட்டைகளையும் வச்சு தயார் பண்ணிருக்கற புக் செல்ப் / saree stand ... |
பேப்பர் ல furniture ஆ? எப்படி பண்ணுவாங்க...எந்த அளவுக்கு அது எடையை தாங்கும்..எந்த அளவுக்கு உழைக்கும்...எந்த அளவுக்கு உறுதியா இருக்கும்...இப்படி பல கேள்விகள் வந்துது...
அதுக்கான விடையை தேடும் போது தான் சென்னை அபிராமபுரத்துல இருக்குற
இந்த ESK Learning சென்டர் பத்தின தகவல்கள் கிடச்சுது.
இந்த மாதிரி பேப்பர் கொண்டு தயாரிக்க படும் furniture கள் இங்கதான் ஸ்பெஷல் children (Children with Learning Difficulties and Multiple Difficulties) கைப்பட தயாரிக்க படுதுன்னு தெரிஞ்சுகிட்டேன்...
இத கடந்த பதினைந்து வருடமா வெற்றிகரமா நடத்திகிட்டு வரவங்க அர்ச்சனா அச்சுதன் மேடம்....கீழே இந்த படத்துல இருக்காங்களே அவங்கதான்...
சரி எப்படி இந்த furniture கள தயாரிக்கறாங்க?இத கடந்த பதினைந்து வருடமா வெற்றிகரமா நடத்திகிட்டு வரவங்க அர்ச்சனா அச்சுதன் மேடம்....கீழே இந்த படத்துல இருக்காங்களே அவங்கதான்...
இந்த டெக்னாலஜி க்கு பேரு appropriate paper-based technology
(APT) ....இத ஜிம்பாப்வே யா சேர்ந்த Bevill Packer கண்டு பிடிச்சுருகார் .
இதன் படி பேப்பர் களையும் கார்ட்போர்ட் அட்டைகளையும் மைதாவை கொண்டு தயாரிக்க பட்ட ஒரு பசையினால லேயர் லேயர் ரா ஒட்டி அத பின் வெயில்ல நல்லா காய வச்சு ஒரு panel தயாரிக்க படுது...
Panel தயார் ஆன பின்னர் ஒவ்வொன்றும் grooves மூலமா இணைக்க படுது...
இதன் மேலே மறுபடியும் பசை தடவப்பட்டு பின்னர் water proof painting coat செய்ய படுது.90 கிலோ அளவு எடையை தாங்குமாம்...!!!!!
என்ன என்ன பொருட்கள் தயார் ஆகுதுன்னு பார்ப்போமா...
சிறுவர்கள் பெரியவர்கள் உட்காரும் மொட்டாக்கள் |
வரவேற்பறையில் போடப்படும் சென்டர் டேபிள்.... செய்தித்தாள் ஹோல்டர் உடன்!!!! |
அதிகம் பயன்படுத்தாத சாமான்கள், விருந்தினர் வந்தால் மட்டுமே உபயோக படுத்தும் தலையணை,போர்வைகள் போன்றவற்றை வைக்க, கொலு பொம்மைகள் வைக்க இன்னும் பலவற்றை store செய்ய உபயோக படுத்தலாம் ... |
சின்ன சின்ன அலங்கார பொருட்கள் வைக்க , உருளி வைக்க பயன்படுத்தலாம் .. |
உங்களுக்கு தேவை படுற கலர் கள்ல செஞ்சு வாங்கிக்கலாம்.. .உங்களுக்கு wood பினிஷ் வேணும்னு ஆசை பட்டீங்கன்னா அதையும் செஞ்சு தராங்க.... |
இதுதான் என்னோட favorite ... குழந்தைகளுக்கான study டேபிள்... |
உங்களுக்கு இந்த பொருட்கள் பிடிச்சு வாங்கனும்னு நினசீங்கன்னா அர்ச்சனாவ தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
O#34 N#15/2 subramaniam St,
Abhiramapuram, Chennai,
Tamil Nadu 600018
Mobile No: 98843-61562
Facebook id: https://www.facebook.com/#!/pages/ESK-Learning-Centre/306869449337342
அர்ச்சனா வோட Facebook id: https://www.facebook.com/#!/archana.achuthan
நீங்க சென்னையில் இருந்தா நேர்லயே போய் பார்த்து வாங்கலாம்..மற்ற இடங்களுக்கு courier செய்து தருகிறார்கள்.உங்களின் ஆர்டர் இன் பேரிலேயே பொருட்கள் தயார் செய்ய படும்.அதுனால உங்களுக்கு தேவையான கலர்களில் அளவுகளில் செய்து வாங்கலாம்.
எவ்வளவோ ருபாய் கொடுத்து மரச்சாமான்கள் , பிளாஸ்டிக் சாமான்கள் வாங்குகிறோம்...அதே அளவு உறுதியோடு இயற்கைக்கும் எந்த கெடும் விளைவிக்காத இந்த பொருட்களை வாங்கி உபயோக படுத்தலாமே...கொஞ்ச நாள் உபயோக படுத்திய பின் கலர் மாற்ற வேண்டும் இல்லை ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் இவர்களே செய்து தருகிறார்கள்.
உங்களுக்கு இன்னும் தகவல்கள்,பொருட்களின் விலை விபரங்கள் வேண்டும் என்றால் அர்ச்சனாவை அவரது facebook id il தொடர்பு கொள்ளுங்கள்.
அப்படியே மேல போய் அந்த facts a திரும்ப ஒரு முறை படிச்சு பாருங்க...
இந்த மாதிரி furniture கள் உபயோக படுத்தறது எவ்வளவு அவசியம் ன்னு
இன்னும் நல்லா புரியும்
குழந்தைகள் அறை அலங்காரம் with Dora தீம்
என்னங்க உங்க வீட்டு குட்டிக்கு dora ன்னா ரெம்ப பிடிக்குமா...
இந்த முறை அவங்க பிறந்தநாளுக்கு Doraவ மையமா வச்சு அவங்களுக்கு gift கொடுத்தa ரெம்ப சந்தோசபடுவங்கள்ள ...இங்க எனக்கு பிடிச்ச ஐடியா சில ஷேர் பண்றேன் பாருங்க...உங்க செல்ல குட்டியோட ரூம் அ அவங்களுக்கு பிடிச்ச dora வ வச்சு decorate பண்ணி கொடுங்களேன்.
Dora Bean bag Image:http://www.childrens-rooms.co.uk |
குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரியும் வாங்கனும்.... நமக்கும் அவங்க திங்க்ஸ் வைக்க ஒரு பொருள் வாங்கின மாதிரியும் இருக்கணும்னு நினைசீங்கன்னா இது நல்ல chioce ... மேல அவங்களோட புக்ஸ் வைக்கலாம்...கீழ toys வைச்சுக்கலாம்... குட்டீஸ்க்கும் சின்ன வயசுல இருந்து பொருட்கள அழகா எப்படி அடுக்கி வைக்குறதுன்னு கத்து கொடுத்த மாதிரியும் இருக்கும்.. Image:www.meijer.com |
இது usual தான்... பெட்ஷீட் and curtains image: homedesignr.blogspot.in |
இதுவும் ரெம்ப செலவு வைக்காத ஐடியா தான்... சுவரில் ஓட்டும் ஸ்டிக்கர்கள்... Image: www.besthomedesigns.org |
குட்டிஸ் க்கான குட்டி dressing டேபிள்...
Image:www.squidoo.com
|
எப்படியும் பிறந்தநாள் பார்ட்டி வைக்கும் போது நிறைய பொம்மைகள் சேர்ந்து விடும்.நீங்களும் பொம்மை வாங்குவதை விட இந்த மாதிரி செலக்ட் செய்து வாங்கலாம்.இந்த பிறந்தநாளுக்கு அசத்திடுவீங்கதானே ...
மெத்தை to sofa
உங்க வீட்டுல பழைய இலவம் பஞ்சு மெத்தை இருக்கா.... புதுசு வாங்கியாச்சு பழச என்ன பண்றது...use ஆகவே இல்ல...ன்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா...உங்களுக்குதான் இந்த ஐடியா...
Image Courtesy : Mr.Sharad sundar |
இங்க பாருங்க ஒருத்தர் எவ்வளவு சிம்பிள் ஆ அவரோட மெத்தையா sofa வா மாத்திருக்கார்... வீட்டுகுள்ள இல்லன்னாலும் பால்கனி ல யாவது போடலாமே...
மூங்கில் தட்டி / Bamboo Blinds
Image Courtesy: everythingsimple
சமீபத்தில் நான் டூர் போயிருந்த இடத்துல ஒரு resort ல மூங்கில் தட்டி வச்சு dining ஹால் full ஆ கவர் பண்ணி இருந்தாங்க...பாக்கவும் ரெம்ப அழகா இருந்துச்சு...ரூம் um கூல் லா இருந்துச்சு... என்னோட வீட்டு முற்றம் / ஓபன் varanthah க்கு ஒரு மூங்கில் தட்டி போடணும் ன்னு ஆசை வந்துடுச்சு... இந்த படத்துல இருக்குற மாதிரி roll-able தட்டி யா இருந்த நல்லா இருக்கும்...
image Courtesy:sarawakianaii |
நீங்களும் உங்க வீட்டு பால்கனி க்கு இத ட்ரை பண்ணி பாக்கலாமே...
image courtesy: ventolite |
பால்கனி ல மட்டும் இல்லைங்க..லிவிங் ரூம் ல இருந்து எல்லா ரூம் க்குமே இது அழகா தான் இருக்கும்...
Image Courtesy : Shiva Shakthi enterprises |
வேணுங்கற கலர் ல கூட கிடைக்கும் போல இருக்கு..ஆனா எனக்கு அந்த natural கலர் ஏ நல்லா இருக்குற மாறித்தான் இருக்கு...
Image Courtesy: creativeblossoming |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)