சனி, 21 மார்ச், 2015

சோம்பின் பயன்கள் ......

சோம்பின் பயன்கள் ......
ஆடவர் ,பெண்டிர் இருவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு காரணம் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, முறையற்ற உணவு பழக்க வழக்கம் ,நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல் ,வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் துரித உணவை வாங்கிச் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.
மேலும் பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, (மிக்சி கிரைண்டர் ,மைக்ரோவேவ் )ஆகியவற்றின் பங்கும் உண்டு.
போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதுதவிர, காலை பிள்ளைகளை பள்ளிக்கு /கல்லூரிக்கு அனுப்பியது முதல் மாலை அவர்கள் வீடு திரும்பும் வரையிலும் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது..இதை போன்ற வேண்டா பழக்கங்களால் உடலில் தேவையற்ற இடங்களில் கொழுப்பும் ஊளைசதையும் சேரும் அதனால் பல உடல் உபாதைகள் ஏற்பட வழி வகுக்கும் ....இப்படி அதிகப்படியாக சேர்த்த கொழுப்பை கரைக்க சோம்பு பயன்படுகின்றது .
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் சீன ,அரேபிய ,இந்தியர்களால் சமையல் மற்றும் மருந்து மூலிகையாக தொன்று தொட்டு
பயன்படுத்தப்பட்டு வருகின்றது .
வீட்டுச் சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் சோம்பு, சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகம், வெண்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது.
பெரும்பாலான உணவகங்களில் சாப்பிட்டு முடித்த பின் பில்லுடன் சிறிது சோம்பும் வழங்கப்படும் ..இது வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானத்துக்காக தருவார்கள் .
தாகத்திற்காக குடிக்கும் தேவையற்ற அதிக இனிப்பு சேர்த்த பானங்களை தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ள ஊளை சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.கண்ட நேரத்தில் நொறுக்கு தீனி சாப்பிடுவதை மற்றும் அளவற்ற பசியை சோம்பு குறைக்க உதவுகின்றது .
சோம்பில் உள்ள ஒரு வகை எண்ணெய் குடல் இரைப்பை பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு வாய்வு கோளாறு வயிறு உப்பசம் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உணவிற்கு பின்னர் இந்த தேநீரை அருந்துவது சிறந்த நலன் பயக்கும் .
வயிற்றுபிடிப்பு அஜீரணம் போன்ற தொல்லைகளுக்கு சோம்பு சிறந்த நிவாரணி .
சோம்பில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடலுக்கு மிக சிறந்தது .
அதிகப்படியான நச்சு நீர் உடலில் சேர்வதை சோம்பு தேநீர் அருந்துவதன் மூலம் வெளியேற்றலாம் .
சிறுநீரகங்களுக்கு மிக நல்லது சோம்பு தேநீர் .தொண்டை புண் ,தடுமல் இருமல் ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணி .
இரத்த அழுத்தை சீர் செய்ய வல்லது சோம்பு
.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது சோம்பு தேநீர் .
புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது ,வயிற்று போக்குக்கு சிறந்த மருந்து ,
சோம்பு சிறந்த மலமிளக்கி ,இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது ,
பார்வை குறைபாடுகள் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் சிறந்த மருந்து சோம்பு
சிறு பிள்ளைகளுக்கு உணவு செரிமானம் ஆகாமல் வயிறு வழியால் அவதிப்படும்போது சோம்பு தேநீர் சிறந்த பலன் தரும் .
சில பிள்ளைகளுக்கு விக்கல் அடிக்கடி வந்து தொல்லை தரும்அப்போது இந்த தேநீரை கொடுக்க உடனடியாக விக்கல் நிற்கும் . இரத்த சோகைக்கு சிறந்த மருந்து சோம்பு .குடலில் உள்ள சிறு புழுக்களை சோம்பு அழிக்க வல்லது .
வாயின் உட்புறம் ஏற்படும் சிறு புண்களை குணமாக்கும் .
சோம்பிலுள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் உடலுக்கு நலம் பயக்கும்
கர்ப்பிணி பெண்கள் சோம்பு தேநீரை அருந்த வேண்டாம் .தவிர்க்கவும் .
pms போன்ற மாதவிடாய் பிரச்சினைக்கு மெனோபாஸ் ,மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள் சோம்பு தேநீரை அருந்திவர நல்ல பலன் கிடைக்கும் .
பாலூட்டும் தாய்மார்கள் தினமும் ஒரு கோப்பை சோம்பு தேநீரை அருந்தி வர பால் சுரக்கும் .மேலும் கருப்பையிலுள்ள வேண்டா கழிவுகள் நீங்கும் .இவ்வளவு மகிமை நிறைந்த சோம்பினை தேநீராக மற்றும் அதன் கீரையை சமைக்கும்போதும் உணவில் சேர்த்து கொள்வது மிக நல்லது .
சோம்பு தேநீர்
இப்பொது அனைத்து பல்பொருள் அங்காடிகளிலும் சோம்பு தேநீர் பாக்கெட்டுகளில் விற்பனையாகின்றது .
நாமே வீட்டிலும் எளிய முறையில் சோம்பு தேநீர் தயாரிக்கலாம் .
மூன்று கோப்பை நீரை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும் .ஒரு மேசைக்கரண்டி முற்றிய சோம்பு விதைகளை எடுத்து சற்று இடித்து கொதிநீரில் போட வேண்டும் பிறகு அடுப்பை அணைத்து பாத்திரத்தை தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்
ஏழெட்டு நிமிடம் கழித்து அந்நீரை வடிகட்டி அருந்த வேண்டும் 

கொத்துமல்லி மருத்துவபயன்கள்

கொத்துமல்லி மருத்துவபயன்கள்
~~~~~~~~~~
மூலிகையின் பெயர் :- கொத்துமல்லி
தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM.
தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae)
பயன் தரும் பாகங்கள் :- முழு தாவரம்.
வளரியல்பு :- கொத்துமல்லி நன்செய்,, புன்செய் நிலங்களில் முக்கியமாக கரிசல்மண்,, செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும் காணப்படும். இதன் தாயகம் தென் ஐரோப்பா,, மற்றும் வட ஆப்பிரிக்கா, தென் மேற்கு ஆசியா ஆகும். பின் இது மத்திய ஆசியா, மெடட்டரேனியன், இந்தியா, தெற்கு ஆசியா, மெக்சிகன் டெக்கான், லேட்டின் அமரிக்கா, போர்ச்சுகஸ், சைனா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் ஸ்கேண்டிநாவின் ஆகய நாடுகளுக்குப் பரவிற்று. இதன் தண்டுகள் மென்மையாக இருக்கும். இது 50 சி.எம்.உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்து நீண்ட முப்பிறிவாக பசுமையாக நறுமணத்துடன் இருக்கும். இந்த இலையில் B, B12 & C வைட்டமின்கள் உள்ளது. சிறிய அடுக்கான வெள்ளை மலர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் முற்றி காய்கள் பச்சையாக இருக்கும். பின் காய்கள் காய்ந்தவுடன் மரக்கலராக மாறும். இந்த காய்கள் உருண்டையாக இருக்கும். இந்த விதைகளை தனியா என்று சொல்வார்கள். இதன் விட்டம் 3 – 5 மில்லி இந்த விதையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள் ஆனால் குறைந்த சதவிகிதம் தான் கிடைக்கும். இந்த எண்ணெய் மருத்துவ குணம் உடையது. இதில் வையிட்டமின் A,C & k உள்ளது. இதில் கேல்சியம், இரும்பு, மெங்னீசியம், பொட்டாசியம், ஜிங் உள்ளது. தோல் வியாதிய்யைக் குணப்படுத்தும். இது கார்ப்பு சுவையுடையது. தனியாவை வணிக ரீதியாகப் பயிரிட அந்த நிலத்தை தொழு உரமிட்டு நன்கு உழவேண்டும். காயவைத்து கட்டிகள் இல்லாமல் சமப்படுத்த வேண்டும். பின் தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். அதன் பின் சமப்படுத்தும் மரத்தில் சமஅளவாக முளைக்குச்சிகள் பொருத்தி ஏர் போல் ஒரு முறை ஓட்ட வேண்டும். பின் வேண்டுமென்றால் பாத்தி பிடித்துக் கொள்ளலாம். அதன் பின் தண்ணீர் பாய்ச்சவேண்டும். மானாவாரியாக இருந்தால் மழை வரும்போது விதைகள் முளைத்ததுக் கொள்ளும். தண்ணீர் பாச்சும் போது ஒரு வாரத்தில் விதைகள் முழைக்க ஆரம்பிக்கும். வாரம் ஒரு முறை தண்ணீர் பாச்ச வேண்டும். 90 நாட்க்களில் பூத்துக் காய்க்க ஆரம்பிக்கும். அதன் பின் தண்ணீர் பாச்சக்கூடாது. அதன் பின் செடிகளைப் பிடுங்கி சுத்தமான களத்தில் நன்கு காயவைத்து லேசாக தடியால் அடித்துத் தூற்றி எடுத்து தனியாவை ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டுவார்கள். ஆனால் கொத்துமல்லி இலை சமையலுக்கு மிகவும் தேவைப் படுவதால் வீட்டுத் தோட்டத்திலும் மாடித் தோட்டத்திலும் தேவைக்கு ஏற்ற வாறு கீரையாகப் பயிர் செய்வார்கள்.
மருத்துவப்பயன்கள் :- சிறுநீர் பெருக்கி, அகட்டு வாய்வகற்றி, ஊக்கமூட்டி, உரமாக்கு, நறுமணமூட்டி. தீர்க்கும் நோய்கள்- காச்சல், மூன்று தோசங்கள், நாவரட்சி, எரிச்சல், வாந்தி, இழுப்பு, மூலநோய், இதயபலவீனம், மயக்கம், இரத்தக்கழிசல், செரியாமை, வயிற்றுப் போக்கு, நெச்செரிச்சல், வாய்க்குளரல், சுவையின்மை, தலைநோய், உட்சூடு, குளிர்காச்சல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தொண்டைக்கட்டு, வரட்டு இருமல், கல்லீரல் பலப்படுத்த, இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், பயித்தியம், வாந்தி, விக்கல், தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்சுவலி, கட்டி வீக்கம், கண்ணில் நீர் வடிதல், கண் சூடு, பார்வை மந்தம், இடுப்பு வலி, சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய் கோணல், ஆகியவை குணமாகும். மன வலிமை மிகும். மன அமைதி, தூக்கம் கொடுக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.
கொத்துமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த சூடு தணியும், சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்ச்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
கொத்துமல்லியைச் சிறிது காடியில் அரைத்துக் கொடுக்கச் சாராய வெறி நீங்கும். புதிதாக ஏற்படும் வெட்டுக் கயங்களுக்கு கொத்தமல்லி பொடிசெய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும்.
கொத்துமல்லி விதை 100 கிராம், நெல்லி வற்றல், சந்தனம் வகைக்கு 50 கிராம் பொடி செய்து அதில் 200 கிராம் சர்கரை கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வரத் தலைச் சுற்றல், நெஞ்செரிவு, வாய்நீரூரல், சுவையின்மை ஆகியவை தீரும்.
கொத்துமல்லி 300 கிராம் சீரகம், அதமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை, சதகுப்பை வகைக்கு 50 கிராம் இளவறுப்பாய் வறுத்துப் பொடித்துச் சலித்து 600 கிராம் வெள்ளைக் கற்கண்டுப் பொடி கலந்து (கொத்துமல்லி சூரணம்) காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உட்சூடு, குளிர்காச்சல், பயித்தியம், செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, தாது இழப்பு, பெரு ஏப்பம், நெஞ்செரிவு, நெஞ்சுவலி ஆகியவை தீரும். நீடித்துக் கொடுத்துவரப் பலவாறான தலை நோய்கள், கண்ணில் நீர் வடிதல், பார்வை மந்தம், இடுப்புவலி, உட்காய்ச்சல், சிந்தனை தெளிவின்மை, கல்லடைப்பு, வலிப்பு, வாய்கோணல், வாய்க்குளரல் ஆகியவை தீரும். மனவலிமை மிகும்.
கொத்துமல்லி இலை, சிரகம் சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கசாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி பித்த கிறுகிறுப்பு நீங்கும்.

தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..


தொட்டி மற்றும் பைகளில் உருளைக்கிழங்கு வளர்க்கும் முறை ..
மண் தொட்டி அல்லது பிளாஸ்டிக் வாளியில் பாதி அளவிற்கு மட்டும் மண் + காய்ந்த இலை,
தழை, மண்புழு உரம் கலந்த கலவையை போடவேண்டும்.
நன்றாக விளைந்த உருளைகிழங்கை பாதியாக வெட்டி , வெட்டிய பாகம் கீழே இருக்குமாறு
மண்ணில் ஊன்றி வைக்கவும்.
செடி ஓரளவு வளர்ந்ததும் மேலும் கொஞ்சம் மண்ணை போடவேண்டும்.
முதலில் மொத்தமாக போடாமல் இவ்வாறு செய்வதால் கிழங்கு நன்கு திரட்சியாகவும், அதிக எண்ணிக்கையிலும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மற்றொரு முறை ....
வீட்டில் வாங்கி வைத்த கிழங்குகள் சில நேரம் முளை விட்டிருக்கும் அல்லது விதைக்கவென நாமே chitting முறையில் முளைக்க வைக்கலாம் ..
நன்கு முற்றிய கிழங்குகளை முட்டை வைக்கும் கார்ட்போர்ட் முட்டை பெட்டியில் செங்குத்தாக நிற்க வைத்து ஒளிபடும் இடத்தில் வைக்க வேண்டும் ,
இவை தானாக சில நாளில் முளைக்கும் (1.5 செண்டி மீட்டர் அளவு வளர்ந்துவிடும் ) ...
அப்படி முளைத்த கிழங்குகளை கோணிப்பை /கருப்பு பாலித்தீன் பை போன்றவற்றில் கலப்பு உர மண்
நிரப்பி வளர்க்கலாம் .
பைகளில் அடிப்பாகத்தில் நீர் வெளியேற துளைகள் இட வேண்டும் ..
பையில் பாதி அளவுக்கு சுமார் 30 செ.மீ அளவுக்கு கலப்பு உரமண்ணை இட்டு அதில் முளைவிட்ட கிழங்குகளை புதைத்து அதன்மேல் மீண்டும்கலப்பு உர மண்ணால் மேலும் 15 செ .மீ உயரம் வரை நிரப்பி மூட வேண்டும்
மேற்பகுதி பையின் விளிம்பு பாகத்தை வெளிப்புறமாக மடித்து விட வேண்டும் .
இந்த பையை நன்கு சூரிய ஒளி படும் இடத்தில நான்கு செங்கல்களின் மேல் வைத்து ,தினமும் நீர் ஊற்றி
வர வேண்டும் .
நத்தை போன்றவை செடியை அண்டாதிருக்கவும் நீர் வெளியேற வசதியாகவும் இந்த செங்கல்கள் பயன்படும் .
சுமார் மூன்று வாரத்தில் இலை முளைத்து செடி வளர ஆரம்பிக்கும் .
அவை மேலும் 15 செண்டி மீட்டர் உயரம் வளர்ந்ததும் பையின் மேற்பக்கத்தை உட்புறம் பிரித்து விட்டு மேலும் சிறிது கலப்பு உரத்தை இட வேண்டும் .
செடி வளர வளர பையை விரித்து விட வேண்டும் .
இரண்டு மாதத்தில் பூ விட துவங்கும் ,இலைகளும் வாட ஆரம்பிக்கும் இது அறுவடைக்கு உகந்த நேரம் .
இப்போது கிழங்கை மண்ணிலிருந்து அறுவடை செய்து எடுக்கலாம் .
பைகளில் வளர்க்கும்போது உருளைகிழங்கு தேவையற்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து
தவிர்க்கப்படுகின்றது .
பத்து கிலோ அரிசி கோணிப்பையில் 5 இலிருந்

கடுக்காய்

கடுக்காய் - மருத்துவ பயன்கள்
~~~~~~~
மூலிகையன் பெயர் -: கடுக்காய்
தாவரப்பெயர் –: TERMLNALIA CHEBULA.
தாவரக்குடும்பம் - : COMBRETAECEAE.
வேறு பெயர்கள் –: அமுதம்.
வகைகள் –: ஏழு வகைப்படும். அவை அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி மற்றம் திருவிருதுதம் என்பன.
பயன் தரும் பாகங்கள் –: காயின் தோல், தழைகள், பிசின் மற்றும் மரப்பட்டைகள்.
வளரியல்பு –: கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல் தான் வளரும். இதன் தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான சீனா, இலங்கை, மலேசியா வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இது சுமார் 60 அடி உயரத்திற்கு மேல் வளரக் கூடியது. கருமையான கெட்டியான பட்டைகளையுடையது. அதன் அடிபாகம் சுற்றளவின் விட்டம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இது குளிர் காலத்தில் இலையுதிர்ந்து மார்ச்சு மாத த்தில் துளிர் விடும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக சிறிது மணத்துடன் காணப்படும். சில வகைப் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்தாக பச்சை நிறத்துடன் காணப்படும். பழுத்து முற்றிய போது கரும்பழுப்பு நிறமாக இருக்கும். இதன் நீளம் 2 – 4 செண்டிமீட்டரும் அகலம் 1 – 2 செண்டிமீட்டரும் இருக்கும். நீண்ட ஐந்து பள்ளங்கள் தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டுனுள் கொட்டை இருக்கும். இது மருத்துவத்துக்கு ஆகாது. விசத்தன்மை கொண்டது. கடுக்காய் முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளன. மரங்கள் உள்ள நிலம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என பலவகைகள் உள்ளன. புதுக்காயைப்போட்டு முழைக்க வைப்பார்கள். கடுக்காயை சாக்கில் போட்டு ஒருஆண்டு கூட இருப்பு வைக்கலாம், கெடாது.
கடுக்காயின் மருத்துவப் பயன்கள் –: கடுக்காயில் ஆறு சுவையில் உப்பு சுவை தவிர மற்ற ஐந்து சுவைகள் உள்ளன. வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். காது நோய் குணப்படுத்தும். கடுக்காய் வலிமையூட்டி, நீர்பெருக்கி, உள்ளழலகற்றி, புண்கள், கண்நோய், இருமல், காமாலை, கை கால் நமச்சல், தலைநோய், இரைப்பு, நாவறட்சி, மார்பு நோய், மூலம், மேகம், வயிற்றுப்பொருமல், விக்கல் போன்றவைகளை குணப்படுத்தும். காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் இதன் பொடிகளை உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாளலாம் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தில் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இதன் பொடிகளைச் சேர்த்து "திரிபலா" என்ற மருந்தைத் தயார் செய்கிறார்கள். கடுக்காயின் தோலில் " டானின்" என்ற ரசாயனப் பொருள் தோல்களைப் பதனிடவும், துணிச்சாயம், சிமிண்ட், சிலேட் நிறமேற்ற, நிலக்கரி சுத்தம் செய்ய இதனைப் பயன் படுத்திகிறார்கள். இதன் சக்கை காகிதம் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. பழங்காலத்தில் கட்டிடங்களுக்கும், கோயில் கட்டவும் வலிமைக்காக இதன் சாற்றைப் பயன் படுத்தினார்கள்.
கடுக்காய்ஓட்டைத்தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டுவர, ஜீரணசக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய்த் தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்து கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டுவர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர்விட்டுப் பாகுபோலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக் கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல் புண், சுவாசகாசம், மூலம், வாத நோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த் தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்று விடும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த 'திரிபலா' சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல் பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும் புதினாக்கீரை

ரத்தத்தை சுத்திகரிக்கும் புதினாக்கீரை

நல்ல ரத்த உற்பத்திக்கும், ரத்த சுத்திகரிப்புக்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது புதினாக்கீரை. ஒரு வகையான
நல்ல மணமுடைய இந்தக்கீரையை மணத்துக்காகவும் சுவைக்காகவும் குழம்புகளில் சேர்ப்பதுண்டு. புதினாக்கீரையை துவையலாகச் செய்து சாப்பிட்டால் பலவிதமான வயிற்றுக்கோளாறுகள் அகலும். கடுமையான வயிற்றுபோக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு.
கர்ப்பிணிபெண்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் புதினாவை பயன்படுத்துவது உண்டு. பழுப்பு சர்க்கரையுடன் காடி சேர்த்து பாகாகக் காய்ச்சி அதனுடன் புதினா இலைச் சாற்றை கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி வாந்தி ஏற்படும் கர்ப்பிணிகளுக்கு இந்த பாகில் இரண்டொரு துளி நாக்கில் விட்டு சப்பச்செய்தால் வாந்தி நின்று குணம் தெரியும்.
புதினாக்கீரையை கஷாயம் செய்தும் பயன்படுத்தலாம். புதினா இலைகளை சுத்தம் செய்து நைத்து நீர் விட்டு நீரை பாதியளவு சுண்டக்காய வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். சிறு குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்தால் இந்தப் புதினா கஷாயத்தில் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.
வல்லாரை புதினா சாதம்
தேவையான பொருட்கள்
வல்லாரைக்கீரை-சிறியகட்டு
புதினா-1கட்டு
புளி- பாக்கு அளவு
காய்ந்தமிளகாய்-6
கடுகு-2டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டீஸ்பூன்
எண்ணெய்- 2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எப்படி சமைப்பது?
புதினா வல்லாரை கீரைகளை உதிர்த்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, மூன்றையும் எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். இவற்றோடு புளி, உப்பு, புதினா வல்லாரைக்கீரைகளையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். சூடான சாதத்தோடு இந்த விழுதைக் கலந்து விட்டால் சுவையான ருசியான வல்லாரை புதினா சாதம் தயார். உப்பு, புளி உரைப்போடு கூடிய இந்த சாதத்துக்கு தொட்டுகொள்ள மொறுமொறு வத்தல் பொரித்துக்கொண்டால் பிரமாதமாக இருக்கும்
புதினா வல்லாரைகீரையின் பயன்கள்
ருசியின்மை, வாந்தி, மற்றும் உஷ்ண நோய்களை தீர்க்கும். வாயு பிரச்சனைகளை போக்கும். மலச்சிக்கல் அகற்றும். நினைவாற்றலுக்கு அதிக விசேஷமான கீரையாகும்.

வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரியுமா ?

வேப்பிலையின் பயன்கள் பற்றி தெரியுமா?
~~~~
வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.
வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும். தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.
வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
வேப்பங்கொழுந்தை பசு மோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண்ணில் பூசினால் சீக்கிரம் காயம் ஆறும். வேப்பங்கொழுந்து இலையை அரைத்து ஒரு கோலி அளவு எருமை தயிரில் மூன்று நாட்கள் உள்ளுக்குள் உட்கொண்டு வந்தால்தொண்டைக்கறமல் குணமாகும். வேப்பம் பூ, மிளகு, இவை இரண்டையும் சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறு நீங்கும். வேப்பிலையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரில் முகம் கழுகி வந்தால் முகம் பளபளப்பு அடையும். மழைக்காலங்களில் ஈக்கள் தொல்லை அதிகமாகும்.
ஈக்கள் தொல்லையை விரட்ட வேப்பிலையை கசக்கி டைனிங்டேபிளில் வைத்து விட்டால் ஈக்கள் வராது.மாத விலக்கின் போது வயிற்றுவலியால் அவதிப்படுபவர்கள் 3 கொத்து வேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொதிக்கும் முன்னர் மஞ்சள் சேர்த்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். தலையில் நீர் கோர்த்து தலைவலியால் அவதி படுபவர்கள் இந்த வேப்பிலை மஞ்சளை நன்கு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் தலைவலி குணமாகும்.

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி

ரத்தத்தை சுத்தப்படுத்தும் கரிசலாங்கண்ணி
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைவதால் இரத்தத்தில் உள்ள நீர்த்தன்மை வற்றிப்போகிறது. இதனால் இரத்தம் பசைத்தன்மையடைகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுகிறது.
இவற்றை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் நீர்த்தன்மையை உண்டாக்குவற்கு கரிசலாங்கண்ணி கீரையை சூப் செய்து அருந்தலாம். அல்லது காயவைத்த பொடியை பாலில் கலந்தோ, தேன் கலந்தோ சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன் உடலும் வலுப்பெறும். கரிசலாங்கண்ணி உடலுக்கு ஆரோக்கியத்தையும் புத்துணர்வையும் தருவதால் இதற்கு மரணமாற்று மூலிகை என்ற பெயரும் உண்டு.
கரிசலாங்கண்ணி நரம்புத்தளர்வை போக்கும். மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்வு பெறச் செய்யும். ஆஸ்துமா, இருமல், ஈளை போன்ற பாதிப்பு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணி பொடியுடன் திப்பிலி சூரணம் சேர்த்து தினமும் ஒருவேளை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் சுவாச காச நோய்கள் தீருவதுடன் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
இதய அடைப்பை நீக்கி இதயத்தை சீராக செயல்பட வைக்கும். மண்ணீரல், சிறுநீரகத்தைப் பலப்படுத்தும் தன்மை கரிசாலைக்கு உண்டு. குழந்தைகளுக்கு உண்டாகும் மந்த நோய்களைப் போக்கும். கண்பார்வையை தெளிவுபெறச் செய்யும். கண் நரம்பு படலங்களில் உள்ள நீரை மாற்றி பார்வை நரம்புகளை பலப்படுத்தும் கண் வறட்சியைப் போக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை குணமாக்கும்.
தொப்பையைக் குறைக்க தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும். கரிசலாங்கண்ணி இலையை நீர் விடாமல் சாறு எடுத்து அதை சோப்பு போடப்படாத வெள்ளைத் துணியில் நனைத்து நிழலில் உலர்த்தி, சுருட்டி திரியாக்கி சுத்தமான நெய் விளக்கில் எரித்தால் கருப்பு பொடியாக வரும். இதையே “கண் மை” ஆக நம் முன்னோர்கள் உபயோகித்தனர்.
இதனால் கண்கள் பிரகாசமாக ஆவதுடன், கண்கள் குளிர்ச்சி அடைந்து முகப்பொலிவு உண்டாகும். இது பழங்கால பாட்டி சொன்ன வைத்தியமாகும்