செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!

கணினிகள் , மடிக்கணினிகள், மின் இசைக் கருவிகள், செல்போன்கள், காமிராக்கள், டேப்ரிக்கார்டர்கள், பென்டிரைவ்கள், பிளாப்பிகள், சிடிக்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், கால்குலேட்டர்கள்,தொலைபேசிகள், தொலை நகலிகள், கைக்கடிகாரங்கள், மின்னணுப் பலகைகள், அச்சிடும் கருவிகள், மின் கலங்கள் உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகளிலிருந்து ஒதுக்கப்படுவைகள் மின்னணுக் கழிவுகள் ஆகும்.

சென்ற நூற்றாண்டின் இறுதியில் மின்னணுத் தொழிற்சாலைகள் மற்றும் மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மிக வேகமாக வளர்ந்தது. பொருளாதார தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. நுகர்வோர்களை குறிவைத்து தயாரிப்புகள் செய்யப்பட்டன.

நோக்கியோ , சாம்சங் , சோனி எரிக்சன், மோட்ரோலா, சோனி முதலிய பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவிலுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மின்னணுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன.

இந்தியாவில் எதிர்வரும் பத்தாண்டுகளில் 500% மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளின் அளவு இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஓர் ஆண்டில் மட்டும் 1200 மெட்ரிக் டன்கள் எலெக்ட்ரானிக் கிராப் உருவாக்கப்படுகிறது. பெங்களுரில் மட்டும் ஆண்டுக்கு 8000 மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுகிறது.

சீனா, தாய்லாந்து முதலிய நாடுகளிலிருந்து கிடைக்கும் மலிவான மின்னணுப் பொருட்கள், இந்தியாவிற்குள் அதிக அளவில் தாராளமாக இறக்குமதி செய்யப்படுகிறது. மலிவு விலைக்கு வாங்கப்படும் இப்பொருட்கள் குறைந்த காலங்களிலேயே மின்னணுக் கழிவுகளாகி விடுகின்றன.

உபயோகமற்ற மின்னணுக் கழிவுகளிலிருந்து அபாயகரமான நச்சுப் பொருட்கள் வெளியேறி, மனிதர்களுக்கு புற்று நோய், நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு முதலிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், மின்னணுக் கழிவுகள் மண்ணையும் , நீரையும், காற்றையும் மாசடையச் செய்கின்றன.

மின்னணுக் கழிவுகளில் நச்சுத் தன்மையுள்ள காரீயம், பாதரசம், குரோமியம், இரும்பு, காப்பர், அலுமினியம், தங்கம் முதலிய உலோகங்கள் கலந்து உள்ளன.

காப்பரிலிருந்து ‘ டையாக்சின் ‘ என்னும் நச்சுப் பொருள் வெளியாகிறது. இதனால் காற்று மாசடைகிறது. கணினிகள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் ‘டாக்சி சையனைடு‘ என்னும் நச்சுப் பொருளை வெறியேற்றுகிறது.

மின்னணுக் கழிவுகளில் உள்ள பாதரசம், மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. தசைகளை பலகீனப் படுத்துகிறது. விலங்குகளின் உயிர்களுக்கு உலை வைக்கிறது. கருவுருதல், இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.

மின்னணுக் கழிவுகளில் கலந்து உள்ள ‘ சல்பர் ‘மனிதர்களின் கல்லீரல், இதயம், கண், தொண்டை, நுரையீரல், நரம்பு முதலியவற்றை சீர்கேடு அடையச் செய்கிறது.

புதுடெல்லி, பெங்களூர், சென்னை, மும்பை முதலிய பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. கங்கை நதியும் மின்னணுக் கழிவுகளிலிருந்து தப்பவில்லை. மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் காற்று மண்டலம் பாதிக்கப்படுகிறது. மின்னணுக் கழிவுகளால் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைகிறது. மின்னணுக் கழிவுகள் மக்கும் தன்மையற்ற திடக்கழிவுகளாக உள்ளதால் சுற்றுச் சூழலின் தன்மையையும், எழிலையும் சீரழிக்கிறது.

மின்னணு பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது, இந்தியாவில் எதிர்காலத்தில் சுற்றுச் சூழல் பாதிப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

மின்கலம் (பேட்டரி) பயன்படுத்திய பின்னர் குப்பையில் தூக்கி வீசப்படுகின்றன. மின்கலத்தில் உள்ள உலோகத்துகள்களானது நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. மின்கலங்களை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

அய்ரோப்பிய யூனியன் 2005 ஆம் ஆண்டு ஒரு திடக்கழிவுச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டத்தின்படி பயன்படுத்த முடியாத மின்னணு சாதனங்களைச் சேகரிப்பது, மறு சுழற்சி செய்வது மற்றும் கழிவுகளை அகற்றுவது முதலியவைகளை, அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பொறுப்பாகும். மேலும், இந்தப் பணியை உள் நாட்டிலேயே செய்ய வேண்டும். இந்த அபாயகரமான மின்னணுக் கழிவுகளை, பயன்படுத்த முடியாத சாதனங்களை வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா மின்னணுக் கழிவுகளை உருவாக்கும் உலகத் தலைவனாக உள்ளது. மேலும், உலக அளவில் 80% மின்னணுக் கழிவுகளை அமெரிக்கா கொட்டுகிறது. அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகளை ஏற்படுத்துகிறது . அமெரிக்காவில் ஆண்டு ஒன்றுக்கு 30 மில்லியன் கணினிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

உலகில் பல நாடுகள் மின்னணுக் கழிவுகளை தாங்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இக்கட்டுப்பாடுகளை அமெரிக்கா தனது காலில் போட்டு மிதிக்கிறது. மென் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை அதிகம் கொண்ட அமெரிக்காவில் தான் மின்னணுக் கழிவுகள் சேருவதும் அதிகம். மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகளை அறிந்துள்ள அமெரிக்கா அதனை வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்துவிட்டு, தனது நாட்டின் சுற்றுச் சூழலை காப்பாற்றிக் கொள்வதில் உறுதியாக உள்ளது. மேலும், தொண்டு நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும். அறக்கட்டளைக்கும் உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு , இந்தியா போன்ற நாடுகளுக்கு பழுதடைந்த மற்றும் செயல்திறன் குறைந்த கணினிகளையும், பிற மின்னணுப் பொருட்களையும் அனுப்பி வருகின்றது. பேசில் ஒப்பந்தத்தில் (Basel Agreement) அமெரிக்கா கையொப்பமிட மறுத்துவிட்டது.

ஓரு கணினியில் 1000- க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளது. அதில் 50 பொருட்கள் நச்சுத் தன்மை கொண்ட உலோகங்களாலும், கலவைகளாலும் ஆனது. பழுதடைந்து கணினிகளிலிருந்தும், அதன் பாகங்களிலிருந்தும் நச்சு கசியத் துவங்குகிறது.

சென்னை துறைமுகத்தில் வருமானவரி அமலாக்கப் பிரிவினர் நடத்திய சோதனையில், பல கன்டெயினர்களில் காலாவதியான கணினிகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் ஆஸ்திரேலியா , கனடா, கொரியா, புருனே முதலிய நாடுகளிலிருந்து விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்டது.

இந்தியக் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் மின்னணுக் கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. இந்தியாவை மின்னணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மேலை நாடுகள் மாற்றிவருகின்றன.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மறு சுழற்சியில் ஈடுபடுபவர்கள், உபயோகிப்பாளர்கள் முதலியோர் இணைந்து செயல்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்திட உபயோகிப்பாளர்களிடம் கணினிகளுக்கு 3.94% லிருந்து 5.95% வரையும், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு 3.4% லிருந்து 5% வரையும், செல் போன்களுக்கு 3.4% லிருந்து 5% வரையும் சேவைத் தொகை, விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது. ஆனால், மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் ஈடுபடுவதில்லை.

மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் புதுடெல்லியில் மட்டும் 30, 000 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நவீன இயந்திரங்கள் இல்லாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல், வெறுமனே சுத்தியல் , திருப்புளி கொண்டு பெண்களும், குழந்தைகளும் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது உடலில் காயங்கள் ஏற்படுதல், உடல் நல பாதிப்புகள் அடைதல், காற்றோட்டமில்லாத சூழல், முகம் மூடுவதற்கு மாஸ்க் , முகமூடிக்கவசம் முதலியவைகள் இல்லாதது. உயர் தொழில் நுட்ப நவீன கருவிகள் வழங்கப்படாதது முதலிய மோசமான நிலைமகள் நிலவி வருகிறது. மேலும், மின்னணுக் கழிவுகளிலிருந்து சில உலோகங்களைப் பிரிப்பதற்கு, சுத்தப்படுத்துவதற்கு வீரியமுள்ள அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலங்களினால் மனித உடலிலும், தோலிலும் பாதிப்புகள் உண்டாகிறது.

மின்னணுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், நகராட்சி அமைப்பினர், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் , கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மின்னணுக் கழிவுகள் மேலாண்மை குறித்து திட்டமிட வேண்டும். மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு தகுந்த முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

நச்சுத் தன்மையுள்ள மின்னணுக் கழிவுகள் குறித்தும் சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும் மனித உடலநலப் பாதிப்புகள் குறித்தும் சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் குறித்து சட்டங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெளிவாக ஏற்படுத்தப் படவேண்டும்.

மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட , மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகம், மாநில அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் முதலியவற்றின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் மத்திய சுற்றுச் சூழல் கட்டப்பாட்டு வாரியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய சுற்றுச் சூழல் கட்டுப்பாட்டு வாரியம் உதவி புரிந்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கு தேசிய, மாநில அளவிலான செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்திய சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்ப தொழிற்கழகம், தகவல் தொழில் நுட்பத் துறை, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் முதலிய அமைப்புகள் இணைந்து மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும் , மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் வழிகாட்டுதல் அளித்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றவும், மறு சுழற்சி செய்யவும், அதில் உள்ள உலோகப் பொருட்களை பிரித்தெடுப்பதற்கும், அந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு பயிற்சியும், விழிப்புணர்வும் கிடைக்கச் செய்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும், மேலாண்மை செய்வதற்கும் மத்திய , மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கிட வேண்டும்.

மின்னணுக் கழிவுகள் பிற நாடுகளிலிருந்த கடத்தி வரப்படுகிறதா? என்பதை நாட்டு எல்லைகளிலும், கடலோரங்களிலும் தீவரமாக கண் காணித்திட வேண்டும்

மின்னணுக் கழிவுகளை அழிப்பதற்கும், மறு சுழற்சி செய்வதற்கும் தயாரிப்பாளர்களே முழு பொறுப்பாக்கப்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை அகற்றவும், அழிக்கவும் பொது அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் , தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கும், மறு சுழற்சி செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

மின்னணுப் பொருட்கள் தயாரிப்புகளில், மிகவும் அதிக நச்சுத் தன்மை கொண்ட காரீயம், பாதரசம், காட்மியம், குரோமியம் முதலிய உலோகங்கள் பயன்படுத்துவதை குறைத்திட வேண்டும்.

பழைய மின்னணுப் பொருட்களை கொடுத்து, புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும். பழைய மின்னணுப் பொருட்கள் சேகரிப்பு மையங்களை அரசு அமைத்திட வேண்டும்.

மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்திடவும், அழித்திடவும் உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளை ஈடுபடுத்திட வேண்டும்.

காரீயம் இல்லாத மின்னணு பொருட்கள், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து எந்த முறையிலும் மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்யப்படுவதை முற்றும் தடை செய்திட வேண்டும்.

கல்வி நிறுவனங்கள், நூல் நிலையங்கள், அறக்கட்டளைகள், சமுதாய நல வளர்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றிற்கு, வெளிநாடுகளிலிருந்து பயன்படுத்தப்பட்ட மின்னணுப் பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என மத்திய அரசு 13-05-2010 அன்று முதல் தடை விதித்துள்ளதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

பெங்களுருக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள மின்னணுக் கழிவுகள் மறுசுழற்சி பணிமனையைப் போல் பிற இடங்களிலும் அமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் .

மின்னணுக் கழிவுகள் குறித்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படச் செய்திட வேண்டும். மின்னணுப் பொருட்கள் விற்பனை பொருட்காட்சிகள் நடத்திட விதிமுறைகள் கடுமையாக்கப் பட வேண்டும். மின்னணுக் கழிவுகளை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். மின்னணுக் கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுபவர்களை முறைப்படுத்த, பாதுகாத்திட முறையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

பழைய பிளாஸ்டிக் பாட்டிலை உபயோகித்து நெல் நாற்றாங்கால் தயாரித்தல்

காலியான தேவையற்ற 2 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலை, நீள் வாட்டத்தில் வெட்டி, நெல் நாற்றை வளர்பதற்கு உபயோகப்படுத்தலாம்.

பாட்டிலின் இந்த பாதி பகுதியை, வண்டல் மண், மண்புழு உரம் மற்றும் நெல் உமியை 3:2:1 விகித கலவையை கொண்டு நிரப்ப வேண்டும். தோராயமாக, ஒரு பாதி பாட்டிலுக்கு, 300 கிராம் கலவை தேவைப்படும்.
அமிர்தகரைசல் /பிஜாமிர்த்துடன் (இயற்கை உரங்கள்) நேர்த்தி செய்யப்பட்ட விதையை இந்த பாட்டிலில் உள்ள படுக்கையில் விதைக்க வேண்டும். ஒவ்வொரு படுக்கையிலும், 10 கிராம் விதையை விதைக்க வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, நீர் ஊற்றி விதை படுக்கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.

நாற்றுகள், பத்து தினங்களில், நடுவதற்கு தயாராகிவிடும். ஒரு ஹெக்கடரில் நடுவதற்கு, பின்வருபவை தேவையானவை;

- காலிபாட்டில் எண்ணிக்கை
(பாதியாக வெட்டப்பட்டவை) - 625
- விதை - 6.3 கிலோ
- வண்டல் மண் - 93.8 கிலோ
- மண்புழுஉரம் - 62.5 கிலோ
- சாம்பல் - 31 கிலோ
- தயாராகும் நாற்றுகள் - 2,00,000

இந்த முறையை, நகரத்தின் அருகாமையில் உள்ள கிராமங்களில் இடம் மற்றும் வேலையாட்கள் நெருக்கடியான தருணத்தில் உபயோகிக்கலாம்.

- திரு. சஞ்சய் பயேல்,ஜவகர் தல், தானே

மூலம்: இயற்கை சாகுபடி முறைகள்,
தொழில்நுட்ப கூட்டுறவு திட்டம்,FAO, நியுடெல்லி மற்றும் NCOF , காசியாபாத்.
தயாரித்தது: மகாராஷ்டிர இயற்கை விவசாய குழு (MOFF)

பாதுகாக்கப்படுமா புவி?

இந்த உலகம் எப்படி உருவானது என்பதற்கு பல்வேறு காரணங்களை விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். அதே போல் புவி தினம் உருவானதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. இன்றைய தினம் கொண்டாடப்படும் இந்த புவி தினம், 1970-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் ஒரு சில இடங்களில் நடத்தப்பட்ட புவி தினக் கடைப்பிடிப்பு, இன்று உலகெங்கும் 140-க்கும் அதிகமான நாடுகளில் கொண்டாடப்படுகிறது. புவி தினம் உருவான வரலாறையும், அதன் வளர்ச்சியையும் பற்றிய விவரம்:-

புவியின் பாதுகாப்பையும், அதன் வளத்தையும் மேம்படுத்தும் நோக்கில் புவி தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் கடந்த 1969-ம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், ஜான் மகொநெல் என்பவர் பூமிக்கென்று ஒரு தினம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

குறிப்பாக, பூமியின் வடக்கு கோளத்தில் வசந்த காலம் தொடங்கும் மார்ச் 21-ம் தேதியை, புவி தினமாக கொண்டாடலாம் என்றும் யோசனை கூறினார்.இதனை அப்போதைய ஐ.நா பொது செயலாளரும் ஏற்றுக் கொண்டார். ஆனால், தற்போது கொண்டாடப்படும் புவி தினத்தின் காரணகர்த்தா ஆகக் கருதப்படுபவர் டெனிஸ் ஹேய்ஸ்.

1970-ம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கூடிய மாணவர் குழு ஒன்று டெனிஸ் ஹேய்ஸ்ன் புவி தினக் கொண்டாட்டம் தொடர்பான திட்டங்களை கேட்டறிந்தது. இதையடுத்து நியூயார்க் நகரில் முதலாவது புவி தினம் கொண்டாட திட்டமிட்டது.சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்ற இந்த புவி தினத்தை பல முன்னணி தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பின. அதே காலகட்டத்தில் பிலடெல்பியா நகரின் ஃபர்மவுண்ட் பூங்காவில் புவி தினம் கொண்டாடப்பட்டது.

அதன் பின்னர் வெவ்வேறு கால கட்டங்களில் புவி தினம் கொண்டாடப்பட்ட நிலையில், 20-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. சுமார் 141 நாடுகளில், 2 கோடி மக்களை ஒன்று திரட்டி நடத்தப்பட்ட 1990-ம் ஆண்டு புவி தினக் கொண்டாட்டம், ரியோ டி ஜெனிரோவில் 1992-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. பூமி மாநாட்டிற்கு பெரும் தூண்டுகோலாக இருந்தது.

இதேபோல் புத்தாயிரமாவது ஆண்டில் நடந்த புவி தினம் கொண்டாட்டத்தில் 5 ஆயிரம் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஒருங்கிணைந்து, 183 நாடுகளில் பூமியை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தின. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்பட்ட புவி தினத்தில் உலகெங்கும் ஒரு கோடி பேர் பங்கேற்றனர்.

இதன் எதிரொலியாக 2009-ம் ஆண்டு, புவி தினத்தை, சர்வதேச பூமி அன்னை தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. பூமியும் அதன் சுற்றுச்சூழல் அமைவு ஆகியவையே மனிதர்களின் வீடுகள். எனவே, பூமியை இயற்கையுடன் ஒருங்கிணைப்பது அவசியம் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுகள், வாகனப் புகை, ரசாயன உரங்கள், அணு ஆயுத சோதனை என பல்வேறு வழிகளில் பூமித் தாயின் பூவுடலை, கொஞ்சம் கொஞ்சமாக சேதப்படுத்திய நாம், இனியேனும், அந்த பூமித் தாயை பாதுகாக்க வேண்டும் என்ற சூளூரையை, இந்தப் புவி தினத்தில் ஏற்போம்.

புவி தினத்தின் அவசியம்:-

சூரியக் குடும்பத்தில் நாம் வாழும் பூமிதான் மிகவும் அற்புதமானது. உயிரினங்கள் வாழும் ஒரே கோளும் நம் பூமிதான். மனிதனையும் சேர்த்து தற்போது 10 கோடி வகை உயிரினங்கள் புவியில் வாழ்கின்றன. பூமி உருவானதில் இருந்து இன்று வரை ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இயற்கை நிகழ்வுகள் மற்றும் பேரழிவுகளால், பூமியின் தோற்றம் மாற்றம் கண்டுள்ளது.

இந்த மாற்றங்களால் நன்மைகளும், தீமைகளும் மாறி மாறி ஏற்பட்டுள்ளன. மனிதன் உருவான பின்னர் தான் புவியின் அழிவு ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான ஆதாரங்களும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முக்கியமாக நாம் பயன்படுத்தும் ஏராளமான செயற்கைப் பொருட்கள், நமது செயல்பாடுகளும் பூமியின் முகத்தோற்றத்தை அடியோடு மாற்றி வருகின்றன. அவற்றில் முக்கியமானவை, நமது பொருளாதாரத் தேவைகளுக்காக காடுகளை அழிப்பதும், நமது சுய லாபத்திற்காக பூமியை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்துவதும்தான்.

உலகின் நுரையீரல்களாக கருதப்படும் தாவரங்களை, தனது தேவைக்காக மனிதன் அழித்ததன் எதிரொலியாகவே புவி வெப்பமடைகிறது எனவும் ஆய்வாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புவிக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அழிவை தடுக்க பூமியை காக்க வேண்டும்..அதன் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது தான் புவி தினம்.

மனிதர்கள் ஏற்படுத்திய பாதிப்புகளால் புவி வெப்பமடைந்து, துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்கள் வேகமாக உருகி வருகின்றன. இதன் எதிரொலியாக கடல் மட்டம் உயர்கிறது, நிலப் பகுதிகளும் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்தச் சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு மனிதர்களே முழுமுதற் காரணம் என்பதால், புவியை பாதுகாக்கும் பொறுப்பும், கடமையும் நமக்கே இருக்கிறது. அதற்காக உருவாக்கப்பட்ட இந்த புவி தினத்தில், பூமியைக் காப்பாற்ற நம்மால் ஆன சிறிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக, வீடுகளில் வெப்பத்தை உமிழும் குண்டு பல்புகளுக்கு பதிலாக டியூப் லைட் அல்லது மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் சிஎப்எல் பல்புகளைப் பயன்படுத்தலாம்.மின்சாரம் தயாரிப்பதற்கு அதிகளவில் தற்போது நிலக்கரியும், அணு உலையும் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் நிலக்கரி இயற்கை வளமாகும். அதை அளவுக்கு அதிகமாக சில நாடுகள் சுரண்டுவதாலும், புவி வெப்பமடைகிறது. எனவே, தேவை இல்லாத போது மின் உபகரணங்களை அணைத்து வைக்க வேண்டியது அவசியம்.

அதே போல் சுத்தமான பிராணவாயு கிடைக்க வீடுகளில் மரம் வளர்ப்பது அவசியம் என்பதையும் நாம் உணர வேண்டும். இயற்கையின் கொடையில் முக்கியமானதாக கருதப்படும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மரங்களை அழித்து காகிதங்கள் உருவாக்கப்படுவதால், அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இறுதியாக, புவி வெப்பத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஓசோன் படலத்தில் விழும் ஓட்டைகள் தான். இந்தப் படலம் சேதமடைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை திகழ்கிறது. எனவே, தனி வாகனங்கள் பயன்படுத்துவதைக் குறைத்து ரயில், பேருந்து போன்ற பொது வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் புவி வெப்பத்தை நாமும் தடுக்க முடியும்.

நாம் பூமிக்கு ஏற்படுத்திய பாதிப்புகளை போக்க என்ன செய்யலாம்? தனி மனிதராக நாம் எப்படி உதவலாம்? போன்றவற்றை பற்றிய விவரங்கள்:-

* புதை படிவ எரிபொருள் உபயோகத்தை கட்டுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க சக்திகளான காற்றாலை, சூரிய ஓளி திட்டங்களை செயல்படுத்தலாம். இதனால் கரியமில வாயுவினால் ஏற்படும் பாதிப்பு வெகுவாக குறைகிறது. வீட்டளவிலும் இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப நிறுவலாம்.மேலும் குறைந்த அளவு மின்சாரமே தேவைப்படும் சிஎப்எல் பல்புகளை பயன்படுத்தலாம்.

* குப்பைகளை குறைப்பதால் மீதேன் உள்ளிட்ட ஆபத்தான வாயுக்களின் வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் 10 சதவீதம் வரை வாயு வெளியேற்றத்தை குறைக்க முடியும். நம் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்து, கூடிய அளவுக்கு மறுசுழற்சி செய்யலாம். இதனால் தேவைகள் குறைவதோடு அவற்றை தயாரிப்பதற்கான எரிபொருளும், சக்தியும் பாதுகாக்கப்படுகின்றன.

* ஒவ்வொரு முறை தண்ணீரை சுத்திகரிக்கும் போதும், விநியோகிக்கும் போதும் அதிகளவில் ஆற்றல் வீணடிக்கப்படுகிறது. சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துவதோடு, சேமிக்கும் வழிகளையும் யோசிக்கலாம்..மழை நீரை சேமிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும்.

* வீடுகளை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள, சுவர்களுக்கு பாதுகாப்பு பூச்சு, ஜன்னல்களுக்கு பருவநிலை காக்கும் கண்ணாடி என பல நவீன அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.இதன் காரணமாக அதிக வெப்பத்தை வெளியேற்றும் குளிர்சாதன கருவிகளை எல்லா நேரங்களிலும் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.

* அருகாமையிலுள்ள இடங்களுக்கு நடந்தோ, மிதிவண்டியிலோ செல்லலாம். தேவைப்படும் நேரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த எண்ணலாம். வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவேண்டும். வாகனங்களாலும் அதிகளவில் எரிபொருள் வீணடிக்கப்படலாம்.

* தேவைப்படும் நேரங்களை தவிர பிற நேரங்களில் மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

* பல வகை மாசினால் மூச்சு திணறி கொண்டிருக்கும் பூமிக்கு பிராணவாயுவை கூட்டவும், ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து நம்மை பெருமளவு காப்பாற்றவும் தேவைப்படுவது மரங்கள்.நிழல் தரும் மரங்கள் வளர்ந்தால், பூமி சற்றே இளைப்பாறும்.

தகவல்: புதிய தலைமுறை

வீட்டில் உருவாக்கலாம் குப்பை மாற்றுத் தொழிற்சாலை

நாட்டில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் மற்றும் உரம் தயாரிக்கும் குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, நமது அரசு இன்னும் முயன்று கொண்டே இருக்கிறது வருகிறது. மக்கும் குப்பை, மக்கா குப்பை தொட்டிகள் வைத்து, இப்படித்தான் குப்பையைபோடணும் என்றாலும் அதையும் சரியாக செய்வதில்லை மக்கள்.

அரசு செய்யும் என்று காத்திருக்காமல் தனிமனிதன் ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு குப்பையை மறு சுழற்சி செய்ய முயல வேண்டும். எப்படி செய்வது என கேட்கிறீர்களா இதோ சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த, சிவசுப்ரமணியன் என்பவர், 2003ம் ஆண்டு முதல், வீட்டு குப்பையை, தெரு தொட்டியில் போடாமல், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு, குப்பையை மறுசுழற்சி செய்து வருகிறார்.

எப்படி செய்வது?

*மொத்தம், 200 லி., கொள்ளளவு கொண்ட, ஒரு டிரம் தயார் செய்ய வேண்டும்.

*அதன் அடிப்பகுதியின் நடுவில், வட்டமாக ஒரு திறப்பையும், அதற்கான மூடியையும் உருவாக்க வேண்டும்.

*அதன் வாய் பகுதி அருகில், பக்கவாட்டில், ஒரு திறப்பை தயார் செய்ய வேண்டும்.

*வீட்டின் வசதியான மண் தரையில், டிரம்மின் விட்டம் அளவுக்கு, அரை அடி மண் சமப்படுத்தி, அதன் மீது, வைக்கோலும் மாட்டு சாணமும் கலந்த கலவையை இட வேண்டும்.

*அதற்கு மேல், அரை அடி மண் போட வேண்டும்.

*இப்படி தயார் செய்யப்பட்ட மண் தரையின் மீது, டிரம்மை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும்.

*டிரம்மின் மேல் பகுதியில் உள்ள திறப்பின் வழியாக, உணவு கழிவு, காய்கறி கழிவு போன்ற மக்கும் குப்பையை உள்ளே போட்டு, அதன் மீது ஒரு கைப்பிடி மண்ணையும் தூவ வேண்டும்.
*வைக்கோல், மாட்டு சாண கலவையில், ஐந்து நாட்களில் புழு உற்பத்தியாகி, மக்கும் குப்பையை உண்டு, அவற்றை உரமாக்கி விடும்.
*மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, டிரம்மின் கீழ் திறப்பின் வழியாக, மண் உரத்தை எடுத்து
தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.
குப்பை உரமாகும்:

இதுகுறித்து, சிவசுப்ரமணியன் கூறியதாவது:என் வீட்டில், மூன்று சின்ன குப்பை தொட்டிகள் வைத்துள்ளேன். ஒன்றில், காய்கறி மற்றும் உணவு கழிவு, இரண்டாவதில், பால் கவர், சாக்லெட் கவர் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள், மூன்றாவது தொட்டியில், பொட்டல காகிதம், பேக்கரி அட்டை போன்ற காகித கழிவுகளை சேகரித்து வைப்பேன். மக்கும் குப்பையை, தினமும் மாலையில் டிரம்மில் போட்டு, மேலே ஒரு கைபிடி மண் தூவுவேன். சில நாட்களில் அது உரமாக மாறிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை, அந்த உரத்தை எடுத்து, செடிகள், தென்னை மரத்திற்கு உரமாக பயன்படுத்துவேன். இந்த மறு சுழற்சியில், டிரம்மில் பாதிக்கு மேல் குப்பை தேங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்திற்கு கெடுதல் இல்லை:

மீதமுள்ள இரண்டு தொட்டியில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பழைய தாள்களை மாதம் ஒரு முறை, பழைய பேப்பர் கடையில் இலவசமாக கொடுப்பேன்.இதை கடந்த, 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். துவக்கத்தில் என் வீட்டில் கூட எதிர்ப்பு இருந்தது. நாளடைவில் அவர்களும் சேர்ந்து இந்த பணியை ஆர்வமுடன் செய்கின்றனர்.

என்னால், என் வீட்டினரால் இந்த சமூகத்திற்கு எந்த கெடுதலும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது, பெரிய வேலை ஒன்றும் கிடையாது. தினமும் நாம் செய்யும் வீட்டு வேலையில், இதுவும் ஒரு வேலை, அவ்வளவு தான். தினமும் இரண்டு நிமிடம் தான் செலவாகும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது மனைவி உமாதேவி கூறியதாவது:

துவக்கத்தில், கணவரின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாக செய்து வந்தேன். பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி குப்பை கிடங்கில், திடீரென எரியும் குப்பை பற்றி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பார்த்து, நம்மால் தானே சுற்றுச்சூழல் கெடுகிறது என, கலங்கினேன். பின் நானே முழு மனதுடன், "வெர்மிக் கம்போசிங்' முறையை கையாண்டு வருகிறேன். இந்த நடைமுறை இப்போது, எனக்கு முழு சந்தோஷத்தை கொடுக்கிறது.இவ்வாறு, உமாதேவி கூறினார்.

'நம்மால் தான், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. தொடர் விழிப்புணர்ச்சியை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். இலவசங்கள் வழங்குவதை குறைத்துவிட்டு, இதுபோல், வீட்டில் குப்பையை மறுசுழற்சி செய்கிறவர்களுக்கு அரசு வரிச்சலுகை வழங்கலாம். இதன் மூலம், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் இருந்து சமூகம் பாதுகாக்கப்படும்'
- சிவசுப்ரமணியன்
நன்றி:தினமலர்

குப்பையை சுகாதாரமான முறையில் மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று இன்றைய தினத்தில் உறுதி எடுப்போம்... பலரிடமும் இதனை பகிர்ந்துக் கொள்ளுங்கள், விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..... 
நன்றி நண்பர்களே              

நன்றி :- தினமலர்

மின்சாரப் பிரச்சனை தீர நாமும் இதை பின்பற்றலாம் !

பழைய பேப்பர், புட்டிகள், குப்பைகள் கொடுத்துவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கலாம். "எங்கே?' என்று ஆவலாய் கேட்கிறீர்களா? இது, இங்கு அல்ல... ஸ்வீடன் நாட்டில், இந்த முறை அமலில் உள்ளது. 
அங்கு, ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களிடமிருந்து, 1 கிலோ குப்பை பத்து ரூபாய் வீதம் விலைக்கு வாங்குகிறது. இப்படி பொதுமக்களிடம் இருந்து 45 லட்சம் டன் குப்பையைப் பெற்று, அதை மின்சக்தியாக மாற்றுகிறது அந்நாடு.

இதன் மூலம், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் வீடுகளுக்கு, மின்சக்தி வழங்கப்படுகிறது.
குப்பைகள் போதவில்லை என்று, வெளிநாட்டிலிருந்து எட்டு லட்சம் டன், குப்பை கழிவுகளை, இறக்குமதி செய்கிறது. இதில், நார்வே நாடு தான், டன் டன்னாக குப்பையை ஏற்றுமதி செய்கிறது. அதே போல, மெக்ஸிகோ நாட்டில், இரண்டு கோடி மக்கள் வசிக்கின்றனர்.

மக்களிடமிருந்து, குப்பை, பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், பழைய புட்டிகள் வாங்கப்படுகிறது. அதற்கு பதிலாக, காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். குப்பை பிரச்னையும் தீர்கிறது; மின்சாரமும் கிடைக்கிறது. நம் நாட்டிலும் இதைப் பின்பற்றினால், "கரன்ட் கட்' இருக்காதே!