செவ்வாய், 8 ஏப்ரல், 2014

வீட்டுத் தோட்டம் டிப்ஸ் - 30
---------------------------------------
அருமையான நீர் சேமிப்பு ஐடியா

நடுகிற நாற்றுக்கு அருகிலே , அந்த நாற்றின் வேருக்கு அருகில் வருகிற மாதிரி ஒரு இன்ச் பைப் , ஒரு அரை அடி ஆழத்திற்கு பதித்து கொள்ள வேண்டியது..பூமிக்கு மேலே ஒரு அடி உயரத்திற்கு பைப் இருக்கட்டும்..அதற்கு மேலே 2 லிட்டர் தண்ணீர் கேன் ஒன்றை நிரப்பி , அதன் மூடியிலே ஒரு சிறு துளையிட்டு அதன் வழியாக சொட்டு,சொட்டாக நீர் வடிகிற மாதிரி அமைத்துக்கொள்ள வேண்டியது..இப்படி வடிகிற தண்ணீர் அந்த ஓஸ் பைப்பின் வழியாக மண்ணிற்குள் சென்று வேர்ப்பகுதியில் நீர்க்கசிவு இருந்து கொண்டே இருப்பது போல செய்யும்... சுமார் நான்கு நாட்களுக்கு ஒருமுறை இந்த பாட்டிலை நிரப்பினால் போதும்...வாரத்திற்கு இரண்டு முறை....மாதத்திற்கே 16 லிட்டர் தண்ணீர்,அதாவது ஒரு குடம் தண்ணீர் இருந்தால் போதும்.. எவ்வளவு சிக்கனம் பாருங்கள்...

பாட்டில் கீழே விழுந்து விடாமல் இருக்க , அதன் அருகே ஒரு குச்சியை நட்டு அதில் அந்த கேனை கட்டிவிட வேண்டும்...
இதைச்சுற்றி மரக்கூண்டினை வைத்து விட்டால் போதும்...பாதுகாப்பாக நட்டுவைத்த அத்தனை நாற்றுக்களுமே வளர்ந்துவிடும்...

இணைக்கப்பட்ட இந்த படம்இதை இன்னமும் எளிதாக சொல்லும்...

என்ன, இனி இந்த எளிய வழியை பின்பற்றலாம்தானே..???

மரம் வளர்க்க விரும்பும் அனைவருக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.. கோடையில் மரங்களை காப்பாற்ற வெகுவாய் உதவும்...

"மேலே
சிரம்
வைத்தவனெல்லாம்
மனிதனில்லை.
கீழே
மரம்
வைத்தவனே
மனிதன்"...