சனி, 21 மார்ச், 2015

உடல் எடை குறைய எளிய குறிப்புக்கள்

உடல் எடை குறைய எளிய குறிப்புக்கள் :
* இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
* கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
* சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
* பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
* எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
* நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
* சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
* நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
அதோடு உடல் எடையை கண்டிப்பாக குறைத்து விடுவேன் என்று நம்புங்கள்.
கண்ணாடி முன் நின்று முடிந்த மட்டும் நம்பிக்கையுடன் உங்களை நீங்களே உற்சாகபடுத்தி கொள்ளுங்கள் ...

துளசி(ஆக்ஸிஜன்)செடியின் மகிமை

துளசி(ஆக்ஸிஜன்)செடியின் மகிமை
--
ஒவ்வொருவரின் வீடுகளிலும் வளர்க்கவேண்டிய தாவரம் துளசிச்செடி ஏனெனில் பிராணவாயுவான ஆக்ஸிஜனை அதிகமாக வெளியிடும் ஒரே தாவரம் துளசி
துளசிச்செடியை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். மற்ற செடிகளைப்போலல்ல இந்த துளசி. மனிதனுக்கு மிகவும் பயன்தரவல்ல செடி. பல வழிகளில் பயன்தரும் இந்த துளசிச்செடியின் மகிமையை சற்றுக்கவனிப்போம்.
பகல் இரவு என இரு நேரங்களிலும் ஆக்ஸிஜன் வெளியிடும் ஒரே தாவரம் துளசி
துளசிச்செடி வளர்த்துவந்தால் வீட்டில் விஷப்பூச்சிகள் அண்டாது. அதுமட்டுமல்ல, காற்றிலுள்ள நச்சுத்தன்மையையைப்போக்கி சூழலைக்காக்கும் ஆற்றலுடையது துளசி.
இதைவிட ஆச்சரியமானது என்னவென்றால், மழைக்காலத்தில் இடி விழாமல் (மின்னல் தாக்காமல்) வீட்டைப்பாதுகாப்பதில் துளசிச்செடி பெரும்பங்கு வகிப்பதாக சித்தர்கள் கூறியிருக்கின்றார்கள்.
தேள் கொட்டிய இடத்தில் துளசி இலைகளை எடுத்து தேய்த்துவிட்டால் விஷம் உடலில் பரவாது.
துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகினால் புத்துணர்வு கிடைக்கும். தேநீர் எதுவும் தேவையில்லை.
புத்துணர்வுப்பானமாக மட்டுமல்லாது சனி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருத்துவ பானமாகவும் இது செயல்படுகின்றது.
பெண்களின் கருப்பையை பலப்படுத்தவும்,
ஆண்மைக்குறைபயைப்போக்கவும்,
தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும் உதவுகிறது.
துளசி அனல் தன்மை கொண்டதால் உடலிலுள்ள கிருமிகளை அழிக்கவல்லது.
நமது முன்னோர்கள் குடிநீரை சுத்திகரிப்பதற்காக துளசி இலைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
துளசியுடன் வேப்பிலைசேர்த்து அரைத்து பேன் தொல்லைக்கும் ஏன் முகத்திற்கும் கூட சிலர் இதைப்பயன்படுத்துவார்கள். முழுமையான தீர்வு கிடைக்கும். இந்தியாவில் காய்ந்த துளசி இலைகளை உணவுக்கும் பயன்படுத்துகிறார்கள்.
உங்கள் வீட்டில் ஒரு துளசிச்செடியை நட்டு வளர்த்து வாருங்கள்.அது உங்கள் வருங்கால சந்தியினருக்கு தூய்மையான காற்றை தரவல்லது
Additional info
துளசி என்பதற்கு ஒப்பில்லாதது என்று பொருள். இதிலிருந்தே துளசியின் பெருமையை நாம் புரிந்து கொள்ளலாம்.
எந்த இடத்தில் துளசி வளர்ந்திருக்கிறதோ அங்கு மும்மூர்த்திகளுடன், அனைத்து தேவர்களும் வசிக்கிறார்கள் என்று அர்த்தம். வீடுகளில் துளசிச் செடி வைத்து வளர்ப்பதும், அதனை பால், அபிஷேக நீர், கங்கை நீர் கொண்டு வளர்ப்பதும், தினமும் பூஜை செய்து வழிபடுவதும் சிறப்பான பல நல்ல பலன்களை தரும். துளசிச் செடி உள்ள வீட்டில் எந்த துஷ்ட சக்திகளும் நுழையாது.
விஷப்பூச்சிகள் வராது. உள்வரும் அசுத்த காற்றும், துளசியின் மருத்துவ குணத்தால் நம்மை அண்டாது. எனவே குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். மாங்கல்ய பலத்துக்கு பெண்களின் மாங்கல்ய பலத்துக்கு துளசி பூஜை என்பது முக்கியமானது.
தங்களின் வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு விளக்கேற்றி காலை, மாலை என இரு வேளைகளில் பூஜை செய்து மாடத்தினை வலம் வந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். துளசி மாடத்தை பூஜிக்க, வேறு துளசி செடியில் இருந்துதான் இலைகளை பறித்து பயன்படுத்த வேண்டும். துளசி வனம் இருக்கும் வீட்டில் துர்மரணங்கள் நிகழாது. நாராயணருக்கு, தினமும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும் பத்மபுராணம் கூறுகிறது

வீட்டுத்தோட்டம் ..எளிய குறிப்புகள்

வீட்டுத்தோட்டம் ..எளிய குறிப்புகள்
முற்றிய தேங்காயை பிளந்து அதில் நாற்று வளர்க்க நார் கழிவு ,உர கம்போஸ்ட் மண் கலந்து சுற்றிலும் கயிற்றால் கட்டி அதில் செடி வளர்த்தல் .
மட்கும் குணமுடையதால் நாற்றுடன் தேங்காய் தொட்டி அமைப்பை நிலத்தில் அப்படியே நடலாம் .
தேங்காய் நார் நீரை தக்க வைக்கும் நீர் ஆவியாதலை தடுக்கும்.
வெயில் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் விடக் கூடாது.
செடியின் அடி பாகத்தில் தேங்காய் மட்டையை அடுக்கி வைத்து தண்ணீர் ஊற்றினால் நிறைய நேரம் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும்.
இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியே வந்தாலும், வேப்பெண்ணெய், காதி சோப் கரைசலைத் தெளித்தால் போய்விடும்.
செடிகள், காய்கறிக் கழிவுகளை செடிகளுக்கு மூடாக்காக போட்டு வைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும் .
தினமும் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களின் தோல் கழிவுகள் போன்றவற்றையே சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கின் தோல்கள், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக் கழிவுகள் போன்றவற்றை குப்பையில் கொட்டுகிறோம். இதை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, அதில் கழிவுகளைக் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால், உரக்குழி தயார்.இதேபோல, பயன்படுத்தப்பட்ட டீத் தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம்கூட சிறந்த இயற்கை உரம் தயாரிக்க பயன்படுகின்றன.

கருஞ்சீரகம்

சிறுநீரக கல்லை கரைக்கும் கருஞ்சீரகம்
=======================================
பொதுவாகவே கருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது எல்லோரின் வீட்டிலும் சமையல் அறையில் காணப்படும் பொருள் தான்.
* அடிக்கடி ஜலதோஷத்தால் பாதிக்கப்படுவோர் கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் ஜலதோஷத்துக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
* கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும்.
* கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம்.
* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
* கருஞ்சீரகத்தைக் விநிகரில் வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும். பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
* பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
* கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்து. சொரி, சிரங்கு, நாய்க்கடி, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணி.

வீட்டுத்தோட்டம்

வீட்டுத்தோட்டம்
தொட்டியில் வெங்காய செடி வளர்த்தல் ...
தோட்டத்தில் பெரிய அளவு நிலப்பரப்பு இல்லாவிடினும் மண் ,பிளாஸ்டிக் தொட்டிகளில் மற்றும் உறை ,சாக்கு பைகளிலும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ,பூண்டு வளர்க்கலாம் .
1,வெங்காய விதைகள் தோட்ட மையத்தில் கிடைக்கும் அவற்றை வாங்கி seed starters என கடைகளில் விற்கும் சிறு சதுர வடிவ பெட்டிகள் அல்லது கம்போஸ்ட் தம்ளர்களில் விதை நட்டு வளர்க்கலாம் .நாற்று 5 இன்ச் உயரம் வளர்ந்ததும் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும் .
2, onion sets ...இது அனைத்து தோட்ட மையங்களிலும் கிடைக்கும் ..விதைகளை நட்டு அவை முதிர்ச்சி அடையுமுன் சிறு பல்ப் அளவு இருக்கும்போதே எடுத்து பதப்படுத்துவார்கள் ..இவை பின்பு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் .இதை நட வெங்காய செடி வளரும் .
3,வீட்டில் சில நேரம் சமையலுக்கு வாங்கிய வெங்காயம் முளைத்து துளிர் இலைகள் வளர ஆரம்பிக்கும் ..இதனை படத்தில் காட்டியுள்ளபடி கவனமுடன் வெட்டி பிரித்தெடுத்து தொட்டியில் நடலாம் .
தொட்டியில் நான் அவ்வாறு நட்ட வெங்காயம் நன்கு பிடித்து வளர்கிறது .
4,சிறிய வெங்காயமென்றால் (சாம்பார் ) ஒன்றினை தொட்டியில் நட்டால் போதுமானது அதிலிருந்து குறைந்தது 20 வெங்காயம் அறுவடை செய்யலாம் .
..ஒருவர் என்னிடம் துளிர் விட்ட முழு வெங்காயத்தை நிலத்திலோ தொட்டியிலோ நட்டால் செடி வளருமா என கேட்டிருந்தார் ..
ஆம் இலைகள் நன்கு செழித்து வளரும் .அந்த இலைகள் சூப் ,fried ரைஸ் மற்றும் பிற சமையலிலும் சேர்க்கலாம் .இம்முறையில் வெங்காயம் கிடைக்காது ஏனெனில் ஏற்கனவே முற்றிய வளர்ந்த வெங்காயத்தில் மீண்டும் வெங்காயம் உருவாகாது ..ஆனால் கொலாஜ் படத்தில் உள்ளவாறு வெட்டி நட்டால் வளரும் .
5,சிலர் வேர் தோன்றும் வெங்காய தலை பகுதியை மட்டும் வெட்டியும் வெங்காய அறுவடை செய்து வெற்றி கண்டுள்ளனர் (grow from scraps )..
தொட்டியில் வளர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை .
தொட்டியின் /கன்டேய்னரின் ஆழம் 10-15 இன்ச் அளவு இருக்க வேண்டும் .
அகலம் எவ்வளவு இருந்தாலும் நல்லது ..ஆனால் வளரும் வெங்காயங்களுக்கு இடையில் குறைந்தது 4 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் .
பிளாஸ்டிக் கண்டெய்னர் ,உறை ,சாக்கு பைகள் என்றால் கண்டிப்பாக அடிப்புறத்தில் துளைகள் நீர் வெளியேற வகை செய்ய வேண்டும் ..தொட்டி பைகளின் கீழ் நான்கு செங்கல் வைத்தால் நீர் வடிந்தோட வசதியாக இருக்கும் .
..
தொட்டிகளில் கம்போஸ்ட் தொழு உர மண் இட்டு நிரப்பி முற்றா வெங்காய பல்புகளை மேலாக நட்டு விட வேண்டும் குறைந்தது 7-8 மணிநேரம் சூரிய வெளிச்சம் தேவை .
தேங்காய் .கோகோ பீட் அதிக நீர் சேமிக்கும் குணமுள்ளது .
சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் மட்டுமின்றி ..முளைத்த பூண்டு பற்களையும் தொட்டியில் நடலாம் ..பூண்டு இலைகளும் வெங்காய தாள்களை போல சமையலில் பயன்படுத்துகிறார்கள் .
அறுவடை ..வெங்காயம் நிலத்தில் இருந்து வெளியே தெரியுமாறு வளர்ந்து பெரிதாக இருக்கும் இலைகளும் காய துவங்கும் நேரம் அறுவடை செய்யலாம் .நல்ல தட்பவெப்பம் இருக்கும்போது 45 முதல் 60 நாளில் முற்றிய வெங்காயம் தயாராக இருக்கும் .

பசலைக்கீரை /பாலக்கீரை ,spinach

பசலைக்கீரை /பாலக்கீரை ,spinach
பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நிறைய நன்மைகளைப் பெறலாம்.
குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் நன்மை பயக்கும்.
நினைவாற்றலை அதிகரிக்கும் பசலைக்கீரையில் வைட்ட மின் A `K ’ மற்றும் `E ’ அதிகம் உள்ளது. 
இக்கீரையில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது ஆகவே இரத்த சோகைக்கு சிறந்த உணவு .
மேலும் இதய நோயாளிகளுக்கும் உகந்தது.
ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் ஆற்றலுடையது.
குறைந்த மற்றும் மிகுந்த அழுத்தமாயினும் இரண்டையும் சமன்படுத்தும் ஆற்றல் பெற்றது.
பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடை குறையும்.
பசலைக்கீரையில் உள்ள Carotenoidsஎன்னும் lutein கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில்
கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.

இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?

இரத்தத்தை சுத்தம் செய்வது எப்படி?
இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் வரும்.
உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?
இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம்.
தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம்.
இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.