சனி, 21 மார்ச், 2015

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்
உலகை ரசிப்பது கண்கள். மனிதனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கண்களுக்குஉள்ளது. இந்த கண்களை பாதுகாப்பது மிக அவசியம். கண்களில் ஏதாவது சிறிய குறைபாடு என்றாலும் நாமே சிகிச்சை அளிக்காமல், உடனடியாக சிறந்த கண் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் தரும் ஆலோசனையின்படி சிகிச்சை பெறுவது அவசியம். கண் எரிச்சல், கண் வலி போன்றவற்றுக்கு பெரும்பாலும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.
கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால் கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும் பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில சமயங்களில் வலி கூட ஏற்படும்.
பயணத்தின் போது படித்தால் கண்கள் மிகவும் பாதிக்கப்படும். அந்த நேரம் நம் பார்வை ஒரே சீரான பார்வையில் இருக்காது, ஒருவித அசைவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்போது கண்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். வெளியே அதிகமான சூரிய வெளிச்சம் இருக்கும்போது, கண்களை சரியாக திறக்காமல், லேசாக திறந்து கொண்டு செல்வோம். ஏனெனில் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், கண்களை பாதிப்பதோடு, வறட்சியை ஏற்படுத்தி, பார்வை கோளாறை உண்டாக்கும். ஆகவே வெளியே வெயிலில் செல்லும்போது, கூலிங் க்ளாஸ் அணிந்து செல்லலாம்.
இரவு நேரத்தில் வாகனத்தில் நீண்ட தூரப்பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலையில் கண்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஏனென்றால், இரவில் வண்டியை ஓட்டும்போது, எதிரில் வரும் வாகனத்திலிருந்து வரும் ஒளியானது, கண்களில் நேராக படுவதால் இவ்வாறு இருக்கும். டிவியும், கம்ப்யூட்டரை போன்றுதான் கண்களுக்கு பிரச்சனையை தரும். எப்போதும் டிவியை மிகவும் அருகில் உட்கார்ந்து பார்த்தால், கண்கள் களைப்படைந்து விடும். இதனால் தலைவலியும் ஏற்படும்.
தையல் இயந்திரத்தில் தைக்கும்போது, ஊசியில் நூலை கோர்ப்பதற்கு முழு கவனத்துடன் அந்த ஊசியில் உள்ள ஓட்டையை உற்று பார்க்க வேண்டியுள்ளது. இது கண்களுக்கு மிகுந்த அழுத்தம் தரும். இதனால் கண்களில் வலி ஏற்படும்.பைக்கில் செல்லும்போது கண்ணாடி இல்லாமல் செல்லுதல், கணினி திரையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருத்தல் மூலம் கண்நோய் மற்றும் கண்ணில் நீர்வடியும்.
இதில் இரண்டு வகை உண்டு.
அவை: கண் உறுத்தல், புண், அடிபடுதல், மனச்சோர்வு.
மற்றொரு வகை: எபிபோரா. இவை கண்ணீர் வெளியேறும் பாதைகளில் உள்ள அடைப்புகளினால் ஏற்படும்.
ஓவியம், எம்பிராய்டரி போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற தொந்தரவு வரும். இதன் மூலம் கண்கள் சோர்வடையும்.தொற்று நோய்கள் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளும் கூட கண் பாதிப்பை ஏற்படுத்தும். கோடை காலத்தில் இந்த தொற்றுகளின் வீரியம் அதிகமாகவே இருக்கும். கண் நோய் ஏற்பட்டால் தலைவலி உண்டாகும். இவை ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும். தலைவலி, பார்வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.
காய்கறிகள்
கண்களைப் பாதுகாக்க ஊட்டச்சத்து மிகவும் அவசியம். காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, இ, இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இவை கண்களை பாதுகாக்கும். வைட்டமின் ‘ஏ‘ யில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கியச்சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ‘ஏ‘ சத்து பற்றாக்குறையால் தோன்றும் அறிகுறியே மாலைக்கண் நோய். கேரட்டில் வைட்டமின் ஏ உள்ளதால் உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் ‘ஏ‘வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் உள்ளது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் அடங் கியிருப்பதால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை சேர்த்துக்கொள்வதன் மூலம் பார்வையை கூர்மையாக்கவும் உதவும். அலுவலகம் செல்லும்போது கேரட், பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி எடுத்துச் சென்று இடைவேளை நேரங்களில் சாப்பிட கண்களுக்கு குளுமை பரவும். புத்துணர்ச்சி பெறலாம்.
கண்களை பாதுகாக்க
கண் கூசும் வெளிச்சத்திலும், மங்கலான வெளிச்சத்திலும், பொருட்களை உற்று பார்க்கக்கூடாது. கண்ணில் நீர் வடிந்தால், கண்களை கசக்கக் கூடாது. கண் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். தலையணை உறையை தினமும் மாற்றவும்.
தூரத்தில் இருக்கும் பொருட்களை அதிக நேரம் உற்றுப்பார்க்க கூடாது. அடிக்கடி கண் சிமிட்டுவது நல்லது. அதிகமாக வேலை செய்யும்போது கண்ணில் அழர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ செய்யும் வேலையை நிறுத்தி விட வேண்டும்.
தூசி, புகை, அதிக சூரிய வெளிச்சம், அடர் காற்று ஆகியவற்றிலிருந்து கண்ணைப் பாதுகாப்பது அவசியம். நாளொன்றுக்கு 10 முறை கண்ணை மேல், கீழ், பக்கவாட்டுகளில் அசைத்து, பயிற்சி செய்து வர கண் தெளிவாக இருக்கும்.
குடல் சுத்தமாக இருந்தால், கண் பார்வையும் தெளிவாக இருக்கும். படபடப்பு, மன உளைச்சல், சோகம், கோபம், கவலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கண்களை பாதுகாக்கலாம்.

கழுத்து வலிக்கு சுய உதவி

கழுத்து வலிக்கு சுய உதவி
1. கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.
2. மனதளவில் இறுக்கமின்றி"ரிலாக்ஸாக" இருக்கவும்.
3. நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது, கம்ப்யூட்டர் முன் அமரும் போது...
4. படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.
5. மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.
6. ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.
7. படுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும்.
8. வயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்க ாதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.
9. ஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதே போல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும்.
10. நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.
உடற்பயிற்சிகள்
நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடையூறே நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ கழுத்துக்கு மேலும் தொந்தரவு வரும்.
கழுத்து உடற்பயிற்சி, கழுத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும், கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும்.எனினும ் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்யவும்.

பப்பாளி சாப்பிடுங்க

‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...’ என்கிற பழமொழியை மாற்றி நண்பர்கள் என்னைப்பார்த்து ''நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.'' நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’
'அய்யா! எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 7 வருஷமாச்சு. இன்னும் வயித்தில ஒரு புழு பூச்சியும் தங்கல. குழந்தைப்பேறு கிடைக்க ஒரு வழி சொல்லுங்க' என்று சித்த மருத்துவரிடம் உருகும் தம்பதியருக்கு அந்த மருத்துவர் சொல்லும் ஒரே பதில், ‘பப்பாளி சாப்பிடுங்க.’
'சிறுநீரகத்தில் கல் உண்டாயிருக்கு வலி தாங்க முடியல, அறுவை சிகிச்சை செய்யவும் பயமா இருக்கு. அந்தக் கல்லைக் கரைக்க ஒருவழி சொல்லுங்க'ன்னு கேளுங்க. அதுக்கும் '
பப்பாளி சாப்பிடுங்க'னு பதில் வரும்.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிகள் தொடங்கி... அப்பல்லோ டாக்டர்கள் வரை தங்களைத் தேடிவரும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் பழங்களில் அதி முக்கியமானது பப்பாளி என்றால் அது மிகையில்லை.
வீட்டுப் புறக்கடையில் மட்டுமே ‘பவ்சு’ காட்டிய பப்பாளி மரங்கள் இன்று பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது. இன்றுகூட கிராமப்புறங்களில் வீட்டு பக்கத்தில் ஒன்றிரண்டு மரங்கள் இருப்பதை பார்க்க முடியும். நகர்ப்புற மக்களும் வீட்டில் பப்பாளி மரங்களை வளர்த்து சாப்பிட முடியும். அது எப்படி என்பதை அழகாய் சொல்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த சிவக்குமார். அவரது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி செடிகள் காய்த்துக் குலுங்குகின்றன. பப்பாளி மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் கொத்தி தின்று கொண்டுயிருந்தன. பப்பாளி மரத்தை சுட்டிக்காட்டி பேசத்தொடங்கினார் சிவக்குமார்.
மாடி வீடு உள்ளவர்கள் மொட்டை மாடியிலும், அந்த வசதி இல்லாதர்கள் வீட்டு படிக்கட்டு மூலைகளிலும், பால்கனியிலும், சமையல் அறையிலும், திறந்தவெளி ஜன்னல் ஓரத்திலும் பப்பாளி மரங்களை வளர்க்கலாம். அதற்கு தேவையான பொருட்கள் இரண்டுதான். ஒன்று வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் பிடித்து நிரப்ப பயன்படும் ஒரு பழைய பீப்பாய். இன்னொன்று நிலத்து மண். பழைய பீப்பாயின் மையப்பகுதியை வட்டமாக வெட்டினால் கிடைக்கும், அடிப்பகுதியை பப்பாளி மரம் வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதோடு 25 கிலோ மணலை வாங்கிக் கொள்ளவேண்டும். அதில் உள்ள கற்களை பொருக்கி எடுத்துவிட்டு நிலத்து மண், மணல் இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைய வேண்டும். மண்ணில் உள்ள கட்டிகள் உடைந்து சந்தனம் போல் மாறும். பிறகு ஈரமண்ணை பரப்பி காய வைக்கவேண்டும். இரண்டு நாளில் மண் ஈரம் காய்ந்து பொலபொல என்று மாறிவிடும். அதோடு உயிர் உரங்களை கலக்க வேண்டும். அருகில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது வீட்டுத்தோட்ட அங்காடிகளில் இந்த உரங்கள் கிடைக்கும். இதில் அசோஸ்-பைரில்லம் முக்கியமானது. அதை ஒரு கிலோ அளவில் வாங்கிவந்து, அந்த பொலபொல மண்ணில் கலந்து பீப்பாயினுள் நிரப்பவேண்டும். நிரப்பும் முன்பு மாட்டு சாணம் கிடைத்தால் அதையும் சேர்த்துகொள்ளலாம். தொடர்ந்து பூவாளி கொண்டு பீப்பாய்க்குள் உள்ள மண் நனையும்படி தண்ணீர்விட்டு அது சுண்டியபின், பப்பாளி விதைகளை ஊன்றலாம்.
விதைகளுக்குத் தேவையான பப்பாளிப் பழத்தை கடைகளில் வாங்கிகொள்ளலாம். நன்றாக கனிந்த சிவந்த நீளமான பழங்களில் தான் முளைப்புத்திறன் கொண்ட விதைகள் கிடைக்கும். அந்த பழங்களில் உள்ள விதைகளை எடுத்து அதன் ஈரப்பதம் குறையும்படி காயவைத்து, அந்த விதைகளில் ஒன்றுக்கும் மேற்பட்டதை பீப்பாயில் உள்ள மண்ணில் ஈர விதைப்பு செய்யவேண்டும். ஊன்றும் விதைகளை தகுந்த இடைவெளி விட்டு பரவலாக ஊன்றவேண்டும்.
தொடர்ந்து 35 நாட்கள்வரை பீப்பாய் நிழலில் இருக்க வேண்டும். 35வது நாளில் நாற்றுக்கள் முளைத்து நிற்கும். தொடர்ந்து ஈரம் ததும்ப தண்ணீர் விட்டு பீப்பாயினுள் உள்ள அனைத்து நாற்றுக்கலையும் பிடுங்கிவிட்டு, அதில் ஊக்கமுள்ள நாற்றை மட்டும் எடுத்து பீப்பாய் மன்ணின் மையப்பகுதியில் நடவு செய்து தண்ணீர் ஊற்றி வரவேண்டும். வெளிச்சம் படும்படியான இடத்தில் பீப்பாயை மாற்றி வைக்க வேண்டும். 120 நாள் தொடங்கி மரம் காய், கனிகளை கொடுக்கத் தொடங்கிவிடும். இரண்டு வருடங்களில் உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய், கனிகளை கொடுக்கும். உங்கள் வீட்டு மருத்துவ செலவும் குறையும்" என்று பயனுள்ள ஆலோசனையை வழங்கினார் சிவக்குமார்.
இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு

காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
===================================================

6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும்கடலில் கொட்டப்படுகிறது. கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் சாக்கடை நீர், முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர் ,சாயப்பட்டறை ,தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு,இரசாயன கழிவு, மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு,தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன சென்றுக் கலக்கின்றன .இப்படி பட்ட கழிவுகள் கலந்த நீர்நிலைகள் மனிதர்கள் குடிக்கவோ விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை .கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில் விளையும் பயிர் மற்றும் காய்கறிகள் பல பக்க விளைவுகள் உண்டாக்குகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
முறையற்ற இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் அதிக அளவு மக்கள் புற்றுநோய் மற்றும் மரபணு குறைபாடு போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .
காசர்கோடு மற்றும் தக்க்ஷின் கனடா பகுதியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் வான் வழியாக தெளிக்கப்பட்ட எண்டோ சல்பானின் கொடூர விளைவுகளை அறிந்திருப்பீர்கள் ..!!பிறவி குறைபாடுகள் மரபணு குறைபாடுகள் ,புற்றுநோய் ,கருப்பை சம்பந்தமான நோய்கள் ,சரும நோய்கள் என மனதாலும் உடலாலும் அங்கு பிறக்கும் பிள்ளைகளும் அவதிப்பட்டதை மறக்கவோ மறுக்கவோ முடியாது . கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல பல குழந்தைகளை உருக்குலைத்த பின் கேரளா 2005 ஆம் ஆண்டும் கர்நாடகா 2011 ஆம் ஆண்டும் என்டோசல்பான் பயன்பாட்டை தடை செய்தன !!ஆனாலும் இன்னும் பல இடங்களில் தடைசெயப்பட்ட இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் கள்ள விற்பனையில் இருக்கின்றன என்பதற்கு பீஹார் மதிய உணவில் ,மோநோக்ரோடோபாஸ் இனால் மரணங்கள் சாட்சி .
வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
-------------------------------------------------
ஒவ்வொரு பொருளிலும் இந்த மருந்து இருக்குமா இல்லை அந்த பூச்சி கொல்லி இருக்குமோ என்று ஆராய்ச்சி செய்ய தனி மனிதனால் இயலாது ..ஆகவேதான் வீட்டுத்தோட்டம் மாடித் தோட்டம் காலத்தின் கட்டாயம் ..
கேரளாவில் அங்கக வேளாண்மை ,இயற்கை ஆர்கானிக் உணவு பொருட்களை வீட்டில் வளர்க்க பயிற்சியும்,காய்கறி தாவரங்களை கவனிக்கும் முறைகள் அதற்கான தேவையான விதை ,செடி வளர்க்க நாற்று பைகள் ஆகியவற்றையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கிறார்கள் .
கொச்சி அருகே முண்டம்வெளி பகுதியை சார்ந்த விவசாயத்துறை அதிகாரி ஜான் ஷெர்ரி மாடிதோட்டத்தில் ஐம்பது பைகளில் காய்கறி தோட்டமமைத்து வெற்றியும் கண்டுள்ளார் .இசெடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தினையும் தானே
வீட்டில் தயாரித்துள்ளார் ..
எளிய முறையில் உரம் தயாரிப்பு ..
1.. மாட்டு சாண குழம்பு உரக்கலவை .
நிலக் கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு , மாட்டு சாணம் ஆகிய அனைத்தையும் தலா ஒரு கிலோ தேவை. இவற்றை ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர் மற்றும் கோமியம் சேர்த்து கலந்து கலனின் வாய் பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும் .இக்கலவை நொதிக்க நான்கைந்து நாட்கள் ஆகும்.
ஐந்து நாட்களுக்கு பின்னர் ஒரு கோப்பை கலவையுடன் பத்து கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் .
2, பாக்டீரியா பூச்சி கொல்லி
சூடோமொனாஸ் எனும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும் .
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்று பைகளுக்கு பயன்படுத்தலாம்
சூடோமோனஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது .
3,மீன் அமினோ அமிலம் உரம்
கடைகளில் கிடைக்கும் மீன் கழிவு மற்றும் வெல்லப்பாகு இரண்டையும் தலா ஒரு கிலோ சேர்த்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு டைட்டாக மூடி வைக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நொதித்தலுக்கு பின்னர் .இக்கலவையை வடிகட்டி அதில் இருந்து இரண்டு மில்லி லிட்டர் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து உரமாக பயன்படுத்த வேண்டும் .
பூக்கும் தாவரங்களுக்கு இவ்வுரம் மிக சிறந்தது .
4, அசாடரக்டின் /Azadaractin...
இது வேம்பிலிருந்து பெறப்படும் சாறு .
இது ஒரு சிறந்த பூச்சி கொல்லி ..இரண்டு மில்லி லிட்டர் சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் இலை மற்றும் வேர் பகுதியில் தெளிப்பானால் தெளிக்க வேண்டும் ..
5, ..இதெல்லாம் போக சில வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
வளரும் செடிகளை அன்போடு பராமரிக்கவேண்டும்
நாற்று பைகளை போதிய இடைவெளி விட்டு வைக்க வேண்டும், பைகளை செங்கலின் மீது வைக்கலாம்.உரத்தை மாலை நேரங்களில் செடிகளுக்கு இட வேண்டும். .தினமும் காலைவேளையில் நீர்ப்பாய்ச்சி விட வேண்டும்
ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஷெரி தொடர்ந்து அதே நாற்று பைகளை பயன்படுத்தி வருகின்றார் ..
இவரது வழிகாட்டுதலால் சூரநிகரையில் 300 தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன .இவரது குடும்பத்தினர் அனைவருமே இவருக்கு இந்த மாடிதோட்ட பராமரிப்பில் மற்றும் ஆலோசனை வழங்கும் விஷயத்தில் உறுதுணையாக உள்ளார்கள் .மேலதிக விவரங்களுக்கு அவரைத்தொடர்பு கொள்ள அணுகவும் ...9447185944..

வீட்டு தோட்ட டிப்ஸ் !!

வீட்டு தோட்ட டிப்ஸ் !!
APHIDS அசுவுணி அல்லது செடிப்பேன் பச்சை நிற பூச்சிகள் செடிகளில் இருந்து தாக்கும் ..ஹோஸ் பைப்பால் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பாய்ச்சினால் இவை காணமல் போகும் .
இதற்க்கு இன்னொரு வழியும் உண்டு ..கைகளில் அகலமான DUCT டேப் அல்லது செலோ டேப்பின் ஒட்டும்பகுதி வெளிப்பக்கம் தெரியும்படி சுற்றி செடிகளின் இலை பகுதியில் கீழ்புறம் கையை துழாவி செல்ல இந்த பச்சை பூச்சிகள் பசையில் ஒட்டி வந்துவிடும் .
காய்களை வேகவைத்த நீரை இனி எறிய வேண்டாம்அந்த நீரை ..தொட்டி செடிகளுக்கு ஊற்றி பாருங்கள் வளரும் செடிகளுக்கு இது ஒரு சிறந்த சத்து நிறைந்த சூப் !!!!
சில வகை தாவரங்கள் அமிலத்தன்மை விரும்பும் ..அத்தகைய செடிகளுக்கு காபி தேனீர் கலக்கும்போது வடிகட்டிய துகள்களை நிலத்தில் மாதமொருமுறை தூவலாம் .
chamomile ..இதனை சீமை சாமந்தி என்பார்கள் இதில் இப்போது ஹெர்பல் தேநீரும் கிடைக்கிறது
இது சிறு நாற்று செடிகளை திடீரென காளான் பூஞ்சணம் தாக்குவதை தடுக்கவும் பயன்படுகின்றது .
சிறிது சீமைசாமந்தி தீநிரை இளம் செடிகளின் அருகில் மண்ணில் தெளித்து வர பூஞ்சை காளான் தாக்காது .
துரிதமாக மூலிகை தாவரங்களை காய வைக்க :)ஒரு செய்தித்தாளை காரின் பின்னிருக்கையில் விரித்து அதன்மேல் மூலிகை தாவரங்களை (HERBS )லாவண்டர்
பரப்பி வைத்து காரின் கதவுகளையும் சன்னல் கண்ணாடிகளையும் இருக்க மூடி வைக்கவும் ..
துரிதமாக காயும் மற்றும் வாகனமும் வாசமுடன் இருக்கும் .
உங்க தோட்டத்துக்கு பல வண்ண வண்ணத்து பூச்சிகள் வருகை தர ஒரு சிறு தட்டில் ஆப்பிள் /ஆரஞ்சு .வாழை அன்னாசி இவற்றில் சிறு துண்டுகளை வைங்க ..பல வர்ண வண்ணத்து பூசிகள் வருகை தரும் ..ஒரு வட்டம் ஆரஞ்சு சுளை வெட்டி கயிற்றில் கட்டி தொங்க விட்டாலும் நல்லது ..
தேனீக்களும் வண்ணத்து பூச்சிகளும் அழகிய தோட்டத்தில் மகரந்த சேர்க்கைக்கு இன்றியமையாதவை .

வீட்டுத்தோட்டம் .தொட்டியில் காரட் வளர்த்தல் ..

வீட்டுத்தோட்டம் .தொட்டியில் காரட் வளர்த்தல் ..
பெரிய நிலப் பரப்பு அல்லது பெரிய தோட்டம் இல்லாவிடினும் சிறிய இடத்திலும் தொட்டிகளில் அல்லது கோணிப்பை /உயர்த்தி கட்டிய மண் படுகைகளில் காரட் செடி வளர்க்கலாம்.
20 " ஆழம் அல்லது அதை விட ஆழமான தொட்டி அல்லது சதுர /செவ்வக வடிவ கலனில்
முக்கால் பாகம் கம்போஸ்ட் உர மண் கலவையினால் நிரப்ப வேண்டும் .
கலப்பு உர மண் கலவை இலகுவாக நெகிழும் தன்மையுடன் இருக்கவேண்டும் .
சிறு கற்கள் போன்றவற்றை தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தனும் ..இல்லையென்றால் ..அறுவடை செய்யும்போது குறை வளர்ச்சி /பல வடிவங்களில் கோணல் மாணலான காரட்கள் கிடைக்கும் ..உதாரணம் கொல்லாஜில் கடைசி படம் ..கல் ஒன்று வேர் கீழ் நோக்கி வளர தடை செய்ததால் அதன் வடிவம் பாருங்கள் smile emoticon
தொட்டியில் நிரப்பிய கம்போஸ்ட் மீது சிறிதளவு காரட் விதைகளை பெரிய கண் சல்லடை மீது வைத்து தூவலாம் காரட் விதை மிக சிறியவை .விதைகளுக்கிடையில் இடைவெளி மிக அவசியம் .
இதற்க்கு ஒரு கைப்பிடி மணலுடன் விதைகளை கலந்தும் தூவலாம் .இது அதிகப்படியான நீர் தொட்டியில் தேங்காமலிருக்க உதவும்.
பிறகு விதைகள் மீது சிறிது கம்போஸ்டால் மூட வேண்டும் .
நீர் மிக மெதுவா தெளிப்பானால் தெளிக்கணும் .தொட்டி கீழ் செங்கல் வைக்க வேண்டும் நீர் தேங்காமல் எளிதில் வெளியேற இது உதவும்
காரட் செடி விதைகள் துளிர்க்க இரண்டு வாரங்களாகும் ..இடைவெளி இல்லாமல் முளைத்த சிறு நாற்று செடிகளை மெதுவா கத்திரித்து விடணும் .பிடுங்க கூடாது .
காலநிலை தட்ப வெப்பம் பொருத்து விளைச்சல் இருக்கும் .60இலிருந்து 75 நாட்களில் அறுவடை செய்யலாம் .
காரட் கீரையை வீணாக்காதீங்க வெஜிடபிள் சூப் செய்யும்போதும் ,காரட் பொரியலிலும் சேர்த்து சமைக்கலாம் .

போலி பிளாஸ்டிக் பொம்மைகள் !

போலி பிளாஸ்டிக் பொம்மைகள் !..குழந்தைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் .. தாலேட்ஸ் (Phthalates)நச்சு
டிஸ்னிகம்பெனி படம் ஒன்றை எடுக்கும்போதே சைடில் அந்த கதாபாத்திரங்கள் பொம்மை தயாராகும் .இது ஒரு வியாபார உத்தி..
ஸ்னோ ஒயிட் ,ரெட்ரைடிங் ஹுட் ,பீட்டர் பான் ,அலாடின் லிட்டில் மெர்மேயிட் என பொம்மைகள் ,அவற்றின் ஆக்ஸசரிஸ் எல்லாம் கிடைக்கும் ..அதுமட்டுமில்லை அந்த காரக்டர்ஸ் படம் பொறித்த பெட்ஷீட் தலையண உறை ,தட்டு கோப்பை பென்ஸில் என எல்லாமும் விற்பனைக்கு தயாராகும் .
நம்ம இந்திய டேஸ்ட்டுக்கு ஷாருக் ,ஐஸ் ,காஜோல் ,ஹ்ரித்திக் கூட வந்தாச்சி ..எல்லா பொம்மைகளும் 20 பவுண்ட் கிட்ட விலை வரும் ..இப்பொ சமீபதில் FROZEN என்ற படமும் அதில் வந்த LET IT GO பாட்டும் பிள்ளைங்க மத்தியில் வைரசாய் பரவி விட்டது .
ஒரு ஒரிஜினல் பொம்மையின் விலை 29-35 பிரித்தானிய பவுண்ட்கள் ...அதில் டிஸ்னி லோகோ இருக்கும் .எதை செய்தாவது தங்களது வியாபாரத்தை நிலைநாட்டும் சீனா விலை தரம் குறைந்த ஆபத்தான இரசாயனம் சேர்த்த பொம்மைகளை சந்தடி வாக்கில் டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் சந்தையில் இறக்கியது ..விற்றும் தீர்ந்தன ..திடீரென வியாபார தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் பல கிடங்குகளில் போலி பொம்மைகள் கண்டு பிடிக்கப்பட்டன ...அவற்றை பறிமுதல் செய்து விட்டார்கள் .
இந்த போலிகளில் புற்று நோய் உண்டாக்கும் ஆபத்தான பொருட்கள் உள்ளனவாம் . PHTHALATE /தலேட் ..தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் பிளாஸ்டிக் பொம்மை ,உபயோகபொருட்கள் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது.குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்கள் , ஸ்பூன்கள் அனைத்திலும் காணப்படும் முக்கியமான பிளாஸ்டிக் உட்பொருள் Bisphenol A (BPA) என்ற ஒன்று. உடலில் சுரக்கும் Estrogen Hormone என்ற மிக முக்கியமான சுரப்பியை போன்றே இதுவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. அதாவது மிமிக்ரி செய்யும் .(Estrogen Hormone என்ற சுரப்பிகள் எலும்பு வளர்ச்சி, இதய ஆரோக்கியம், பாலியல் வளர்ச்சி, கருத்தறிப்பது முதற்கொண்ட பல வேலைகளை நம் உடலில் செய்கின்றன.)BPA எனப்படும் பிளாஸ்டிக் உட்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் போன பின் உடலோடு கலந்து எங்கெல்லாம் Estrogen Hormone செயல்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிக்கலை உண்டாக்குகின்றது. இதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின்றன . மார்பகப் புற்றுநோய் ,ஆண்களில் prostate புற்றுநோய் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறை,மலட்டுத்தன்மை .பிள்ளைகளில் ADHD (Attention-Deficit Hyperactivity Disorder)..தோல் நோய்கள் ..ஒவ்வாமை ....இப்படி எத்தனையோ பக்க விளைவுகள் .
.குழந்தைகள் இயற்கையாவே பல் முளைக்கும் பருவத்தில் கையில் கிடைத்த பொருளை கடிப்பாங்க ..நச்சு தாலேட்ஸ் உமிழ் நீருடன் உடலில் கலக்கும் .சற்று பெரிய பிள்ளைகள் போலி பொம்மைகளுடன் விளையாடிட்டு தெரியாம வாயில் விரல வச்சாலும் நச்சு உடலுக்குள் போகும் .
ஐரோப்பிய ஒன்றியம் குழந்தைகளுக்கானபொம்மைகளில் தலேட் தடைசெய்துள்ளது .. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர்.
DBP (dibutyl phthalate)
DNOP (di-n-octyl phthalate)
DiNP (diisononyl phthalate)
DEP (diethyl phthalate)
BBzP (benzyl butyl phthalate)
DEHP (di 2-ethyl hexl phthalate)
DiDP (diisodecyl phthalate)
DnHP (di-n-hexyl phthalate)
DMP (dimethyl phthalate)
DnOP (di-n-octylphthalate)
Bisphenol A (BPA) is another plasticizer
இவை பொம்மை மற்றும் ப்ளாஸ்டிக் பொருள் பாக்கிங்கில் இருந்தால் தவிர்க்கவும் ..குழந்தைகளுடைய பயன்பாட்டு பொருட்களும் விளையாட்டுப் பொருட்களும் நச்சு ஆபத்தான இரசாயன கலப்பின்றி செய்யப்படவேண்டுமென்பது நியதி ஆனால், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை ஏற்றுமதிசெய்யும் சீனா போன்ற பெரும்பாலான பணம் மட்டும் பிரதானமாக கொண்ட நாடுகள், இந்தவிதியைக் கடை பிடிப்பதில்லை .
அழகுசாதன, விளையாட்டுப் பொருட் களின் மீது, ‘Phthalates free’ என்று அச்சிடவேண்டும் என்பதும் பொதுவிதி. அதைக்கூட செய்ய முடியாத அவை, தாலேட்ஸ் (Phthalates) இன் வேதிப்பொருள் பெயரையோ, அவற்றின் சுருக்க குறியீட்டையோ DBP (di-n-butyl phthalates), DEP(diethyl phthalates), DEHP, BzHP, DMP, என்று அச்சிடுகின்றனர் பூத கண்ணாடி கொண்டு பார்த்தாலும் . படித்தவர்களுக்கே புரியாத இப்பெயர்கள் சாமான்யருக்கு எப்படி தெரியும் ?
இந்தியாவில் விற்பனையாகும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களில் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்ப்படுத்தும் இரசாயன பொருட்கள் இருக்கக்கூடுமென சுற்று சூழல் பாதுகாப்பு குழு அறிக்கை தெரிவிக்கின்றது .இன்ன அளவு தாலெட் தான் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்க வேண்டுமென அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிளாஸ்டிக் ,PHTHALATE பயன்பாட்டுக்கு ஒரு வரைமுறை விகிதம் வைத்துள்ளன ..
The Centre for Science and Environment (CSE) குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளில் மேற்கொண்ட ஆய்வில் அதிக ஆபத்தான அளவுக்கும் அதிகமான தலேட் இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள் .. அவற்றில் பெரும்பாலான பொருட்கள் சீன ,தைவான் தாய்லாந்து மற்றும் இந்திய தயாரிப்புக்கள் ..இத்தகைய பொருட்களுக்கு இவ்வித பிணைப்பு கட்டுபாட்டு சட்டதிட்டங்களுமில்லை நம் நாட்டில் .இந்திய தயாரிப்புகளில் Funskool India Limited பொருட்களில் non – toxic என்று அச்சிடப்பட்ட பொம்மையினை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தாலேட் அளவு 162 மடங்கு அதிக அளவு இருந்த தாகக் கண்டறியப்பட்டுள்ளது. மூன்று முதல் பதினெட்டு மாதக்குழந்தைகளுக்கான அந்த பொம்மைகள், பெரும்பாதிப்பைத் தருவன என்று ஆய்வுமுடிவு தெரிவித்துள்ளது..சீனாவையோ தைவானையோ குறை சொல்லி பயனில்லை ..நாட்டு மக்களின் நலனை கவனிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை . எங்கள் நாட்டு தயாரிப்புக்களுக்கும் தரக்கட்டுப்பாடு தேவை. மலிவு இந்திய பொருட்களில் உள்ள DEHP , DBP போன்ற Phthalates குழந்தைகளின் நுரைஈரல் கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கின்றன என்று குழந்தைகள் நல மருத்துவர் கூறுகின்றார் .மேலும் அடித்தட்டு மக்கள் விலை மலிவு விளையாட்டு பொருட்களை உபயோகிக்கிறார்கள் அவற்றில் ஈயம்,காட்மியம் போன்றவை அதிகம் உள்ளன .
பெங்களூரில் இந்த மையத்தில் Child-friendly, simple wooden toys தயாரிக்கிறார்கள்
http://www.mayaorganic.com/mo/
பெற்றோர்களே ,குழந்தைகளுக்கு .இதுபோன்ற .பாதுகாப்பான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுங்கள் ..
---------------------------------------------------------------------------------------