சனி, 21 மார்ச், 2015

பூண்டுச் செடியை வளர்க்கும் எளிய வழிகள்


உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூண்டுச் செடியை வளர்க்கும் எளிய வழிகள்!!!
பண வீக்கம் அதிகரிக்கும் இந்த சூழலில் காய்கறிகளின் விலை வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. இதை சரிக்கட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை நாம் ஒரு வீட்டுத் தோட்டம் அமைத்து பயனடையலாம். சிறிது முயற்சி எடுத்தால் போதும் அதை மிகவும் சிறப்பாகவும், அழகாகவும் வளர்க்க பராமரிக்கச் செய்ய முடியும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் நாம் புதிய காய்கறிகளை இதன் மூலம் பெற முடியும். உங்களின் அக்கறை கொண்டு மிகவும் கவனமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள் நிச்சயம் சுவைக்காமல் போகாது. இப்போது புதிதாக காய்த்த காய்கறிகளை நாம் வாங்கி சமைக்க முடிவதில்லை. இத்தகைய முயற்சி நமது ஆரோக்கியத்தையும் பணத்தையும் சேமிக்கும் வண்ணம் அமைகின்றது.
வீட்டுத் தோட்டத்தில் பூண்டுச் செடியை வளர்க்கும் வழிகள்!!!
சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க சிறது முயற்சி தேவைபடுகின்றது. தற்போதைய நவீன கால சூழலில் பெரிய தோட்டத்தை அமைப்பது கடினம் தான். ஆனால் நிச்சயம் சில செடிகளை நடுவதற்கும் வைப்பதற்கும் வெளியில் இடம் இருக்கும். உங்கள் பால்கனியில் செடிகளை வளர்ப்பது அழகாகவும் மதிப்பூட்டுவதாகவும் அமையும். அதற்கு சில எளிய வழிகளை கொண்டு நாம் வீட்டுத் தோட்டங்களை அமைக்க முடியும்.
இதை அமைப்பதற்கு முன்னதாக நாம் செய்ய வேண்டிய வேண்டிய காரியங்கள் இரண்டு உள்ளன. முதலாவது அதற்கான இடத்தையும் மற்றும் இரண்டாவதாக எந்த வகை காய்களை பயிர் செய்ய வேண்டுமென்று தேர்ந்தெடுப்பது தான். வளர்க்க முனையும் காய்களில் பூண்டும் ஒரு சிறந்த காய்களில் ஒன்றாகும். உங்கள் சமையலில் பெருமளவில் நாம் எப்போதும் இதை பயன்படுத்துவோம். ஆகையால் இதை முயற்சி செய்யுங்கள். பூண்டு வளர்ப்பது எப்படி என்று ஒரு சில குறிப்புக்களை இங்கு நாம் பார்ப்போம்.
பூண்டை பயிரிடும் காலம்
சமையல் அறை தோட்டத்தில் நாம் பூண்டை பயிரிட திட்டமிடடும் போது, எந்த பருவத்தில் பயிரிட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். எப்படியாயினும், குளிர் காலம் பூண்டு வளர்ப்பிற்கு சிறந்த பருவம் அல்ல. குளிர் காலம் வர ஒரு சில மாதங்களுக்கு முன்பே, நிலம் வறண்ட நிலையில் இருக்கும் போது அதை பயிரிடுவது சிறந்தது. வசதியற்ற பருவ காலத்தில் பூண்டு வளர்க்கும் போது நமக்கு நல்ல பலன் கிடைக்காது.
வேர் பிடிக்கச் செய்தல்
பூண்டை குளிர் காலம் தொடங்கும் முன்னர் விதைத்து விட்டால், அது குளிருக்கு முன்னரே வேர் பிடித்து விடும். பூண்டு வளர்ப்பு ஒரு சில எளிய வழிகளில் மிகவும் சுலபமாக செய்யும் காரியமாகும். முதலில் இதற்காக நிலத்தை பண்படுத்த வேண்டும். நிலம் குளிரின் காரணமாக இறுகுவதற்கு முன் பூண்டை பயிரிடுங்கள். இதனால் அவை சீக்கிரம் வேர் பிடிக்கும். பச்சை இலைகள் குளிர் காலம் வரும் முன்னே தோன்றும். நல்ல வளமான மண்ணைத் தேர்ந்தெடுத்து பூண்டை பயிரிட வேண்டும்.
கவனமாக தேர்ந்தெடுங்கள்
பயிரிடுவதற்கு முன் உங்களுக்கு தேவையான பூண்டு வகையை கவனமாக தேர்ந்தெடுங்கள். இவற்றில் வன் கழுத்து பூண்டு மற்றும் மென் கழுத்து பூண்டு ஆகியவைகள் அடங்கும். வன் கழுத்து பூண்டில் தலை பகுதி சுருண்டு காணப்படும். அதிக அளவு பற்களை மென்மையான கழுத்து பூண்டு வகையில் காண முடியும். பயிரிடும் போது பெரிய பெரிய பூண்டுகளை பயிரிடுங்கள். அப்போது தான் நமக்கும் பெரிய பூண்டு கிடைக்கும். பெரிய பற்களை பயிரிடவும் மற்றும் சிறிய பற்களை நமது சமையல் அறையிலும் பயன்படுத்தலாம்.
பயிரிடுதல்
பூண்டை பயிரிடும்போது மொட்டு மேல் நோக்கி இருப்பது போல் பயிரிடல் வேண்டும். இதை பயிரிட்ட பின் அதன் மேலுள்ள மண்ணை சீர்ப்படுத்துங்கள். இதுவே வீட்டுத் தோட்டத்தில் பூண்டு வளர்க்கும் முறையாகும். ஒரு வகைக்கு மேல் பூண்டுகளை பயிர் செய்தால் நீங்கள் அவற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்வது நல்லது.
அக்கறையுடன் பார்த்துக்கொள்ளுங்கள்
பயிரிடுவது மட்டுமல்லாமல் அதை நல்ல முறையில் நாம் கவனித்துக் கொள்ளவும் வேண்டும். நல்ல உரமிட்டு மற்றும் தண்ணீர் விட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். மீன் கழிவுகளை எடுத்து வைத்து அவற்றை உரமாக பயன்படுத்தலாம். இரண்டு நாளுக்கு ஒரு முறையாவது உரமிடல் வேண்டும். பூண்டிற்கு பெருமளவு நீர் தேவைப்படாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டியது அவசியம். மண்ணின் தன்மை ஈரப்பதத்துடன் இருப்பது நல்லது. அப்படியில்லாமல் வறண்டு காணப்பட்டால் தண்ணீர் பாய்ச்சுங்கள்.
அறுவடை
ஐந்திலிருந்து ஆறு இலைகள் வரும் வரை காத்திருங்கள். இவை முளைத்த பின் அறுவடைக்கு தயாராகிவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். வெயில் காலத்திற்கு முன் அல்லது குளிர்காலத்தில் அதை அறுவடை செய்யலாம்.

புதினாச்சாறு

புத்துணர்வும் பசி உணர்வும்
சூட்டுத்தன்மை தரும். எல்லாரும் தினமும் கொத்தமல்லி, கறிவேப்பிலை போல் இதையும் பயன்படுத்துகின்றனர். சமைக்காமல் சாறாகப் பயன்படுத்துகையில் நல்ல பலன்கள் பெறுகின்றனர்.
புதினாச்சாறு தரும்.
புதினாவில் உள்ள சத்துக்கள்:
நீர்=85%
மாவுப்பொருள்=6%
புரதம்=4%
கொழுப்பு=0.5%
தாது உப்புக்கள்=1.6%
கால்சியம்=0.2%
பாஸ்பரஸ்=0.08%
இரும்புத் தாது=15.6 யூனிட்
வைட்டமின் A=2700 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் புதினாச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும்.
உடல் தொப்பை, பருமன் குறைகிறது.
அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது.
சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.
தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது.
மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.
மருத்துவக் குணங்கள்:
வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும். மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.
உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். (புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்.
உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும். புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.
இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும். மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.
பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.
உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.
புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள் தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும். மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.
முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) புதினாக்கீரை மூலம் தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.

கற்றாழை மருத்துவக் குணங்கள்

கற்றாழை மருத்துவக் குணங்கள்:
கோடைகாலம் வந்துவிட்டாலே, எல்லோருக்கும் ஒருவிதப் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். எப்படித்தான் இந்த வெயிலை சமாளிக்க போகிறோமோ என்ற மன அழுத்தமும் ஏற்படும் இதற்கு இயற்கை கொடுத்திருக்கும் பல அரிய மூலிகைகளை துணையாகக் கொண்டோமானால் பயப்படத் தேவையில்லை.
வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம். சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடிய `கற்றாழை’ ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை மூலிகை என்பது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தரும்! வெயில் காலத்தில் வெப்ப சரீரமான பித்த உடம்பே அதிகம் பாதிக்கப்படுகிறது. வெயில் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கவும், உடல் வெப்பத்தைப் போக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. கற்றாழை என்றாலும், சோற்றுக் கற்றாழை என்றாலும் ஒன்றுதான்.
கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரி¢ச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
உடல் எப்போதும் கோழி வயிறுபோல சூடாக இருப்பவர்களும் தேகத்தில் தோல் எரிச்சலாக இருக்கிறது என உணர்கிறவர்களும் சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
இதனால் நல்ல உறக்கம், மனப் பதட்டம் குறைந்து அமைதியும் உடல் நலமும் கிடைக்கும். வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.
இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.

தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்

தும்பைப் பூவின் மருத்துவ குணங்கள்:-
இந்தக் குளிர் காலத்தில் பலரும் ஜலதோஷம், சளியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு அருமருந்தாகத் திகழக்கூடியது தும்பை. கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் தும்பை, எளிதாகக் கிடைக்கக்கூடியது.
பச்சைப் பசேல் நிறத்தில், கத்தி போல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். முழுத் தாவரமுமே மருத்துவக் குணம் கொண்டது என்றாலும், இலையும், பூக்களும் மருத்துவ குணம் அதிகமுள்ளவை. தும்பையின் சில மருத்துவ மகத்துவங்களைப் பார்க்கலாம்...
சளியைப் போக்க.....
உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும் தும்பை. சளி பிடிப்பதால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாறில் தேன் கலந்து அருந்தினால் சளித் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
ஜலதோஷம்.......
20 தும்பைப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப் பாரம், சிறுரோகம் சம்பந்தப்பட்ட அனைத்தும் தீரும்.
மலச்சிக்கல்...... மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் வேதிப் பொருட்கள் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா, கொத்தமல்லி கலந்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
வாயுத்தொல்லை.....
வாயுவை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லையில் இருந்து விடுபட தும்பை இலையின் சாறைத் தொடர்ந்து மூன்று நாட்கள்ந்தக் குளிர் காலத்தில் பலரும் ஜலதோஷம், சளியால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதற்கு அருமருந்தாகத் திகழக்கூடியது தும்பை.
கண்.....
கணினியில் வேலை செய்பவர்களின் கண்கள் விரைவாகச் சோர்வடையும். இதனால் கண்களில் ஒருவிதமான வலி ஏற்படும். அதைப் போக்கவும், கண்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளை அகற்றவும் தும்பை இலையின் சாறு சிறந்த மருந்தாகும்.
தொண்டைச் சதைவளர்ச்சி....
'டான்சில்ஸ்' எனப் படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மை இதற்கு உண்டு. தும்பையின் தளிர் இலைகளைப் பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப் பருப்பு கலந்து வேக வைத்து, பின்னர் புளிக் கரைசலை ஊற்றி சிறி துநேரம் கழித்து தாளித்துக் கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்படும்.
குழந்தைகளுக்கு........
தும்பைப் பூவின் சாறு 4 சொட்டு, உத்தாமணிச் சாறு 4 சொட்டு, மிளகுத்தூள் 3 கிராம் இந்த மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும்.
பெண்களுக்கு: வாயுப் பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிலக்கு தடைப்பட்டு தாமதமாகும். அவர்கள், தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு பசுவின் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மாதவிடாய் கோளா றுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது
சளி தொல்லை நீங்க:-
தும்பைப் பூவை பாலில் கொதிக்க வைத்து குடிக்கவும்.
குறட்டை குணமாக:-
50 மில்லி நல்லெண்ணெய்
50 எண்ணிக்கை தும்பை பூ
இரண்டையும் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி தினமும் 21 நாளைக்கு மூக்கில் 3 சொட்டு இட்டு வர குணமாகும்.மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி, காசக் கழலைகள், குடலில் ஏற்படும் கட்டி, வீக்கம் குணமாக:-
100 மில்லி தேன்
50 எண்ணிக்கை தும்பை பூ
50 நித்திய கல்யாணி பூ
இரண்டையும் தேனில் ஊர வைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டிவிதம் சாப்பிட குணமாகும்.
கருப்பை கட்டி கரைய:-
20 தும்பை பூ உடன்
5 கிராம் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.

வியாழன், 24 ஜூலை, 2014

மிகவும் பயனுள்ள பதிவரின் Blog

மிகவும் பயனுள்ள பதிவரின் Blog

http://maravalam.blogspot.in/search/label/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

வீட்டுத் தோட்டம் டிப்ஸ்


வீட்டுத் தோட்டம் டிப்ஸ் 
----------------------------------------------


தொங்கும் தோட்டம் முறை

இடப்பற்றாக்குறை காரணமாக நமக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க முடிவதில்லை. ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது பழமொழி. அந்த வகையில் இப்போது அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது ‘தலைகீழ்’ (Topsy Turvy) வளர்ப்பு முறை. பொதுவாக ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளி வளர்ப்பதை இந்த முறையில் சிறப்பாக வளர்த்து வருகின்றனர்.

நாற்றுகளை அதற்கென வடிவமைக்கப்பட்ட பைகளில் தலைகீழாக - அதாவது, வேர்களை மேலும் தண்டுப்பகுதியை கீழ் நோக்கி இருக்குமாறு நட்டு, அதனை தொங்கவிட்டு அறுவடை செய்கின்றனர். நாமும் இந்த முறையில் குறைந்த செலவில் கிடைக்கின்ற பொருட்களைக் கொண்டே வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது...

தொட்டியின் எடை அதிகரிக்காமலிருக்க சிறுசிறு குச்சிகள், காய்ந்த இலைகள், தென்னைநார் கழிவு, மண்புழு உரம், மிகமிக குறைந்த அளவில் மண் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும்.

பழைய பெயின்ட் வாளியில் பக்கவாட்டில் துளையிட்டு நாற்றுகளை உட்செலுத்தி குறிப்பாக தக்காளி, மிளகாய், பாலக் கீரை, புதினா போன்றவற்றை இந்த முறையில் எளிதாக வளர்க்கலாம். தொங்கும் முறையில் வளர்ப்பதால் வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து செடிகள் காப்பாற்றப்படும். பார்வைக்கு மேலிருப்பதால் இலைகளின் கீழ் முட்டையிடும் பூச்சி களையும் எளிதாக கண்டுகொள்ள முடியும்.

அழகுத் தாவரங்களை இந்த முறையில் வளர்ப்பதால் இடப் பற்றாக்குறையை சமாளிப்பதோடு வீட்டின் தோற்றத்தையும் கலைநயத்துடன் மாற்றலாம்! -

வீட்டுத் தோட்டம் குறித்து மேலும் தெரிந்து கொள்ள 

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் வாழ்க்கைச்சுழற்சி

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் வாழ்க்கைச்சுழற்சி  

இறுதியில் நமது உணவு மேசைக்கே வருகின்றது 
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் .தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தினாலும் முறையாய் 
மீள் சுழற்சி செய்ய முயலுங்கள் .